ஜெயலலிதா மரணம்.."ஓபிஎஸ்சும் குற்றவாளிதான்"..ஏன் இதை இன்று சொல்கிறோம் என்றால்..அமைச்சர் ரகுபதி பரபர
ஏன் இதையெல்லாம் இன்று சொல்கிறோம் என்று சொன்னால் நீதிமன்றத்தில் ஒருவர்(விஜயபாஸ்கர்) போய் தடை வாங்கிவிட்டார் என்று பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். அதற்காகத்தான் சொல்கிறோம் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.
சென்னை: ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக சொல்லிவிட்டு கோர்ட்டில் சாட்சி சொல்ல வேண்டுமா இல்லையா? எனக்கு எதுவும் தெரியாது... நியாபகம் இல்லை. மறந்துட்டேன். கருத்து சொல்ல விரும்பவில்லை. இப்படித்தான் சாட்சியத்தில் இரண்டு நாள் சொல்லிவிட்டு வந்திருக்கிறார் என்றால் அப்போது ஏன் தர்மயுத்தம் நடத்துனீர்கள் என்று ஓ பன்னீர் செல்வத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பிலும் சந்தேகம் கிளப்பினர். முதல்வர் பதவியை ராஜினமா செய்து விட்டு 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி தர்மயுத்தம் நடத்திய ஓ பன்னீர் செல்வம், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் தர்மயுத்தம் நடத்தினார்.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்
இதையடுத்து, ஓய்வு பெற்ற ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கபட்டது. ஆறுமுக சாமி ஆணையத்தின் விசாரணைக்கு ஆஜரான ஓ பன்னீர் செல்வம், ஜெயலலிதா மரணத்தில் தனக்கு தனிப்பட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை என்று பதிலளித்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கையிலும் இது தொடர்பாக கூறப்பட்டு இருந்தது.

ஆணையம் அமைக்க வேண்டும்
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கையில், ஓ.பன்னீர்செல்வம் சாட்சியம் தொடர்பாக கூறப்பட்டு இருந்ததாவது: எந்த சூழ்நிலையில் முதல்வர் மரணமடைந்தார் என்பதை அறிய ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் எனப்படும் போராட்டத்தை நடத்தியதாக ஒப்புக்கொண்டார். விசாரணை நடத்த ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் தான் வைத்தார். ஆனால் அவருக்கு தெரிந்த வரையில் மறைந்த முதல்வரின் மரணம் இயற்கைக்கு மாறானது.. சந்தேகம் இல்லை என்று அவர் தனது சாட்சியத்தில் திட்டவட்டமாக கூறியுள்ளார்' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம்
ஓ பன்னீர்செல்வத்தின் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுப்பதாக அப்போதே அரசியல் வட்டாரத்திலும் அவரது எதிர்க்கோஷ்டியினர் மத்தியிலும் விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய ஓ பன்னீர் செல்வம் நீதிமன்றத்தில் சாட்சி சொல்லவில்லை எனவே அவரும் ஒரு குற்றவாளிதான் என்று அமைச்சர் ரகுபதி என சாடியுள்ளார்.

ஏன் தர்மயுத்தம் நடத்துனீர்கள்
இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் அமைச்சர் ரகுபதி கூறியதவாது: - ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓ பன்னீர் செல்வம் கூறினார். மரணத்தில் மர்மம் இருப்பதாக சொல்லிவிட்டு கோர்ட்டில் சாட்சி சொல்ல வேண்டுமா இல்லையா? எனக்கு எதுவும் தெரியாது... நியாபகம் இல்லை. மறந்துட்டேன். கருத்து சொல்ல விரும்பவில்லை. இப்படித்தான் சாட்சியத்தில் இரண்டு நாள் சொல்லிவிட்டு வந்திருக்கிறார் என்றால் அப்போது ஏன் தர்மயுத்தம் நடத்துனீர்கள்.

ஓபிஎஸ்-சும் ஒரு குற்றவாளி ஆகிறாரா
அப்போது ஏன் சாவில் சந்தேகம் இருப்பதாக சொன்னீர்கள். ஓபிஎஸ்-சும் ஒரு குற்றவாளி ஆகிறாரா இல்லையா...ஏன் இதையெல்லாம் சொல்கிறோம் என்று சொன்னால் நீதிமன்றத்தில் ஒருவர் போய் தடை வாங்கிவிட்டார் என்று பத்திரிகையாளர்கள் இது குறித்து கேட்டார்கள். அதற்காகத்தான் சொல்கிறோம். அவர்(விஜயபாஸ்கர்) இடைக்கால தடைதான் வாங்கியிருக்கிறார். தடையை எப்படி விலக்குவது என்று எங்களுக்கு தெரியும்" என்றார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications