இது கட்டண கொள்ளை.. தடுத்து நிறுத்துங்க.. முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வைத்த கோரிக்கை
சென்னை : பண்டிகை நாட்களில் தனியார் பேருந்துகளில் வசூலிக்கப்படும் அபரிமிதமான கட்டண உயர்வை தடுத்து நிறுத்துவதுடன், நியாயமான கட்டணம் வசூலிக்க வழிவகை செய்ய காவல்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் , முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
பண்டிகை நாட்களில் சென்னையில் இருந்து மொத்தமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்வது வழக்கம். அந்த சமயங்களில் தனியார் பேருந்துகளில் டிக்கெட் விலை கடுமையாக உயர்த்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதேபோல் பண்டிகை முடிந்து சென்னைக்கு திரும்பும்போதும் டிக்கெட் விலை அதிகமாக இருக்கும்.
ரயில், விமானங்களில் முன்பதிவு முடிந்தபின்னர் பலர் ஆம்னி பேருந்துகளையே புக்கிங் செய்கிறார்கள். சொந்த ஊர்களுக்கு செல்ல ஆம்னி பேருந்து வசதியாக இருக்கும். விரைவாக செல்ல முடியும்.

அதிக கட்டணம்
ஆம்னி பேருந்துகளில் படுக்கை , ஏசி வசதிகள், விரைவான பயணம் ஆகியவை இருப்பதால் அதில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் டிக்கெட் விலை கடுமையாக இருக்கும். இந்நிலையில் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை முதல்வர் தடுக்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பண்டிகை நாட்கள்
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, " அக்.14-ம் தேதி (வியாழன்) ஆயுதபூஜை, 15-ம் தேதி (வெள்ளி) விஜயதசமி வருகிறது. அடுத்தடுத்த நாட்களான சனி, ஞாயிறு விடுமுறை நாட்களைத் தொடர்ந்து 19-ம் தேதி (செவ்வாய்) மிலாடி நபி பண்டிகை வருகிறது.

3100 கட்டணம்
இதையொட்டி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் பணியாற்றுவோர் அரசு, தனியார் பேருந்துகளில் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த சூழலில், தனியார் நிறுவனங்கள் பேருந்துகளை வெவ்வேறு வழித்தடங்களில் இயங்குகின்றன. இப்பேருந்துகளில் 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக குளிர்சாதன வசதியுடன் கூடிய சென்னை - கோவை வழித்தடத்துக்கான கட்டணம் ரூ.2.800 வரை வசூலிக்கப்படுகிறது. சென்னை -கோவை விமானக் கட்டணம் ரூ.3,100 என்று இருக்க,பேருந்து கட்டணம் ரூ.2,800 வரை வசூலிக்கப்படுவதாகவும், அரசு தரப்பில் எச்சரித்தும், விதிமீறல்கள் தொடர்வதாகவும், அதிகாரிகளுக்கு தெரிந்தே இது நடப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

ரகசிய தொடர்பு
சம்பிரதாயத்துக்காக எச்சரித்துவிட்டு, இதை அரசு கண்டும், காணாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. இதில் ஆளும் கட்சியினருக்கும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் ரகசிய தொடர்பு இருக்கிறதோ என்று எண்ணக்கூடிய அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே முதல்வர் தனி கவனம் செலுத்தி, தனியார் பேருந்துகளில் வசூலிக்கப்படும் அபரிமிதமான கட்டண உயர்வை தடுத்து நிறுத்துவதுடன், நியாயமான கட்டணம் வசூலிக்க வழிவகை செய்ய காவல்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்
-
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications