NPS vs EPF.. ஓ இரண்டிற்கும் இவ்வளவு வித்தியாசம் இருக்கா? அப்போ எதில் லாபம் அதிகம்? எதில் ரிஸ்க் கம்மி?
சென்னை: ஓய்வுக்காலத்தை இப்போது சீரிஸாக எடுத்துக் கொள்ளத் தொடங்கியுள்ள இந்தியர்கள், அது குறித்து தீவிரமாகத் திட்டமிடவும் தொடங்கியுள்ளனர். சரியான முறையில் பிளான் போட்டால் மட்டுமே ஓய்வுக் காலத்தை நிம்மதியாகக் கழிக்க முடியும் என்பதை உணர்ந்த இந்தியர்கள் அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். இதில் பலருக்கும் EPF மற்றும் NPS குறித்து சந்தேகம் ஏற்படும். அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்த காலத்தில் பெரும்பாலோனோருக்கு ஓய்வுக் காலத்தில் பென்சன் எல்லாம் கிடைக்காது. இதனால் ஓய்வுக் காலத்தைச் சரியான முறையில் திட்டமிடுவது அவசியமாகிறது. இந்தியர்கள் கடந்த காலங்களில் ஓய்வுக் காலம் குறித்து பெரிதாக யோசித்ததில்லை. ஆனால், இப்போது அது குறித்து தீவிரமாகவே திட்டமிடுகிறார்கள்.

இபிஎஃப் & என்பிஎஸ்
இதுபோல ஓய்வுக்கு பிளான் போடும்போது EPF எனப்படும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் NPS எனப்படும் தேசிய ஓய்வூதிய அமைப்பு ஆகியவை தான் பிரதான முதலீட்டுத் திட்டங்களாகத் தனித்துவமாக நிற்கின்றன. பொருளாதார பாதுகாப்புக்கான இந்த திட்டங்கள், எதிர்காலத்தை உறுதி செய்வதில் முக்கிய பங்காற்றுகின்றன. இரண்டுமே ஓய்வுக்குப் பிந்தைய நிதிப் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், அவற்றின் கட்டமைப்பு, வருமானம் மற்றும் வரிச் சலுகைகளில் அவை கணிசமாக வேறுபடுகின்றன. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
EPF என்றால் என்ன
EPF என்பது வட்டி விகிதங்களின் அடிப்படையில் உறுதியான வருமான திட்டமாகும். இது இந்தியாவில் கட்டாய திட்டமாகும். இதில் ஊழியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் என இரு தரப்பும் மாதாமாதம் குறிப்பிட்ட தொகையைப் பங்களிப்பாகத் தர வேண்டும். அதற்கான வட்டி சேர்ந்து கொண்டே போகும். ஓய்வு பெறும்போது அந்த பலன்களை நாம் பெறலாம்.
NPS என்றால் என்ன
அதேநேரம் NPS ஒரு சந்தை சார்ந்த முதலீட்டுத் திட்டமாகும். என்பிஎஸ் திட்டத்தில் மக்கள் தங்கள் ரிஸ்க் திறனுக்கு ஏற்ப (aggressive, moderate and cautious) முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம். 18 முதல் 70 வயதுக்குட்பட்ட அனைத்து இந்தியர்களும் என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இது பங்களிப்பு தொகை மற்றும் கால அளவில் அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. முதலீட்டாளர்கள் பங்கு மற்றும் கடன் பத்திர முதலீடுகளைத் தேர்வு செய்து, 8% முதல் 12% வரை வருமானத்தைப் பெறலாம்.
வரிச் சலுகை
வரிச் சலுகை என்று வரும்போது EPF திட்டத்திற்குப் போகும் பங்களிப்புகள், அதன் மீது ஈட்டப்படும் வட்டி மற்றும் முதிர்வுத் தொகை ஆகிய அனைத்தும் முற்றிலும் வரி விலக்கு பெற்றவை. அதாவது EEE (Exempt-Exempt-Exempt) என்ற வரி அந்தஸ்தைப் பெறுகிறது. NPSல் இந்தளவுக்கு வரிச் சலுகை இல்லை என்றாலும் கணிசமான வரிச் சலுகை அதிலும் இருக்கவே செய்கிறது. பிரிவு 80C-ன் கீழ் உள்ள ரூ.1.5 லட்சம் வரம்பைத் தாண்டி, பிரிவு 80CCD(1B)-ன் கீழ் கூடுதலாக ரூ.50,000 வரை வரி டிடக்ஷன் கோரலாம். அதேநேரம் இந்த கூடுதல் வரி டிடக்ஷன் என்பிஎஸ் Tier Iக்கு மட்டுமே பொருந்தும். Tier Iக்கு வரிச்சலுகை எதுவும் இல்லை.
ஓய்வுபெறும்போது இபிஎஃப் தொகையை நாம் முழுமையாக எடுத்துக் கொள்ளலாம். அதேநேரம் என்பிஎஸ்-ல் மொத்தத் தொகையில் குறைந்தபட்சம் 40% ஓய்வூதியத் திட்டமான Annuityயில் போட வேண்டும். அதற்குத் தனி வரி இருக்கிறது. மீதமுள்ள 60% தொகையை வரி இல்லாமல் நாம் எடுத்துக் கொள்ளலாம்.
எது பெஸ்ட்!
இரண்டில் எது சிறந்தது என்றால், அது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் தொடர்பானது. ஆனால், எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் என்பிஎஸ் மார்கெட்டுடன் தொடர்புடையது என்பதால் அதில் லாபம் நமக்கு அதிகமாகக் கிடைக்கலாம். அதேநேரம் அதில் ரிஸ்க்கும் அதிகம். EPF திட்டத்தில் லாபம் குறைவு என்றாலும் ரிஸ்க் இருக்காது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications