Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணாமலை சொன்னால் தேர்தலில் போட்டியிட தயார்.. பாஜகவில் சேர்ந்த பிரபல ரவுடி சூர்யா பரபர பேட்டி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 200க்கும் மேல் குற்ற வழக்குகள் பின்னணி கொண்ட பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யா பாஜகவில் இணைந்துள்ளார். தான் பட்டியலின அணியின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அண்ணாமலை சொன்னால் தேர்தலில் போட்டியிட தயார் என்றும் ரவுடி சூர்யா கூறியுள்ளார்.

200க்கும் மேல் குற்ற வழக்குகள் கொண்ட பிரபல ரவுடியாக இருப்பவர் நெடுங்குன்றத்தை சேர்ந்த ஆர்.கே.சூர்யா. இவர் அண்மையில் பாஜக கட்சியில் இணைத்துள்ளதாகவும், அக்கட்சியில் பட்டியலின அணியின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Notorious rowdy Nedungundram Surya says that he is ready to contest in election if Annamalai says

இவரது மனைவியும் பாஜக மாவட்ட மகளிரணி தலைவியுமான விஜயலட்சுமி 2021ஆம் ஆண்டு நெற்குன்றம் ஊராட்சி துணை தலைவராக பதவி ஏற்கும் போது கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சில ஆண்டுகளுக்கு முன்னர் குண்டர் சட்டத்தில் கைதாகி காலில் கட்டு போட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட ரவுடி சூர்யா தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டில் சென்னை வண்டலூரில் அப்போதைய பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் நடந்த கட்சிக் கூட்டத்தின்போது, பாஜகவில் சேர ரவுடி சூர்யா வந்திருந்தார். அப்போது ஆயுதங்களுடன் வந்த சூர்யாவின் கூட்டாளிகளை போலீசார் கைது செய்திருந்தனர். ஆனால், சூர்யா தப்பிவிட்டார். தமிழ்நாடு பாஜகவில் குற்றப் பின்னணி கொண்டவர்கள் சேர்ந்து வருவது விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட பாஜக தலைவர் செம்பாக்கம் வேதா சுப்ரமணியத்தை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் சூர்யா. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒருங்கிணைந்த மனிதநேய அம்பேத்கர் கூட்டமைப்பு தலைவவராக இருந்தேன். பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரின் செயல்பாடுகளால் ஈர்கப்பட்டு பாஜகவில் இணைந்துள்ளேன்.

என்னை மாநில பட்டியலின அணி தலைவர் தடா.பெரியசாமி மாநில செயலாளராக நியமனம் செய்துள்ளார். இதனால் சமுதாய பணியில் ஈடுபடவுள்ளேன். என் மீது தற்போது எந்த வாரண்ட்டும் இல்லை. ஏற்கனவே 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக அறிந்தேன். அதில் சில வழக்குகள் சட்டப்பட்டி முடிந்துள்ளது. மீதமுள்ள வழக்குகளையும் முறையாக சட்டப்படி அணுகுவேன். அதேபோல் என் பெயரை சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள், அவர்கள் மீது காவல் துறையினர் முறையாக நடவடிக்கை மேற்கொள்வார்கள் என நம்புகிறேன்.

என் மனைவி ஏற்கனவே பாஜகவில் உள்ளார். அவருக்கு பாஜக மாவட்ட மகளிர் அணி தலைவி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை நெருக்கடியால் நான் பாஜகவில் சேரவில்லை. அண்ணாமலையால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்து, இப்போது பொறுப்பு பெற்றுள்ளேன். அண்ணாமலை சொன்னால், தேர்தலிலும் போட்டியிடத் தயார்" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+