“SIR விண்ணப்பம் கால அவகாசம் நீட்டிப்பு.. திமுகவுக்கு கிடைத்த வெற்றி".. சொல்கிறார் என்.ஆர்.இளங்கோ
சென்னை: "SIR விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து தருவதற்கான காலக்கெடுவை டிசம்பர் 11 ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளதற்கு காரணம் திமுக; இது திமுகவுக்கு கிடைத்த வெற்றி" என திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ எம்.பி. தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான (SIR) கால அவகாசம் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் SIR படிவங்களை நிரப்பித் திரும்ப ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 4 ஆம் தேதியுடன் முடிவடையும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

குறுகிய கால அவகாசத்திற்குள் பணியை முடிப்பது சாத்தியமில்லை என தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்தப் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட ஊழியர்களில் சிலர், மன அழுத்தம் மற்றும் நெருக்கடி காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
தற்போது இந்தக் கால அவகாசம் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டு, டிசம்பர் 11ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை வாக்காளர்கள் டிசம்பர் 11 வரை திருப்பி ஒப்படைக்கலாம். தமிழக அரசு மற்றும் கேரளாவின் எதிர்ப்பை அடுத்து, தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திமுக எம்.பி என்.ஆர். இளங்கோ, "SIR பணிகளை தொடங்கியது முதலே திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. திமுகவின் எதிர்ப்புகளில் முதன்மையானது, SIR மேற்கொள்வதற்கான காலக்கெடு நடைமுறைக்கு ஒவ்வாததாக இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். திமுக வழக்கும் தொடர்ந்தது. திமுக கூட்டணி கட்சிகள் அறப் போராட்டங்களை நடத்தின.
தற்போது, வாக்காளர்கள் SIR விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து தருவதற்கான காலக்கெடுவை டிசம்பர் 11 ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளதற்கு காரணம் திமுக. இது திமுகவின் ஜனநாயகப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி.
SIR பணிகள் தொடர்ந்தும் சிக்கல்கள் நிறைந்தே உள்ளன. இந்த சிக்கல்களை தேர்தல் ஆணையம் தீர்க்கவில்லை. SIR- விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் எதனையும் தெளிவாக, வெளிப்படையாக கூறுவதும் இல்லை. வாக்காளர்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க திமுக மட்டுமே பணியாற்றி வருகிறது.
தமிழகத்தில் 50% வாக்காளர்களுக்கு SIR படிவங்களை நிரப்புவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. பீகார் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்கள் தமிழ்நாட்டிலும் SIR விண்ணப்பத்தை தருகின்றனர். இந்த விண்ணப்பங்களைத் தரும் போது ஆவணங்கள் கொடுக்கப்பட வேண்டுமா? இல்லையா? என்பதில் குழப்பம் இருக்கிறது. இதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் தரவில்லை." எனத் தெரிவித்துள்ளார்.
-
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
2 சீட்டு தானே என்று ஏளனம் செய்தார்கள்.. 24 மணி நேரத்தில் வலிமை தெரிந்திருக்கும்.. திருமாவளவன் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications