இந்த நாடு என்ன அதானியோடதா? மஹுவா மொய்த்ராவின் பதவி நீக்கத்தால் கொதித்து எழுந்த சீமான்!
சென்னை: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா டிஸ்மிஸ் செய்யப்பட்டதற்கு எதிராக 'இந்தியா’ கூட்டணி கட்சிகள் கொந்தளித்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு எதிராக காட்டமான கேள்விகளை எழுப்பி சிம்ம சொப்பனமாக விளங்கி வந்தார். இதனிடையே அதானி குறித்து கேள்விகளை எழுப்ப தொழிலதிபர் ஹிரா நந்தானியிடம் அவர் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக பாஜக அளித்த புகாரின் பேரில் நாடாளுமன்ற நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி அறிக்கை சமர்பித்தது. அதன் அடிப்படையில் மஹுவா மொய்த்ரா மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நேற்று நீக்கப்பட்டார். இந்த நடவடிக்கைக்கு திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த மஹுவா மொய்த்ராவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து பாஜக அரசு பதவி நீக்கம் செய்திருப்பது அப்பட்டமான ஜனநாயக படுகொலையாகும். அவர் கேள்விகளை எதிர்கொள்ள முடியாத மோடி அரசு, பழிவாங்கும் நோக்குடன் முறையற்ற வகையில் அவரை பதவி நீக்கம் செய்து இந்திய அரசியலமைப்பையும், மக்களாட்சி மாண்பையும் கேலி கூத்தாக்கியுள்ளது.
ஏ!பாஜகவே! பஞ்சாப திராவிட உத்கல வங்கா.. ம்ஹூம்..மஹூவா மொய்த்ரா ஆவேசத்தை உன்னிப்பாக கவனித்த சோனியா!
தங்களது ஆட்சி அதிகாரத்திற்கு எதிராக யாரும் கேள்வி எழுப்பக்கூடாது என்ற பாஜகவின் இத்தகைய கொடும் மனப்பான்மை கோழைத்தனமானதாகும். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு, குடியுரிமை திருத்தச் சட்டம் என்று நாட்டு மக்கள் மீதான பாஜக அரசின் அடுத்தடுத்த அடக்குமுறைகளுக்கு எதிராக நாடாளுமன்றத்திற்குள் மக்களின் மனச்சான்றாக நின்று துணிச்சலாக ஓங்கி ஒலித்த ஒற்றைக்குரலையும் அதிகார கொடுங்கரம் கொண்டு நசுக்கியுள்ளனர் நாட்டை ஆளும் ஆட்சியாளர் பெருமக்கள்.
"சகோதரி மஹுவா மொய்த்ராவின் பதவி நீக்கம் அப்பட்டமான சனநாயகப் படுகொலை!"
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) December 9, 2023
திரிணாமுல் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அன்புச்சகோதரி மஹுவா மொய்த்ரா அவர்களை
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து பாஜக அரசு பதவி நீக்கம் செய்திருப்பது அப்பட்டமான சனநாயக படுகொலையாகும்.
நாடாளுமன்றத்தில்… pic.twitter.com/A9LcoK3wgw
மகுவா மொய்த்ரா எழுப்பிய ஏதாவது ஒரு கேள்விக்கு பிரதமர் மோடியிடமோ அல்லது அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களிடமோ, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களிடமோ பதில் இருந்துள்ளதா? மக்களவையில் அதானிக்கு எதிராக தொடர்ந்து கேள்வி எழுப்பினார் என்பதற்காக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றால் இந்த நாடும், அரசும் ஏழை, எளிய மக்களுக்கானதா? அல்லது அம்பானி, அதானிக்கானதா?
மஹுவா மொய்த்ரா யார் சொல்லி கேள்வி கேட்டார் என்று நீதி விசாரணை செய்தவர்கள், அவர் கேட்ட கேள்விகள் சரியா? தவறா? என்பதற்கு எந்த விசாரணையும் இதுவரை செய்யாதது ஏன்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கவிழ்ப்பது, எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவது, அடிபணியாத எதிர்க்கட்சியினரை வரிமான வரித் துறை, அமலாக்கத் துறைகளை ஏவி மிரட்டி அடிபணியச்செய்வது என்ற பாஜகவின் அதிகார கொடும்போக்கின் அடுத்த படிநிலையே தற்போது சகோதரி மஹுவா மொய்த்ராவின் சிறிதும் அறமற்ற பதவி நீக்கமாகும்.
அதிகாரம் நிலையானது என்ற மமதையுடன் 10 ஆண்டு காலமாக பாஜக அரசு மேற்கொண்டு வரும் இத்தகைய கொடுங்கோன்மை நடவடிக்கைகளுக்கு வருகின்ற மக்களவை தேர்தலில் நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று சீமான் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications