வேட்புமனு தாக்கலன்று "விடுதலை புலி" பிரபாகரன் மீது உறுதிமொழி எடுத்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகங்கை, நெல்லை, நாகை, காஞ்சிபுரம் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் எழிலரசி, சத்யா ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மீது உறுதிமொழி எடுத்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, பாஜக, திமுக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது.

NTK candidates took promise on Prabhakaran

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி முதல் தொடங்கியது. இன்றைய தினம் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. நாளை வேட்புமனுக்கள் மீது பரிசீலனை செய்யப்படும். மார்ச் 30 ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெறலாம்.

இந்த நிலையில் நேற்றைய தினம் வரை லோக்சபா தேர்தலுக்கு 737 பேர் வேட்புமனுக்களை பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் வேட்புமனுதாக்கலின் போது வேட்பாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை வாசித்து காட்ட வேண்டும்.

அதில் விருதுநகர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கவுசிக்கிற்கு தமிழ் படிக்க தெரியாததால் தேர்தல் நடத்தும் அலுவலர் படிக்க அதை அப்படியே கவுசிக் வாசித்தார். அது போல் சிவகங்கை, நெல்லை, நாகை, காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இருவர் பிரபாகரன் மீது உறுதிமொழி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் சிவகங்கை தொகுதிக்கு வேட்புமனுக்கள் பெறப்பட்டன. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி, தேர்தல் நடத்தும் அலுவலர் ஆஷா அஜித்திடம் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அவர் உறுதிமொழி படிவத்தை வாசித்தார்.

அப்போது படிவத்தில் இடம்பெறாத வகையில் தமிழ் மீதும் பிரபாகரன் மீதும் என்ற வாசகங்களை சேர்த்து கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். எழிலரசிக்கு மாற்று வேட்பாளராக இந்துஜா வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த தொகுதிக்கு சுயேச்சையாக பழனியப்பன், அக்குபஞ்சர் மருத்துவர் செல்வராஜ், கலைச்செல்வன் என 5 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

அது போல் நெல்லை நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா, நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். வேட்புமனு தாக்கல் செய்த பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கார்த்திகேயன், வேட்பாளர் சத்யாவை உறுதி மொழி வாசிக்க சொன்னார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+