முதுகில் குத்தும் துரோக கூட்டம்.. இறைவனின் தீர்ப்பே இறுதியானது! ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் ட்வீட்
சென்னை: நேர்மையான வழியை பின்பற்றுபவர்களுக்கு வெற்றியும் பின்னடைவும் சரிசமமே என ஓபிஎஸ் இளைய மகன் ஜெயபிரதீப் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக் குழு வழக்கின் தீர்ப்பு நேற்றைய தினம் வெளியானது. இந்த தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அதிமுக பொதுக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பு வெளியாகியுள்ளது.
அப்படியென்றால் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதும் செல்லும், அதைவிட முக்கியம், ஓபிஎஸ் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதும் செல்லும் என்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஸ் தரப்பின் மேல்முறையீட்டு மனு மீது நாளை விசாரணை நடக்கிறது.

ஓபிஎஸ் மகன்
இந்த நிலையில் தீர்ப்பு குறித்து ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நேர்மையான வழியை பின்பற்றுபவர்களுக்கு வெற்றியும் பின்னடைவும் சரிசமமே. கரங்களில் ஏந்தி இருக்கும் நீதிதராசு சரியாக இருக்கிறதா என்பதை அறிய நீதி தேவதை ஒருமுறை கண்ணைக் கட்டிய துணியை கழற்றி கண் திறந்து பார்த்து சரி செய்வது இந்திய இறையாண்மைக்கு நல்லது.

போர் படை தலைவன்
போர்படை தலைவனாக பொறுப்பேற்று எதிரியை எதிர்த்து, நெஞ்சை நிமிர்த்தி போரிடும் பொழுது, பின் நின்று முதுகில் குத்தும் துரோக கூட்டத்தை சிறிது கவனித்தும் தன் இனம் தானே என்று அமைதி காத்ததினால் சிறிது தடுமாற்றம் ஏற்பட்டாலும் தலைவன் எழுந்து நின்று திரும்பி பார்த்து துரோகிகளை எதிர்கொள்ளும் போது ஏற்படும் விளைவுகளை எதிர்காலம் அனைவருக்கும் உணர்த்தும்.

கழகத் தலைவர்கள்
எங்கள் கழக தலைவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் காலச்சக்கரத்தால் வழங்கப்படும் இறைவன் தீர்ப்பு வரும் வரை எங்களது லட்சிய பயணங்கள் தொடரும் என ஜெயபிரதீப் கூறியுள்ளார். இது போல் அவர் பல தருணங்களில் அதிமுகவில் நடக்கும் உள்கட்சி பிரச்சினைகள் குறித்து பேசியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட ஒரு பதிவில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்திருந்தார்.

காலை பிடித்து பதவி வாங்கி
அவர் தனது ட்வீட்டில் காலைப் பிடித்து பதவி வாங்கி,
பதவி வாங்கி பணத்தை சேர்த்து, சேர்த்த பணத்தால் கூட்டத்தை கூட்டி, கூட்டத்தை வைத்து பதவி பெற
நீதியை நிதியால் வளைத்து, பொய் சூழ்ச்சி வஞ்சகத்தோடு, ரத்தத்தின் ரத்தங்களை பகையாக்கி,
இரு பெரும் தலைவர்கள் உயிரைக் கொடுத்து வளர்த்த பேரியக்கத்தை அழித்துக் கொண்டிருக்கும் பதவிவெறி பிடித்த மனிதனே... தற்போது நாங்கள் என்ன சொன்னாலும் தங்களது அறிவுக்கு ஏறாது. உங்களை சூழ்ந்து இருக்கும் பதவியும் பணமும் உங்களை விட்டு நீங்கும்போது உண்மை தன்மை புரியவரும்; தான் செய்தது தவறு என்று தெரிய வரும். அத்தகைய காலத்தினால் வழங்கப்படும் இறைவனின் தீர்ப்புக்காக சோதனைகளோடு போராடி பொறுமையுடன் காத்துக் கொண்டிருக்கிறோம் என ஜெயபிரதீப் குறிப்பிட்டுள்ளார்.
-
“வீட்டுச் சிறையில் கருணாநிதி? அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரித்து தண்டனை கொடுப்போம்”- எடப்பாடி பேச்சு -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்? -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
சுந்தர்.சி-க்காக தேர்தல் பணியில் இறங்கிய மன்னன் டீம்! மதுரை மத்தியில் பலன் அளிக்குமா அதிமுக வியூகம்?












Click it and Unblock the Notifications