"உங்கள் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது".. ஓபிஎஸ்ஸுக்கு போன தகவல்.. ஆடிட்டரா? "அப்போ" என்ன நடந்தது?

தேனியில் இருந்து யாருமே ஓ பன்னீர்செல்வம் பக்கம் இல்லை. தென் மண்டல எம்எல்ஏக்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாஜி அமைச்சர்கள் என்று யாருமே ஓபிஎஸ் பக்கம் இல்லை என்று மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓ பன்னீர்செல்வம் டெல்லி சப்போர்ட் இருந்தும் அதிமுகவினர் சப்போர்ட்டை பெற முடியவில்லை, கட்சி நிர்வாகிகளை தனது பக்கம் இழுக்க முடியவில்லை , ஓ பன்னீர்செல்வம் தோல்வி அடைந்துவிட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஓ பன்னீர்செல்வத்திற்கான ஆதரவு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. பொதுக்குழு வழக்கில் மட்டும் இவருக்கு எதிராக தீர்ப்பு வரும் பட்சத்தில் மொத்தமாக அதிமுகவில் ஓ பன்னீர்செல்வத்திற்கான கதவுகள் அடைக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன. ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி உள்ளது. இங்கு எடப்பாடி தரப்பு வேட்பாளர் தென்னரசு அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர் ஆகி உள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்த வேட்பாளருக்கு பாஜகவும் ஆதரவு அளித்துள்ளது. இந்த நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர தவறிவிட்டதாக மூத்த பத்திரிக்கையாளர் பாண்டியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

அவர் அளித்த பேட்டியில், ஜெயலலிதா மறைவிற்கு பின் சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்துவிட்டனர். சசிகலாவை முதல்ராக பொறுப்பேற்பதற்காக சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பாடுகள் நடந்து வந்தன. அங்குதான் அதற்கு முன் ஜெயலலிதா பதவி ஏற்று இருந்தார். இதற்காக ஆளுநரிடம் சசிகலா தரப்பு சார்பாக எம்எல்ஏக்கள் ஆதரவோடு கடிதமும் அனுப்பப்பட்டது. புதிய அமைச்சரவையின் லிஸ்ட் அந்த கடிதத்தில் இருந்தது. அந்த கடிதத்தில் ஓபிஎஸ் பெயர் இல்லை. அமைச்சர்கள் லிஸ்டில் ஓ பன்னீர்செல்வம் பெயரே இல்லை.

ஆளுநர் மாளிகை

ஆளுநர் மாளிகை

அந்த தகவல் ஆளுநர் மாளிகை மூலம் குருமூர்த்திக்கு செல்கிறது. ஆடிட்டர் குருமூர்த்தி அந்த தகவலை ஒரு பத்திரிகையாளர் மூலம் ஓ பன்னீர்செல்வத்திற்கு கொண்டு செல்கிறார். ஓ பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்ற தகவலில்.. உங்கள் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று கூறுகிறார்கள். உங்கள் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று கூறியதும் ஓ பன்னீர்செல்வம் வேறு வழியின்றி ஜெயலலிதா சமாதிக்கு செல்கிறார். இரவோடு இரவாக தர்மயுத்தம் நடத்துகிறார். அவரை இப்படி செய்ய வைத்தது டெல்லி. அவரை இப்படி அனுப்பி வைத்தது டெல்லி.

ஆடிட்டர்

ஆடிட்டர்

அவர் முதல்வராக வேண்டும் என்று ஆசைப்பட்டது டெல்லி. ஆனால் அப்படிப்பட்ட ஓ பன்னீர்செல்வம் டெல்லி சப்போர்ட் இருந்தும் அதிமுகவினர் சப்போர்ட்டை பெற முடியவில்லை. கட்சி நிர்வாகிகளை தனது பக்கம் இழுக்க முடியவில்லை. டெல்லியின் சப்போர்ட், அமித் ஷா , மோடி சப்போர்ட் எல்லாம் இருந்தும் கூட ஓ பன்னீர்செல்வத்தால் அதிமுகவை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர முடியவில்லை. ஜெயலலிதா மறைந்த பின்பும் கூட, டெல்லி சப்போர்ட்டை வைத்து இருந்தும் கூட ஓ பன்னீர்செல்வத்தால் அதிமுகவை கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம் அவர் அடிமட்டத்தில் பலத்தை வளர்த்துக்கொள்ளவில்லை. அவருக்கு பில்டிங் ஸ்டிராங், பேஸ்மெண்ட் வீக்.

சப்போர்ட் இல்லை

சப்போர்ட் இல்லை

தேனியில் இருந்து யாருமே ஓ பன்னீர்செல்வம் பக்கம் இல்லை. தென் மண்டல எம்எல்ஏக்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாஜி அமைச்சர்கள் என்று யாருமே ஓபிஎஸ் பக்கம் இல்லை. 500 பொதுக்குழு உறுப்பினர்கள் இருந்திருந்தால் கூட போதும் சின்னம் முடங்கி இருக்கும். தேர்தல் ஆணையம் சமநிலையான நிலைப்பாட்டை எடுத்து இருக்கும். ஆனால் அதை எல்லாம் ஓ பன்னீர்செல்வத்தால் செய்ய முடியவில்லை. ஒரு 10 எம்எல்ஏக்கள் கூட ஓ பன்னீர்செல்வம் பின்னால் இல்லை. ஆனால் எடப்பாடி அப்படி இல்லை . அவர் கட்சியை திட்டமிட்டு தனக்கு கீழே கொண்டு வந்தார். இப்போது இல்லை 5 வருடமாக திட்டமிட்டு எடப்பாடி காய் நகர்த்தி வந்துள்ளார்.

 எடப்பாடி பாஜக எதிர்ப்பு

எடப்பாடி பாஜக எதிர்ப்பு

எடப்பாடி திட்டமிட்டு கட்சியை தனக்கு கீழ் கொண்டு வந்துள்ளார். ஜெயலலிதா போல இருந்தால்தான் கட்சியை தனக்கு கீழ் கொண்டு வர முடியும் என்று எடப்பாடிக்கு தெரியும். அதனால்தான் வேலுமணி, தங்கமணி, வீரமணி, செங்கோட்டையன், பொன்னையன் என்று முக்கிய ஆட்களை எல்லாமே எடப்பாடி தனக்கு கீழ் வைத்து இருக்கிறார். ஜெயலலிதா போல பாஜகவை எதிர்க்கவும் எடப்பாடி துணிந்துவிட்டார். அவர் எச்சரிக்கையாக இருக்கிறார். ஆனால் ஓ பன்னீர்செல்வம் என்னசெய்கிறார் ? அவர் காவி வேட்டி, துண்டு போடுகிறார். அவர்தான் அதிமுகவை வழிநடத்த முடியுமா? எடப்பாடி போல உறுதியாக கட்சிக்காக இருக்க வேண்டாமா? என்று மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+