இன்று முதல் நாடு முழுக்க உள்ள ரயில் நிலையங்களில் வரும் அட்டகாசமான வசதி.. இனி பிரச்சினையே இல்லை!
சென்னை: இன்று முதல் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளின் டிக்கெட்களை ஸ்டேஷனில் இருந்தபடியே ஆன்லைனில் எடுக்கும் வசதியை இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இந்தியன் ரயில்வே பயணிகள் வசதியை மேம்படுத்த பல்வேறு வசதிகளைத் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி வருகிறது. குறிப்பாக டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

இதற்கிடையே இன்று முதல் ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்க டிக்கெட் எடுக்க ஆன்லைன் மூலமே டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தும் புதிய வசதியை இந்தியன் ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்துகிறது.
யுபிஐ: 2016இல் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நீக்க அறிவிப்பிற்குப் பிறகு நமது நாட்டில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை என்பது அதிகமாகிவிட்டது. முன்பெல்லாம் ஒருவரது கணக்கில் இருந்து மற்றொருவர் கணக்கிற்குப் பணம் அனுப்ப சில மணி நேரம் வரை ஆகும். அதற்குத் தனியாக சர்வீஸ் கட்டணம் வேறு செலுத்த வேண்டும் என்ற சூழல் இருந்தது. ஆனால், இப்போது மொபைல் இருந்தாலே போதும் யுபிஐ மூலம் பணம் அனுப்பும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது.
அதென்ன “புஷ் புல்”.. ஏழைகளுக்காக ரெடியாகும் வந்தே பாரத் ரயில்! இனி குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம்
பெட்டிக் கடைகளில் கூட இப்போது யுபிஐ மூலம் பணத்தைப் பெறுகிறார்கள். கூகுள்பே, போன்பே டிஜிட்டல் என ஏகப்பட்ட செயலிகள் இந்த யுபிஐ மூலம் இயங்குவதாலும் இதற்கு சர்வீஸ் சார்ஜ் எதுவும் இல்லை என்பதாலும் பலரும் இந்த செயலியைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், ரயில் நிலையங்களில் இந்த யுபிஐ மூலம் பணம் செலுத்த வாய்ப்பு இல்லாமலேயே இருந்தது.
புது வசதி: இந்தியன் ரயில்வே பொறுத்தவரை முன்பதிவு டிக்கெட்டுகளை ஆன்லைனில் எடுக்கும் வசதி பல ஆண்டுகளாக இருக்கிறது. அதேபோல முன்பதிவு இல்லாத டிக்கெட்களை யுடிஎஸ் செயலி மூலம் ஆன்லைனில் எடுக்கலாம். ஆனால், முன்பதிவு இல்லாத டிக்கெட்களை கவுண்டரில் எடுத்தால் அங்கே யுபிஐ மூலம் பணம் அனுப்ப முடியாது. பணத்தை மட்டுமே கொடுத்து டிக்கெட் எடுக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
இதனால் சில்லறை பிரச்சினை தொடங்கி பல விஷயங்கள் இருந்தது. எனவே அங்கேயும் யுபிஐ வசதியை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்தது. இந்தச் சூழலில் தான் இன்று ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ரயில் நிலையங்களில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதியை இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தி இருக்கிறது.
அதாவது இனி நீங்கள் ரயில் நிலையங்களில் சென்று டிக்கெட் எடுத்தால் கண்டிப்பாக ரொக்கமாகப் பணம் தர வேண்டும் என்று அவசியம் இல்லை. யுபிஐ மூலம் மொபைலில் இருந்தே அனுப்பிவிடலாம். இதன் மூலம் பிரச்சினை இல்லாமல் மிக எளிதாக டிக்கெட் எடுக்கலாம்.
பொதுமக்கள் ரயில் நிலையங்களில் யுபிஐ வசதி வேண்டும் என்று நீண்ட காலமாகக் கோரிக்கை வைத்து வந்த நிலையில், ஒரு வழியாக அந்த வசதியை அறிமுப்படுத்திவிட்டார்கள் என்பதே சிறப்பு. இது அடிக்கடி வெளியூர் பயணிப்போருக்கு பெரியளவில் உதவும் என்பதில் சந்தேகம் இல்லை.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இனி UPI மூலம் நொடிகளில் PF பணம் எடுக்கலாம்! EPFO 3.0 அதிரடி அறிவிப்பு.. எப்படி பயன்படுத்துவது? -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை












Click it and Unblock the Notifications