Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛பணம்’ தான் வேணும்.. பிரஸ்மீட்டிலேயே சைகை காட்டிய ஓபிஎஸ்.. இது கூவத்தூர் மாடலாமே..திரும்பும் ஈபிஎஸ்

சென்னையில் இன்று ஓ பன்னீர் செல்வம் தலைமையில் அவரது அணியில் உள்ள தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தினர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியான நிலையில் சென்னையில் இன்று ஓ பன்னீர் செல்வம் தலைமையில் அவரது அணியினர் ஆலோசனை மேற்கொண்டனர். இதையடுத்து ஓ பன்னீர் செல்வம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த வேளை எடப்பாடி பழனிச்சாமி தரப்பை கடுமையாக விமர்சனம் செய்த ஓ பன்னீர் செல்வம், கூவத்தூரில் நடந்த விஷயத்தை மேற்கொள்காட்டி எல்லாவற்றுக்கும் பணம் தான் வேணும் எனும் வகையில் பத்திரிகையாளர்களிடம் சைகை காட்டியது கவனிக்க வைத்து பேசும்பொருளாக்கி உள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த பொதுக்குழுவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தீர்ப்பில் ஜூலை மாதம் 11ம் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என தெரிவித்துள்ளது. இதன்மூலம் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுத்தது செல்லும் எனவும், ஜூலை 11 பொதுக்குழுவில் ஓ பன்னீர் செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிச்சாமி கட்டுப்பாட்டுக்கு சென்றுள்ளது. இது எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு மாபெரும் வெற்றியாகும்.

ஓபிஎஸ் முக்கிய ஆலோசனை

ஓபிஎஸ் முக்கிய ஆலோசனை

இந்நிலையில் தான் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் ஓ பன்னீர் செல்வம் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். அரசியலில் மூத்த தலைவராக உள்ள பண்ருட்டி ராமச்சந்திரன், எம்எல்ஏக்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில்அதிமுக விஷயத்தில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

ஓ பன்னீர் செல்வம் பேட்டி

ஓ பன்னீர் செல்வம் பேட்டி

இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு ஓ பன்னீர் செல்வம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த வேளையில் ஓ பன்னீர் செல்வம் கூறியதாவது: உச்சநீதிமன்ற தீர்ப்பினால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை. நாங்கள் மக்களை நாடி செல்வதில் உறுதியாக இருக்கிறோம். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் 50 ஆண்டுகளாக இந்த கட்சியை உயிரை கொடுத்து காப்பாற்றினார். எம்ஜிஆர் தான் கட்சியின் சட்ட விதிகளை வகுத்தார். அதனை ஜெயலலிதா காப்பாற்றினார். இந்த 2 தலைவர்கள் பின்பற்றிய விதிகளை காப்பாற்ற வேண்டும் என்று தான் நாங்கள் போராடி கொண்டிருக்கிறோம்.

 உலகில் எந்த கட்சியிலும் இல்லை

உலகில் எந்த கட்சியிலும் இல்லை

ஜெயலலிதாக 30 ஆண்டுகளாக கட்சியின் பொதுச்செயலாளராக இருந்துள்ளார். இந்த காலத்தில் பல சோதனைகளையும் அவர் சந்தித்தார். 96 வழக்குகளை எதிர்கொண்டார். இதனால் ஜெயலலிதா காலமான பிறகு அவர் தான் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் என தீர்மானம் நிறைவேற்றினோம். அந்த தீர்மானத்தை ரத்து செய்ய யாருக்கு அதிகாரம் இருக்கிறது? யாருக்குமே கிடையாது. இந்த கட்சியை தொண்டர்களின் இயக்கமாக எம்ஜிஆர் உருவாக்கினார். இன்று வரை அப்படித்தான் தொண்டர்களை காப்பாற்றும் இயக்கமாக உள்ளது. மேலும் கட்சியின் உச்சபதவியில் இருப்பவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று சட்டவிதியை உருவாக்கினார். இந்த விதி உலகத்தில் எந்த கட்சியிலும் இல்லை.

சைகை காட்டிய ஓபிஎஸ்

சைகை காட்டிய ஓபிஎஸ்

ஆனால் இன்றைக்கு என்ன நிலைமை உள்ளது. 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் வழி மொழிய வேண்டும் என்கின்றனர். இவ்வாறு தான் தலைமை கழக தலைவரை தேர்வு செய்ய வேண்டுமாம். இது(கைகளை ரூபாய் நோட்டுகள் எண்ணுவது போல் சைகை காட்டி) இருந்தால் தான் நடக்கும். எப்படி கூவத்தூரில் நடந்ததோ அதேபோல் கட்சியை கைப்பற்றி கைக்குள் வைத்து கொள்ள நினைக்கிறார்கள். இது ஓபிஎஸ் தாத்தா மாடசாமி தேவர் ஆரம்பித்த கட்சி அல்ல. பழனிச்சாமியின் தாத்தா ஆரம்பித்த கட்சி அல்ல. தொண்டர்களுக்காக எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி. அதற்காக தான் நாங்கள் தர்மயுத்தத்தை தொடங்கி உள்ளோம். நாங்கள் மக்கள் மன்றத்தை நாடிச்செல்ல உள்ளோம். அவர்கள் சரியான தீர்ப்பை வழங்குகிறார்கள்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+