Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இந்த சீமான் தான் செழியன்!" 'பராசக்தி' படத்தைப் பார்த்த பிறகு நாம் தமிழர் சீமான் பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மொழிப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான பராசக்தி படத்தை நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்த்தார். படத்தை வெகுவாகப் பாராட்டிய சீமான், படத்தில் தமிழ் வாழ்க எனச் சத்தம் கேட்பதே நிறைவைத் தருவதாகக் குறிப்பிட்டார். மேலும், சிவகார்த்திகேயன் நடித்துள்ள செழியன் கதாபாத்திரமே நான் தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான பராசக்தி திரைப்படம் கடந்த 10ம் தேதி வெளியானது. இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் நடந்த மொழிப் போராட்டத்தை அடிப்படையாக உருவாகியுள்ள இப்படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

NTK Chief Seeman Praises Parasakthi and says Sivakarthikeyan s Chezhiyan character portrays him

சீமான்

இதற்கிடையே இந்தப் படத்தை நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பார்த்தார். படத்தைப் பார்த்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், மிகச் சிறப்பான படைப்பாக பராசக்தி வந்துள்ளதாகக் குறிப்பிட்டார். இது மொழிப் போராட்டத்தின் உண்மையான வரலாறு இல்லை என்றாலும் கூட மொழி உணர்வைக் காட்டும் படமாக இது உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதைப் படமாக மட்டுமே பார்க்க வேண்டும். இது நமது மொழிப் போராட்டத்திற்கான வரலாற்று ஆவணம் எல்லாம் இல்லை. மொழிப் போராட்ட உணர்வை மட்டும் எடுத்துக் கொண்டு, இவர்கள் தனியாக படத்தைச் செய்துள்ளனர். இந்தப் படத்தில் காதல், அண்ணன் தம்பி உறவு ஆகியவை உள்ளது.. நமது மொழிப் போராட்டத்தில் அதெல்லாம் இல்லை. படத்திலேயே எடுத்தவுடன் கற்பனை எனச் சொல்லிவிடுகிறார்கள்.

ஏற்க முடியாது

ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் மொழி என்பதே முகம், முகவரி மற்றும் அடையாளம். மேலும், இந்தியா என்பது பன்முகத்தன்மை கொண்டது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் சிறப்பு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மொழி முக்கியம்.. அப்படியிருக்கும்போது ஒரே மொழியை அனைவரும் கற்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது. அந்த உணர்வின் அடிப்படையிலேயே மொழிப் போராட்டம் வெடித்தது. அதைத் தான் இந்தப் படமும் பிரதிபலித்தது. தமிழ் திரைப்படத்தில் தமிழ் வாழ்க என்று ஒரு சத்தம் கேட்பது நிறைவைத் தருகிறது. சிவகார்த்திகேயன் "தமிழ் வாழ்க" என்று கடைசியில் கத்துவது நானே கத்துவது போலத் தான் இருந்தது.

மொத்தத்தில் இந்தப் படம் சொல்ல வருவது ஒன்றைத் தான்.. ஒவ்வொரு மொழி வழி தேசிய இனங்களுக்கும் அவர்கள் மொழி முக்கியம்.. விரும்பினால் எந்த மொழியும் கற்போம். தேவை என்றால் நிச்சயம் வேறு மொழிகளை கற்போம்.. ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள அதிகபட்சமாக ஆறு மாதம் ஏழு மாதம் ஆகும். தேவை ஏற்படும்போது அதை கற்கத் தானே போகிறோம். அதை விட்டுவிட்டு ஒரு மொழியைக் கட்டாயம் படிக்க வேண்டும் எனச் சொல்வதை ஏற்க முடியாது. அது சரியாகவும் இருக்காது.

மொழிகளை மதிக்க வேண்டும்

அனைத்து மொழிகளை மதிக்க வேண்டும். வலுக்கட்டாயமாக இந்தி திணிப்பைச் செய்யக்கூடாது என்பதற்குக் கேரளா, வங்காளம் என அனைத்து மாநிலங்களிலும் இருந்து எதிர்ப்பு இருந்ததாகவே இந்தப் படம் சொல்கிறது. ஆனால், இளைஞர்கள் இது தான் மொழிப் போராட்ட வரலாறு என நினைத்துவிடக்கூடாது. அது தனியாக இருக்கிறது. உண்மை வரலாற்றைப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மொழிப் போராட்ட உணர்வை எடுத்துக்கொண்டு திரைக்கதையைக் கற்பனையாக உருவாக்கியுள்ளனர்.. படத்தில் என்னுடைய தம்பி சிவகார்த்திகேயன் பங்களிப்பு, எதிர் நாயகனாக நடித்துள்ள ரவி மோகன், தம்பி அதர்வா பங்களிப்பு என அனைவரும் சிறப்பாகப் பங்களித்துள்ளனர். பின்னணி இசையும் மிகச் சிறப்பாக இருந்துள்ளது. மொத்தத்தில் பராசக்தி படமாக ஒரு நல்ல படம். மொழிப் போரை அப்படியே காட்டவில்லை.. அதேநேரம் மொழி உணர்வைச் சிதைக்கவில்லை" என்றார்.

செழியனே நான்தான்

அப்போது செழியன் கதாபாத்திரம் உண்மையாக இருக்குமா? என்ற கேள்வி எழுப்பினார். அதற்கு நொடியும் யோசிக்காமல் அவர், "சீமான் தான் அந்த செழியன். அந்த கதாபாத்திரத்திற்குப் பெயர் செழியன் என வைத்துவிட்டார்களே தவிர நான்தான் செழியன்" என்று அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+