Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடி பழனிசாமி பதவி வெறிபிடித்தவர்! அதிமுகவில் சேர நான் அவரிடம் கேட்டேனா? கடுகடுத்த ஓபிஎஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி ஒரு சுயநலவாதி என்றும் அதிமுகவில் என்னை சேர்த்துக் கொள்ள நான் கேட்காத போது இவரே சேர்த்துக் கொள்ள மாட்டேன் என கூறுவது ஆணவத்தின் உச்சம் என தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக உரிமை மீட்பு குழுவின் தலைவருமான ஓ.பன்னீர் செல்வம் காட்டாமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

edappadi palanisamy o paneer selvam aiadmk

துரோகம், செய் நன்றி மறத்தல், வன்முறை ஆகியவற்றின் மொத்த உருவமாக திகழும் எடப்பாடி பழனிசாமி என்னை விசுவாசமற்றவன் என்று பேட்டியளித்திருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் உள்ளது.

விசுவாசி நான்தான்: அதிமுகவிற்கும் ஜெயலலிதாவிற்கும் எந்த அளவுக்கு விசுவாசமாக இருந்தேன் என்பதை ஜெயலலிதாவே பல சந்தர்ப்பங்களில் தெரிவித்திருக்கிறார்கள். எனது விசுவாச்திற்கு ஈடாக ராமாயணத்தில் வரும் பரதனை ஒப்பிட்டு பேசிய ஜெயலலிதாவின் பேச்சை தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். ஜெயலலிதாவே என்னுடைய விசுவாசத்தை இந்த நாட்டிற்கு பறைசாற்றிய நிலையில் அதை பற்றி பேச பத்துத் தோல்வி பழனிசாமிக்கு தகுதியில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலமைச்சர் பதவியை கொடுத்தவருக்கு துரோகம், பரிந்துரை செய்தவருக்கு துரோகம், 4 ஆண்டு ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தவருக்கு துரோகம், அதிமுக ஆட்சியை காப்பாற்றிக் கொடுத்தவருக்கு துரோகம் என்று பட்டியலிட்ட ஓபிஎஸ், சுயநலத்திற்காக பல துரோகங்களை செய்து கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி என்னுடைய விசுவாசத்தை பற்றிப் பேச அருகதையற்றவர்.

ஜெயலலிதா போடிநாயக்கனூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட போது அவருக்கு எதிராக போட்டியிட்ட வேட்பாளருக்கு தலைமை தேர்தல் முகவராக நான் செயல்பட்டேன் என எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்திருக்கிறார். இதற்கு நான் ஏற்கெனவே மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும் என கோயபெல்ஸ் வேலையை செய்கிறார் எடப்பாடி பழனிசாமி. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

அரசியலை விட்டே விலகத் தயார்: இதை ஆதாரத்துடன் நிரூபித்தால் நான் அரசியலை விட்டே விலகத் தயார் என்றும் தெரிவித்திருந்தேன். இதுநாள் வரை ஆதாரத்தை வெளியிடாத எடப்பாடி பழனிசாமி மீண்டும் அதே குற்றச்சாட்டை என் மீது வைத்திருக்கிறார். தனது நடவடிக்கையின் மூலம் ஒரு கோயபெல்ஸ் என்பதை நிரூபித்திருக்கிறார்.

அடுத்தபடியாக 2017ஆம் ஆண்டு மூன்று சதவீதம் ஆதரவு இருந்த எனக்கு ஒருங்கிணைப்பாளர் பதவி தந்ததாகவும் துணை முதல்வர் பதவி தந்ததாகவும் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். நான் 2017 ஆம் ஆண்டு தர்மயுத்தம் நடத்திய காலத்தில் எனக்கு கிட்டத்தட்ட 42 சதவீதம் மக்கள் ஆதரவு இருந்தது என்பதை பத்திரிகைகள் படம் பிடித்துக் காட்டின. அந்தத் தருணத்தில் நான் எடப்பாடி பழனிசாமியிடம் சென்று எனக்கு ஒருங்கிணைப்பாளர் பதவி அளியுங்கள், துணை முதல்வர் பதவி அளியுங்கள் என கேட்கவில்லை.

கோவை பொதுக் கூட்டம்: நான் தர்மயுத்தம் சார்பாக எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 16ஆவது முறையாக மாபெரும் பொதுக் கூட்டத்தை கோவையில் கூட்டிய போது அங்கு திரண்டிருந்த கூட்டத்தை கண்டு அதிர்ந்து அதற்கு மறுநாள் அதிமுகவின் மூத்த விசுவாசிகளான எஸ்பி வேலுமணியும் தங்கமணியும் சென்னையில் உள்ள என்னுடைய மகள் வீட்டில் என்னைச் சந்தித்து நாம் ஒன்று சேர்ந்தால்தான் அதிமுக வலுப்பெறும். அப்போதுதான் தேர்தல்களில் வெற்றி பெற முடியும் என கட்சித் தொண்டர்களின் கருத்தையும் விருப்பத்தையும் என்னிடம் வெளிப்படுத்தினர்.

கட்சியின் நலன் கருதி, கழகம் ஒன்று பட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் கோரிக்கையை நான் ஏற்றுக் கொண்டேன். நான் போய் பழனிசாமியிடம் எந்த பதவியையும் கேட்கவில்லை. இனியும் கேட்கமாட்டேன். பழனிசாமிதான் தவழ்ந்து ஊர்ந்து காலில் விழுந்து பெற்ற முதல்வர் பதவியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தூதுவிட்டார்.

சுயநலவாதி: எடப்பாடி பழனிசாமி பதவி வெறி பிடித்தவர், சுயநலவாதி என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். எந்தக் காலத்திலும் எடப்பாடி பழனிசாமியிடம் யாசகம் கேட்கமாட்டேன். எனக்கு அதற்கான அவசியமும் இல்லை. அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று தான் நான் சொல்லி வருகிறேன்.

நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்பதையும் சாதாரணத் தொண்டனும் உச்சபட்ச பதவியை அடையலாம் என்ற விதியை மாற்றியுள்ள சுயநலவாத சர்வாதிகாரி எடப்பாடி பழனிசாமியிடம் நான் எந்தக் கோரிக்கையும் விடுக்காத நிலையில், என்னைச் அதிமுகவில் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்று அவர் சொல்வது ஆணவத்தின் உச்சகட்டம்

தியாகம் செய்யத் தயார்: கட்சி இணைவதற்கு நான் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார். கட்சி இணைய எடப்பாடி பழனிசாமி எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாரா என்பதுதான் என் கேள்வி. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நீடிப்பதை தொண்டர்களும், மக்களும் விரும்பவில்லை. எனவே எடப்பாடி பழனிசாமி பதவியிலிருந்து விலகினால் நன்றாக இருக்கும் என்று பொதுமக்களும், தொண்டர்களும் விரும்புகிறார்கள். தாமாக பதவி விலக எடப்பாடி பழனிசாமி மறுக்கும்பட்சத்தில், தொண்டர்களும், மக்களும் இணைந்து அதற்கான சூழ்நிலையை உருவாக்குவார்கள். இவ்வாறு ஓபிஎஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+