காட்டுபள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்தை அதிமுக அரசு அனுமதிக்காது.. ஓபிஎஸ் பரபர பேச்சு
சென்னை: அதானியின் காட்டுபள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய அஇஅதிமுக அரசு அனுமதிக்காது என பொன்னேரியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசியருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, எண்ணூரை அடுத்த காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டம் என்பது 82 கிராம மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும், 35 லட்சம் மக்களுக்கு வெள்ள அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் எனவே உடனடியாக கைவிட வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே குரலில் கோரிக்கை வைத்து வருகின்றன.
காட்டுப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதிமுக முதல் குரல்
இந்நிலையில் அதிமுக சார்பில்இதுவரை கருத்துக்கள் எதுவும் தெரிவிக்கப்படாமல் இருந்த நிலையில் முதல்முறையாக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார். அதுவும் காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாககத்தை அனுமதிக்க மாட்டோம் என்றே அறிவித்துள்ளார்.

பிரச்சாரம் தொடக்கம்
துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் நேற்று முதல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். முன்னதாக பிரச்சாரத்தைத தொடங்கும் முன்பு திருவெற்றியூரில் உள்ள தியாகராஜசுவாமிகள் கோவில் சாமி கும்பிட்டுவிட்டு பிரச்சாரத்தை தொடங்கினார்.

பிரச்சாரம்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அதிமுக வேட்பாளர் பலராமன் மற்றும் கும்மிடிப்பூண்டி பாமக வேட்பாளர் பிரகாஷ் ஆகியோரை ஆதரித்து அதிமுக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நேற்று மாலை பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசும் போது உடுக்க உடை, உண்ண உணவு, இருக்க இடை தரும் இதுவே நல்ல ஆட்சி. 2023க்குள் தமிழகம் முழுவதும கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

மாற்றி காட்டினார் ஜெயலலிதா
ஆணுக்கு பெண் நிகர் என்ற நிலையை பெரியாருக்கு பின் செய்தவர் ஜெயலலிதா. 2006ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் மைனாரிட்டி திமுக இருந்த போது தமிழகம் இருளில் இருந்து தத்தளித்தது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின் மின் தட்டுப்பாடு இருக்காது என்று உறுதி அளித்தார். சொன்னபடி தனது ஆட்சியில் மின் தட்டுப்படே இல்லாமல் மாற்றினார்.

கொரோனா தடுப்பு
இயற்கை சீற்றங்களில் நிவாரணம் தரும் ஆட்சி அதிமுக ஆட்சி. கொரோனாவை கட்டுப்படுத்திய மாநிலம் தமிழகம் என்று பிரதமரே பாராட்டினார். அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது. 10 ஆண்டுகளாக கறை சொல்ல முடியாத ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. 5 ஆண்டுகள் ஆண்ட கட்சியான மீண்டும் ஆட்சி செய்து வருகிறது. .3வது முறையாக அதிமுக ஆட்சி அமையும்.

அதிமுக அரசு அனுமதிக்காது
உள்ளூர் மக்கள் மற்றும் மீனவ சமுதாயத்தினரின் கோரிக்கையை ஏற்று சென்னை அடுத்த காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்க திட்டம் செயல்படுத்த அதிமுக அரசு அனுமதிக்காது என்று நான் உறுதியளிக்கிறேன். மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் அதிமுக அரசு தமிழகத்தில் செயல்படுத்தாது" என்றார்.












Click it and Unblock the Notifications