சீமான் பேச்ச கேட்டீங்களா.. அண்ணாமலைக்கு ஆதரவோ? ஜெயலலிதா இறந்ததாலேயே அவர் செய்தது புனிதம் ஆகாதாம்
சென்னை: ஒருவர் செய்த அனைத்து தீமைகளும் இறந்துவிட்டார் என்பதாலேயே புனிதமாகிவிடாது என்று, ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனியார் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளும் ஊழல் செய்து உள்ளன. தமிழ்நாட்டில் நடந்த அனைத்துமே ஊழல் ஆட்சிதான். மக்களின் பணத்தை வைத்து முறைகேடு செய்த அனைத்து கட்சிகளையும் நான் சொல்கிறேன்.

இது அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும். முன்னாள் முதலமைச்சரே ஊழல் செய்த காரணத்தால் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்." என்று பேசினார். ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கை சுட்டிக்காட்டியே அண்ணாமலை இவ்வாறு பேசியதாக அதிமுகவினர் அவரை கடுமையாக சாடி வருகிறார்கள்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலையை கடுமையாக கண்டித்து விமர்சித்து இருந்தார். அண்ணாமலைக்கு தலைவராக இருக்க தகுதி இல்லை என்றும், கூட்டணி தர்மத்துக்கு எதிராக அவர் பேசுவதாகவும், பிற மாநிலங்களில் பாஜக ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து ஏன் பேசுவதில் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
அதேபோல் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வமும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். அண்ணாமலையை முதிர்ச்சியற்ற அரசியல்வாதி என்று கழுதையோடு ஒப்பிட்டு விமர்சித்து இருந்தார். முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், செல்லூர் ராஜு உள்ளிட்டோரும் இன்று அண்ணாமலையை கடுமையாக எச்சரித்து இருந்தனர்.
இந்த நிலையில் அண்ணாமலை பேச்சுக்கு எதிராக இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மூத்த நிர்வாகிகள் இன்று தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜனும் அதிமுகவினருக்கு பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டு உள்ளதுடன், இன்று செய்தியாளர் சந்திப்பையும் நடத்தினார்.
அண்ணாமலையும் தற்போது தனக்கு எதிரான விமர்சனங்களுக்கு விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். இந்த நிலையில் அண்ணாமலையின் பேச்சு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்து உள்ளார்.
அதில் செய்தியாளர் எழுப்பிய கேள்விகளையும், அதற்கு சீமான் அளித்த பதில்களையும் பார்ப்போம்.
செய்தியாளர்: நேற்று அண்ணாமலை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி தவறாக பேசியதாக அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சீமான்: தவறாக என்ன சொன்னார் சொல்லுங்கள்?
செய்தியாளர்: தவறான கருத்தை அவர் சொல்லி இருக்கிறார்.
சீமான்: தவறான கருத்து என்றால் என்னவென்று சொல்லுங்கள் எனக்கு?
செய்தியாளர்: ஊழல் குற்றவாளி என்பதைபோல் சொல்லி இருக்கிறார்.
சீமான்: எதற்காக சிறைக்கு போனார்?
செய்தியாளர்: நீதிமன்றம்தான் இறந்த பிறகு சொல்லவில்லையே?
சீமான்: சரி, சசிகலாவை எதற்கு உள்ளே வைத்தார்கள்?
செய்தியாளர்: அவர்கள் ஆட்சியில் இல்லை.
சீமான்: ஆட்சியில் இல்லாதவர்கள் மீதே நீங்கள் வழக்குபோட்டு உள்ளே 4 வருசம் வைத்தீர்களே. ஆட்சியில் இருந்திருந்தால் என்ன செய்து இருப்பீர்கள்? அதையே பேசிக்கொண்டு இருக்க வேண்டியது கிடையாது.
செய்தியாளர்: அப்படியென்றால் அவர் சொன்ன கருத்து சரிதான் என்கிறீர்களா?
சீமான்: எதுக்கு சிறைக்கு போனார்கள்? அதை சொல்லுங்கள்.
செய்தியாளர்: பழிவாங்கும் நடவடிக்கையில் போட்ட வழக்கு. வேறு மாநிலத்தில், கர்நாடகாவில் விசாரிக்கப்பட்ட வழக்கு.
சீமான்: ஒருவர் செய்த அனைத்து தீமைகளும் இறந்துவிட்டார் என்பதாலேயே புனிதமாகிவிடாது. அதைபோல் பேசிக்கொண்டு இருக்க வேண்டியது கிடையாது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications