5 மாநிலங்களில் இன்று சட்டசபை தேர்தல் முடிவுகள்.. கட்சிகள் எதிர்நோக்கும் அந்த "மேஜிக் நம்பர்" என்ன?
சென்னை: தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலச் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ள நிலையில், எந்த கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் வெற்றி பெரும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
Recommended Video
தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலச் சட்டசபை இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால் புதிய சட்டசபையை தேர்ந்தெடுக்கக் கடந்த மாதம் தேர்தல் நடத்தப்பட்டன.
தமிழகம், கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக எட்டு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற்றது.

கொரோனா கட்டுப்பாடுகள்
தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்படுகின்றன. கொரோனா பரவல் காரணமாக வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள், முகவர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. கொரோனா நெகடிவ் அல்லது தடுப்பூசி 2 டோஸ் எடுத்துக் கொண்டிருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதி அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேஜிக் நம்பர்
இன்றைய தேர்தல் முடிவுகளை அனைத்து கட்சிகளும் பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி ஆவலாகக் காத்திருக்கின்றன. மேஜிக் நம்பர் எனப்படும் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை அடைய வேண்டும் என்பதே அனைத்துக் கட்சிகளின் இலக்காக இருக்கும். ஐந்து மாநிலங்களிலும் கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. அனைத்து மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் தனித்தே ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு
அனைத்துக் கட்சிகளும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கும் அந்த மேஜிக் நம்பர் என்னவென்று பார்க்கலாம். தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதில் 118 இடங்களுக்கு மேல் பெரும் கட்சியே ஆட்சியை அமைக்கும். தமிழகத்தில் பல ஆண்டுகளாகவே திமுக, அதிமுக என இரு கட்சிகளும் தனித்தே ஆட்சி அமைத்துள்ளன. இந்த முறையும் அது தொடருமா அல்லது வரலாறு மாறிய கூட்டணி ஆட்சிக்கு வழி கொடுக்குமா என்பது இன்னும் சில மணி நேரத்தில் தெரிந்துவிடும்.

வங்கம் யாருக்கு
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மாநிலங்களில் மிகப் பெரியது மேற்கு வங்கம். மொத்தம் 294 சட்டசபை தொகுதிகளைக் கொண்டது மேற்கு வங்கம். அங்கு 148 இடங்களைத் தாண்டும் கட்சியே ஆட்சி அமைக்கும். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடந்த 2016இல் வெறும் மூன்று தொகுதிகளில் மட்டுமே வென்ற பாஜக, இந்த முறை திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கடும் சவாலாக உருவெடுத்துள்ளது.

கேரளா, அசாம், புதுவை
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா மொத்தம் 140 சட்டசபை தொகுதிகளைக் கொண்டது. 71 என்ற மேஜிக் நம்பரை நோக்கியே இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கூட்டணி களமிறங்கியுள்ளன. 126 தொகுதிகளைக் கொண்ட அசாமில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அசாம் மாநிலத்தில் ஆட்சியை அமைக்க ஒரு கட்சி 64 இடங்களைக் கைப்பற்ற வேண்டும். 30 தொகுதிகளைக் கொண்டு யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஆட்சியைப் பிடிக்க 17 இடங்கள் தேவை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications