ஹாஸ்டல், பிஜி, மேன்ஷனில் தங்க போறீங்களா? அப்போ உங்களுக்குத்தான் இந்த செய்தி.. ஷாக் அறிவிப்பு
சென்னை: இந்தியாவில் பல்வேறு சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் முக்கியமான சேவை ஒன்றிற்கு ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டு உள்ளது.
ஜிஎஸ்டி வருவதற்கு முன்னர் 17 வரிகள் இருந்த நிலையில், ஜிஎஸ்டி இது அனைத்தையும் ஒருங்கிணைத்தது. இதனையடுத்து கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டது. ஆனால் ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக மாநில அரசுகள் விமர்சித்தன. இதனையடுத்து இந்த இழப்புகளை ஈடு செய்ய 5 ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

அப்படியாக வழங்கப்பட்டு வந்த தொகையும் உரிய காலத்தில் கிடைக்காததால் மாநில அரசுகள் மத்திய அரசை விமர்சித்து வந்தன. இந்நிலையில் இந்த இழப்பீட்டு தொகைக்கான கால அவகாசம் கடந்த வருடம் ஜூன் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. இந்த இழப்பீடு தொகை அதன்பின் நீட்டிக்கப்படவே இல்லை.
இந்த நிலையில் சமீபத்தில் ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்றது. ஜிஎஸ்டி தொடர்பாக ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும். மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள், நிதித்துறை அதிகாரிகள் கலந்து கொள்வார்கள்.
இதில் பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கு 28% வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புக்கொண்டது. அதன் ஒரு பகுதியாக மாணவர்கள் தங்கும் விடுதிகளில் கட்டணம் செலுத்தும் வாடகைக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஹாஸ்டலில் தங்குவோர்கள் இனி அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது இருப்பதை விட கூடுதலாக 1000 ரூபாய் வரை செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்த பிஜி, ஹாஸ்டல் போன்றவை வீடு வாடகைக்கு விடுவதை போல அல்ல. அவை கமர்ஷியல் தேவை என்பதால் அதை ஜிஎஸ்டி உள்ளே கொண்டு வந்துள்ளனர். இதன் அடிப்படையில் ஹோட்டல்கள் கட்டும் அதே ஜிஎஸ்டி ஆன 12 சதவிகிதத்தை இவர்களும் கட்ட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஹாஸ்டல்: இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாடு முழுக்க வேறு மாவட்டங்களில் தங்கி புரியும் பெண்களுக்காக விடுதிகளை தொடங்கி உள்ளது தமிழ்நாடு அரசு. தோழி, பணிபுரியும் மகளிர் விடுதிகள் என்ற பெயரில் இந்த விடுதிகள் திறக்கப்பட்டு உள்ளன. இது முன்னேறும் மகளிர்க்கான முகவரி என்ற வரிகளுடன் இந்த விடுதிகள் திறக்கப்பட்டு உள்ளன.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் இரண்டு முதல் 4 இடங்களில் இது போன்ற விடுதிகள் திறக்கப்பட்டு உள்ளன. • • • 24*7 பாதுகாப்பு வசதி
• பார்க்கிங் வசதி
• பயோ-மெட்ரிக்
• இலவச WI-FI
• பொழுதுபோக்கு அம்சங்கள்
• அயனிங் வசதி
• கெய்சர் வசதி
* சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வசதி ஆகியவற்றுடன் இந்த விடுதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கான மாவட்ட ரீதியான பட்டியலும் அரசு சார்பாக வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான உதவி எண்கள் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு உள்ளன.












Click it and Unblock the Notifications