‛க்ளைமாக்ஸ்‛.. அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கில் ஓபிஎஸ் எழுத்துப்பூர்வ வாதம்.. தீர்ப்பு எப்போது?
சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்தல் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று தீர்ப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது ஓ பன்னீர் செல்வம் தரப்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமான வாதம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனை ஆராய்ந்த பிறகு வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
அதிமுகவில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடந்தது. இந்த பொதுக்குழு மூலம் எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமையாக உருவானார். அதாவது அவர் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதோடு எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் பொதுச்செயலாளராக மாறும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.

அவசரமாக விசாரணை
இந்நிலையில் தான் 2022 ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது நிலுவையில் இருக்கும் நிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுக்குழு தீர்மானத்தை எதிர்க்கும் வழக்கு அவசரமாக கடந்த 22ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இன்று தீர்ப்பு என தகவல்
ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இருதரப்பு வாதங்களை கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி கொள்ளலாம். ரிசல்ட்டை வெளியிடக்கூடாது என கூறியது. மேலும் மார்ச் 24ம் தேதி (வெள்ளிக்கிழமை) தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி குமரேஷ் பாபு கூறினார்.

வெளியாகாத தீர்ப்பு
இந்நிலையில் இன்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஓ பன்னீர் செல்வம் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்க்கும் வழக்கு நேற்று பட்டியலிடப்படவில்லை. இதனால் இன்று தீர்ப்பு வெளியாகவில்லை.

எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்
இதற்கிடையே தான் வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஓ பன்னீர் செல்வம் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது. எழுத்துப்பூர்வமான வாதத்தை இன்று காலைக்குள் வழங்க வேண்டும் நீதிமன்றம் கூறிய நிலையில் ஓபிஎஸ் தரப்பில் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வாதத்தில் இருப்பது என்ன?
அதில் அதிமுகவில் இரட்டை தலைமை பதவிகள் குறித்து நிலுவையில் இருக்கும் மூலவழக்கு விசாரணையின் அடிப்படையில் தான் முடிவு செய்ய முடியும். தற்போது வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிப்பது என்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது'' என்பது உள்ளிட்ட பிற விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கடந்த 22ம் தேதி நீதிமன்றத்தில் ஓ பன்னீர் செல்வம் எடுத்து வைத்த வாதங்கள் எழுத்துப்பூர்வமாக இன்று சமர்பிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு எப்போது?
இன்று எழுத்துப்பூர்வ வாதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால் அதனை ஆராய்ந்து வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அதன்படி வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் அன்றைய தினம் தீர்ப்பு வெளியாகுமா? இல்லையா? என்பது திங்கட்கிழமை விசாரிக்கப்படும் வழக்குகள் தொடர்பான பட்டியல் இன்று மாலையில் வெளியிடப்படும். அதிமுக அதிமுக பொதுக்குழு தீர்மானம் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கு இடம்பெற்றால் திங்கட்கிழமை தீர்ப்பு வெளியாகும். இல்லாவிட்டால் மாற்றுதேதியில் தீர்ப்பு வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications