மிகப்பெரிய கட்டுப்பாடு.. யுபிஐ மூலம் பணம் அனுப்புறீங்களா? வருது புதிய ரூல்.. இனிதான் கஷ்டமே
சென்னை: ஆன்லைன் பேமெண்ட் மேற்கொள்ள பயன்படும் யுபிஐயில் ஒரு சில நிறுவனங்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்துவதை தவிர்க்க புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வர என்பிசிஐ முடிவு செய்துள்ளது.
அதன்படி ஒவ்வொரு யுபிஐ செயலியில் இருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பணம் அனுப்பும் வசதியை கொண்டு வர முடிவு செய்துள்ளனர். அதாவது கூகுள் பே, போன் பே போன்றவற்றின் ஆதிக்கத்தை குறைத்து மற்ற செயலிகளை ஊக்குவிக்கும் விதமாக ஒரு செயலிக்கு இத்தனை பரிவர்த்தனை என்று கட்டுப்பாடுகளை கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.

இது போக அதிகரித்து வரும் ஆன்லைன் பேமெண்ட் மோசடிகளை தடுக்க, இரண்டு நபர்களுக்கு இடையே முதல் முறையாக நடக்கும் யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் அனுப்பும் பரிவர்த்தனைக்கு குறைந்தபட்ச நேரத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன்படி முதல்முறை நீங்கள் ஒரு கணக்கிற்கு 2,000 ரூபாய் அனுப்புகிறீர்கள் என்றால்.. அதன்பின் மீண்டும் அவர்களுக்கு பணம் அனுப்ப 4 மணி நேரம் காத்திருக்க வேண்டும்.
என்னென்ன கட்டுப்பாடு; அதாவது நீங்கள் நேரடியாக ஒரு நபருக்கு 2000 ரூபாய்க்கு மேல் முதல் முறையாக அனுப்பிவிட முடியாது. அதே சமயம் இது தனிப்பட்ட வங்கி கணக்குகளுக்கு மட்டும் பொருந்தும். பிஸ்னஸ் கணக்குகளுக்கு பொருந்தாது . அதாவது கடைகளில் நீங்கள் 10 ஆயிரம் ரூபாய்க்கு பொருள் வாங்கினால் அந்த 10 ஆயிரம் ரூபாய்க்கு அப்படியே யுபிஐ மூலமே பணம் செலுத்தலாம்.
ஆனால் அதுவே உங்களின் புதிய நண்பர் ஒருவர் உங்களிடம் 3000 கேட்டார் என்றால் முதலில் 2000 அனுப்ப முடியும். 4 மணி நேரம் கழித்தே மீதம் உள்ள தொகையை அனுப்ப முடியும். உங்கள் கணக்கில் இருந்து மோசடியாளார்கள் பணம் திருடுவதை தடுக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
சிக்கல் என்ன: இந்த செயல்முறை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் சில சிக்கலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இணையப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். இந்த புதிய விதி இறுதி செய்யப்பட்டால், உடனடி கட்டணச் சேவை (IMPS), ரியல் டைம் கிராஸ் செட்டில்மென்ட் (RTGS) மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டண இடைமுகம் (UPI) ஆகியவற்றின் மூலம் பாதுகாப்பான டிஜிட்டல் பேமெண்ட்டுகளை எளிதாக செய்ய முடியும்.
இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யுபிஐ கட்டணம்: இப்போதெல்லாம் நாடு முழுக்க ஆன்லைன் வர்த்தகம் அதிகம் ஆகிவிட்டது. முக்கியமாக கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற யுபிஐ சாதனங்கள் மூலம் பணம் செலுத்துவது அதிகம் ஆகிவிட்டது. சாதாரணமாக டீ குடிப்பது தொடங்கி வீட்டு வாடகைக்கு, மின்சார பில் கட்டுவது வரை பல விஷயங்களுக்கு மக்கள் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறையை பின்பற்றுகிறார்கள்.
இதன் காரணமாக நேர விரயம் குறைகிறது. ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏடிஎம் சார்ஜ் இல்லை. அதோடு உடனடியாக பணம் செலுத்த முடிகிறது. கையில் எப்போதும் பணத்தோடு இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் யுபிஐ பேமெண்ட் மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கம் ஆகிவிட்டது.
எங்கும் யுபிஐ; அனைத்து விதமான சேவைகளுக்கும் தற்போது யுபிஐ பயன்பாடு வந்துவிட்டது. பெரிய பெரிய நிறுவனங்கள் தொடங்கி சாதாரண சாலையோர கடைகளுக்கு கூட யுபிஐ வந்துவிட்டது. அதேபோல் பெரிய பெரிய அரசு நிறுவனங்கள் கூட யுபிஐ பயன்பாட்டை தொடங்கிவிட்டன. இன்னொரு பக்கம் ஆன்லைன் பேமெண்ட் அனைத்தும் தற்போது யுபிஐ சேவையை வழங்குகின்றன. மக்களும் யுபிஐ பயன்பாட்டை வெகுவாக விரும்ப தொடங்கிவிட்டனர்.
கட்டணம் விதிப்பு: இந்த நிலையில் யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களாகவே வங்கிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதற்கு சிறிய அளவிலான சேவை வரிகளும் கூட விதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட அளவிலான பரிவர்த்தனைக்கு மேல் செய்கையில் வங்கியில் இருந்து அதற்கான பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த நிலையில்தான் தற்போது வணிக பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கப்பட்டு உள்ளது. யுபிஐ மூலம் பிபிஐ மோடில் வணிக பரிவர்த்தனைக்கு பணம் அனுப்பினால் கட்டணம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2000 ரூபாய்க்கு மேல் பிபிஐ முறையில் பணம் அனுப்பினால் இந்த கட்டணம் பொருந்தும்.
அதன்படி வணிக பரிவர்த்தனைக்கு ஒரு கடைக்காரர் ப்ரீபெய்டு முறையில்.. அதாவது வாலட் முறையில் பணம் செலுத்தினாலோ, ப்ரீபெய்டு கார்ட் முறையில் பணம் செலுத்தினாலோ அதற்காக 0.5 சதவிகிதம் முதல் 1.1 சதவிகிதம் வரை கட்டணம் வசூலிக்கப்படும். மக்கள் சிலர் இப்போது வாலட் மூலம் கட்டணம் செலுத்துகிறார்கள். இந்த வாலட் மூலம் செலுத்தப்படும் கட்டணங்களுக்கு அதிகபட்சம் 1.1 சதவிகிதம் வரை கட்டணம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. துறை ரீதியாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு இந்த கட்டணம் சதவிகிதம் மாறும். எரிபொருளுக்கு 0.5%, தொலைத்தொடர்பு, அஞ்சல், கல்வி, விவசாயம் 0.7%, பல்பொருள் அங்காடிக்கு 0.9%, Mutual Fund, அரசு, காப்பீடு, ரயில்வேக்கு 1% ஆக கட்டணம் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications