சல்லி சல்லியா சிதறிடுச்சே.. கிளம்பி போறாரு தலைவர்.. அஸ்திரத்தை எடுத்த பாஜக.. எடப்பாடி பழனிசாமி கிலி?
சென்னை: ஓபிஎஸ் மீதான நம்பிக்கை, பாஜக மேலிடத்துக்கு நாளுக்கு நாள் பெருகிவருவதாக கூறப்படுகிறது.. இதையடுத்து, ஓபிஎஸ்ஸின் அரசியலும் வேகம் எடுத்து வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திருச்சியில் மாநாட்டை நடத்தியிருந்தார்.. எடப்பாடி பழனிசாமிக்கும், மேலிட பாஜகவுக்கும், தங்களது செல்வாக்கை நிரூபிக்கவே இந்த மாநாட்டை ஓபிஎஸ் நடத்திய கருதப்பட்டது..
மற்றொருபுறம், சசிகலா, தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், சாதி முத்திரை குத்தப்பட்டுவிடக்கூடாது என்பதில் இருவருமே அலர்ட்டாக இருந்ததால், மறைமுகமான ஆதரவை ஓபிஎஸ்ஸுக்கு தெரிவித்துவிட்டு, மாநாட்டில் பங்கேற்காமல் தவிர்த்ததாக சொல்லப்பட்டது.

அண்ணாமலை: அதேபோல, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை அழைத்து பார்க்கலாம் என்று முடிவு செய்து அண்ணாமலையின் பல்ஸ் பார்க்க அவருக்கு தகவல் அனுப்பினாராம் ஓபிஎஸ்.. அதற்கு அண்ணாமலை, "அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம்னு நான் சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில், ஓபிஎஸ் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டால் ஆரோக்கியமாக இருக்காது" என்று பதில் தந்தாராம்.
திருச்சி மாநாட்டிற்கு தன்னெழுச்சியாக பெருந்திரளான தொண்டர்கள் வருவார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் நம்பிக்கையுடன் சொன்னபோதே, ரவீந்திரநாத்துக்கு இந்த நம்பிக்கையை தந்தது மேலிட பாஜகவாகத்தான் இருக்கும் என்றும் சலசலக்கப்பட்டது. அந்தவகையில், திருச்சி மாநாட்டையும், பாஜகவையும் இணைத்து பல்வேறு யூகங்கள் வலம்வந்தன.
கோவை மாநகர்: இப்போது விஷயம் என்னவென்றால், ஜனவரி 6-ந்தேதி கோவை மாநகரில் அடுத்த மாநாடு நடைபெறும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதுவும், எடப்பாடி பழனிசாமியின் கோட்டை எனப்படும் கொங்குவிலேயே மாநாட்டை நடத்த போகிறார் ஓபிஎஸ்.. இந்த மாநாட்டுக்குத்தான், பாஜக தலைவர்களை அழைக்க முடிவு செய்துள்ளாராம்.. இதற்காக டெல்லிக்கே கிளம்பி செல்லவும் ஓபிஎஸ் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.
கடந்த திருச்சி மாநாட்டின்போது, ஓரிரு சலசலப்புகள் பாஜகவுடன் இருந்தநிலையில், இப்போது பாஜகவுடன் நெருங்கியே உள்ளார் ஓபிஎஸ்.. இதற்கு இன்னொரு காரணம், தேவர் ஜெயந்தியின்போது, தன்னுடைய பலத்தை ஓபிஎஸ் வெளிப்படுத்தியிருந்ததை பாஜகவும் கவனித்து மகிழ்ந்து போயுள்ளதாம்.
தினகரன்: எனவே, விரைவில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், எப்படியும், கூட்டணி ஓபிஎஸ், தினகரன் தரப்புடன் முடிவாகிவிடும் என்கிறார்கள்.. எனவே, விரைவில் ஓபிஎஸ் டெல்லி செல்ல நேர்ந்தால், தினகரனும் அவருடன் உடன்செல்லலாம் என்றும், டெல்லியிலேயே கூட்டணி உறுதியாகிவிடும் என்றும் சொல்கிறார்கள்.
அப்போது, பாஜக தலைவர்களுக்கு, மாநாட்டிற்கான அழைப்பு விடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. ஒருவேளை, ஓபிஎஸ் அழைப்பு விடும் பட்சத்தில், பாஜக தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றால், அது சசிகலா, தினகரனுக்கான வெற்றியாக பார்க்கப்படும். அத்துடன், எடப்பாடி பழனிசாமிக்கு இது பேரதிர்ச்சியாக அமையும் என்றும் கணிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, ஓபிஎஸ நிகழ்வில் பாஜக தலைவர்கள் பங்கேற்கும்சூழலில், அதிமுக தலைவர்களுக்கான நெருக்கடிகளையும் பாஜக ஏற்படுத்தக்கூடும் என்கிறார்கள்.
எதிர்பார்ப்பு: ஆக மொத்தம், ஓபிஎஸ் நடத்தபோகும் மாநாடு, தென்மண்டலத்துக்கு பலத்தை தருகிறதோ இல்லையோ, அதிமுகவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!












Click it and Unblock the Notifications