"அவசரம் அவசரம்".. பதறிய ஓ பன்னீர்செல்வம்.. எடப்பாடிக்கு எதிரான மேல்முறையீடு.. விசாரணை ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் பதவி மேல்முறையீட்டு வழக்கு ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

ஒரு வழியாக பெரிய போராட்டத்திற்கு பின் அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

O Panneerselvam appeal against AIADMK General Secretary Election and Edappadi to be heard today

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான ஓபிஎஸ் தரப்பு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், அதோடு பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை இல்லை என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதையடுத்து உடனடியாக எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வழக்கில், ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், 2 ஆயிரத்து 460 உறுப்பினர்களும் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானங்களும் செல்லுபடியாகக் கூடியவையே என்று தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

O Panneerselvam appeal against AIADMK General Secretary Election and Edappadi to be heard today

தீர்மானங்களுக்கும், தேர்தலுக்கும் தடை விதித்தால் ஒன்றரை கோடி உறுப்பினர்களை கொண்ட கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்துவதுடன், கட்சியின் செயல்பாட்டையும் பாதிக்கும். அதனால் தீர்மானங்களுக்கும், தேர்தலுக்கும் தடை விதிக்க வேண்டுமென்ற கோரிக்கை நிராகரிக்கப்படுகின்றன என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

இதை எதிர்த்து உடனே ஓ பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு உடனடியாக ஏப்ரல் 3ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார். ஆனால் அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.

அதோடு வழக்கு விசாரணை ஏப்ரல் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் ஏப்ரல் 16-ந் தேதி அதிமுகவின் அவசர செயற்குழுக் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ளார்.

கர்நாடகா சட்டசபை தேர்தல், அதிமுக உறுப்பினர் ஆட்சேர்ப்பு தொடர்பாக இந்த செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இதை சுட்டிக்காட்டி உயர் நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் புதிய கோரிக்கை வைத்தார். தமது மேல்முறையீட்டு மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும்.. அவசரமாக விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தை ஓபிஎஸ் நாடினார்.

இதனை ஏற்று ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இன்றே சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை செய்ய முடிவு செய்தது. கடைசியில் இன்றும் வழக்கு விசாரணை செய்யப்படவில்லை.

மாறாக, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் பதவி மேல்முறையீட்டு வழக்கு ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+