பெரியார் கையெழுத்து எப்படி போடுவார் தெரியுமா? சீனுக்குள் வந்த சீமான்.. விஜய்க்கும் பதிலடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தலைவர் விஜய் பெரியார் குறித்தும் எதுவும் தெரியாமல் பேசுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். பெரியாரே முன்னதாக ராமசாமி நாயக்கர் என்று தான் கையெழுத்து போடுவார் என்று கூறிய சீமான், விஜயின் அரசியல் வருகையால் தனது வாக்குகள் சிதறாது என்றும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வு வினாத்தாளில் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவிட்டவர் யார் என்ற கேள்வி இடம்பெற்றிருந்தது. அந்த கேள்விக்கு கொடுக்கப்பட்ட பதில்களில் பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்று சாதிய அடையாளம் இடம்பெற்றிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

NTK Chief Seeman Slams TVK Leader Vijay Over Periyar Remarks in the Education Event

விஜய் கண்டனம்

வாழ்வின் கடைசி வரை சாதிக்கு எதிராக போராடியவரை சாதிய அடையாளத்துடன் குறிப்பிடுவதா என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய், கல்வி விருது விழாவில் கண்டனம் தெரிவித்தார். தந்தை பெரியாருக்கே சாதிய சாயம் பூச முயற்சிக்கிறார்கள். இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என்று தெரிவித்தார்.

சீமான் பதிலடி

விஜய்-யின் இந்த கண்டனத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசுகையில், பெரியார் பற்றி தம்பி விஜய் தெரியாமல் பேசுகிறார். அவரே முன்னர் ராமசாமி நாயக்கர் என்றுதான் கையெழுத்து போடுவார். முகமது அலி ஜின்னாவுக்கு எழுதிய கடிதத்தில் கூட ராமசாமி நாயக்கர் என்றே கையெழுத்து போட்டிருப்பார்.

பெரியார் படம்

இவ்வளவு ஏன், தமிழ்நாட்டில் பெரியார் என்று வெளியான திரைப்படம், ஆந்திராவில் ராமசாமி நாயக்கர் என பெயரிட்டு தான் வெளியிட்டார்கள். இதை தெரிந்து விஜய் பேச வேண்டும். அதேபோல் விஜய் வருகையால் நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் சிதறாது. என் தத்துவத்திற்கு உலகத்தில் யாருமே போட்டி கிடையாது. விஜயை எதிர்த்து போட்டியிடுவதற்காக நான் கட்சி நடத்தவில்லை.

விஜய் vs சீமான்

எனது வாக்குகளை யாராலும் பிரிக்க முடியாது. எனக்கு நிகராக ஒரு தலைவன் கூட உலகில் கிடையாது. நான் தனியாகவே இருந்துவிட்டு போகிறேன் என்று தெரிவித்துள்ளார். விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்த உடன், அவரை முதலில் வரவேற்றது சீமான் தான். ஆனால் பெரியாரை கொள்கை தலைவராக அறிவித்த பின், அவர் விஜயை அட்டாக் செய்ய தொடங்கினார்.

சீமான் செயல்பாடு

இதன்பின் பெரியாரை கடுமையாக எதிர்த்து வரும் சீமான், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது அதிகமாகவே விமர்சித்து திமுகவினர் உடன் கருத்து மோதலில் ஈடுபட்டார். இந்த நிலையில் பெரியார் தொடர்பான விஜயின் கருத்துக்கும் சீமான் பதிலடி கொடுத்துள்ளார். இதனால் சோசியல் மீடியாவில் நாம் தமிழர் மற்றும் தவெக இடையே கருத்து சண்டை ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+