நடிகை பலாத்கார வழக்கு- நீதிமன்றத்தில் பதில் சொல்..அன்று சவால்..இன்று நீதிபதி மீதே பாயும் சீமான்!
சென்னை: நடிகை பலாத்கார வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் விமர்சனத்தை தெரிவித்துள்ளார். மேலும்,
நான்தான் நீதிமன்றத்தில் வழக்கு போட்டேன்.. இது ஒன்றுமில்லாத வழக்கு.. இதை அழிச்சுவிடுங்க என நான்தான் வழக்கு போட்டேன்.. அங்கிருந்த 'மகான்' ஒருவர், இல்லை.. இதை விசாரிக்க வேண்டும் என்கிறார். விசாரித்துவிட்டுதான் தீர்ப்பு எழுத வேண்டும்.. இது எல்லாம் நடந்திருக்கும் என தீர்ப்பு எழுதினால் விசாரணை எப்படி நடக்கும்? எனவும் சீமான் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: சும்மா அவ்வப்போது அவதூறாக அவ்வப்போது திமுக ஆட்சிக்கு வரும் போது வருது.. அம்மையார் ஜெயலலிதா 10 ஆண்டுகளாக.. அய்யா எடப்பாடி ஆட்சியில் இருந்த போது எல்லாம் ஏன் வரவில்லை?

இவங்க வரும்போது வருவாங்க.. குறிப்பாக தேர்தல் வரும்.. என்னை சமாளிக்க முடியலைன்னு அந்த அம்மாவை கூட்டிகிட்டு வந்து நிற்கிறது..பெரியார் வாங்கின அடியில..என்னை என்ன செய்வது என தெரியவில்லை.. என்னை எப்படி சமாளிப்பது என தெரியாமல் கூட்டிகிட்டு வந்து நிற்கிறாங்க..
நான்தான் நீதிமன்றத்தில் வழக்கு போட்டேன்.. இது ஒன்றுமில்லாத வழக்கு.. இதை அழிச்சுவிடுங்க என நான்தான் வழக்கு போட்டேன்.. அங்கிருந்த 'மகான்' ஒருவர், இல்லை.. இதை விசாரிக்க வேண்டும் என்கிறார். விசாரித்துவிட்டுதான் தீர்ப்பு எழுத வேண்டும்.. இது எல்லாம் நடந்திருக்கும் என தீர்ப்பு எழுதினால் விசாரணை எப்படி நடக்கும்? எந்த மாதிரி நாடு இது? எந்த மாதிரி சட்டங்கள்..எந்த மாதிரி மன்றங்கள்? எந்த மாதிரி நீதிகள்? என நீங்கதான் பார்க்கனும்.. விசாரிக்கனும்.. விசாரிச்சு அவங்க தரப்புல கொடுத்திருக்கிற புகார்களுக்கு குற்றச்சாட்டுகளுக்கு சான்று கேட்கனும்..இதை எல்லாம் சான்றுபடி நிரூபித்த பிறகுதான் இதில் குற்றம் நடந்திருக்கிறதா? இல்லையா என நீதிமன்றம் சொல்ல வேண்டும். இவ்வாறு சீமான் கூறியிருந்தார்.
அன்று நீதிமன்றத்துக்கு வா என சவால்விட்ட சீமான்
இன்று சென்னை உயர்நீதிமன்றத்தையும் விசாரணை நடத்த உத்தரவிட்ட நீதிபதியையும் விமர்சிக்கும் சீமான், கடந்த 2023-ம் ஆண்டு நடிகை உள்ளிட்டோரை நீதிமன்றத்துக்கு வா என சவால்விட்டு பேசியிருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், இனி என்கிட்ட பதில் கிடையாது... நீதிமன்றத்துல வந்து சொல்லுங்க.. முக்தார், தமிழா தமிழா பாண்டியன், யூ டூ ப்ரூட்டஸ் உருட்டஸ் எல்லாம் அங்க வந்து சொல்லட்டும்.. அங்க வா... எல்லாம் வா! அங்க வந்து சொல்லு! நீதிபதிகிட்ட சொல்லு... சான்று காட்டனும்.. கேவலப்படுத்திகிட்டே இருந்தா.. ஒரு அளவு இருக்கு இல்லையா? உண்மையை சொல்லனும்ல.. உண்மையை சொல்லுங்க தம்பி என ஆவேசப்பட்டிருந்தார். ஆனால் தற்போது நீதிமன்றத்தை விமர்சிக்கிறார் சீமான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications