இரவோடு இரவாக.. ஓ. பன்னீர்செல்வம் Vs ஓ. பன்னீர்செல்வம்.. இதென்ன ஓபிஎஸ்ஸூக்கு சோதனை? அடடா ராமநாதபுரம்
சென்னை: இப்படி எல்லா பக்கமும் சோதனை வந்தால், ஓபிஎஸ் என்னதான் செய்வார்? யாருமே எதிர்பாராத வகையில், புதுசா இன்னொரு சிக்கல் ஓபிஎஸ்ஸூக்கு வந்துள்ளது. என்னவாம்?
கடந்த 2 மாத காலமாகவே, பாஜக அணியில் ஓபிஎஸ் இடம்பெறுவது குறித்தும், ஓபிஎஸ் டீமுக்கு எத்தனை சீட் ஒதுக்கப்படும்? என்பது குறித்தும் எதிர்பார்ப்புகள் எகிறி கொண்டே வந்தது.

ஓபிஎஸ் அணியில் பிரதானமான அதிமுக நிர்வாகிகள் அதிகம் இல்லாதபட்சத்தில் குறைவான அளவே தொகுதிகளை ஒதுக்க பாஜக முடிவெடுக்கும் என்றும் சலசலக்கப்பட்டது..
அதேபோல, தேனி, ஸ்ரீபெரும்புதூர், திருச்சி, மதுரை, சிவகங்கை, தஞ்சை, வட சென்னை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோவை ஆகிய தொகுதிகளை ஓபிஎஸ் தரப்பில் பாஜகவிடம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. அதற்கேற்றவாறு, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில், இந்த தேர்தலில் போட்டியிட, மொத்தம் 414 பேர் விருப்ப மனு அளித்திருந்தார்கள்..
விருப்ப மனுக்கள்: ஓபிஎஸ் டீமில் நிர்வாகிகள் அவ்வளவாக இல்லை, தேர்தலில் போட்டியிட யாரும் ஆர்வம் காட்டவில்லை என்று தகவல்கள் கிளம்பிய நிலையில், ஒரேநாளில் 414 பேர் விருப்ப மனு தந்து அசரடித்திருந்தது ஓபிஎஸ் தரப்புக்கும் பெருத்த மகிழ்ச்சியை தந்திருந்தது.
அதுமட்டுமல்ல, இந்த தேர்தலில் ஓபிஎஸ் மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப் 2 பேருமே களமிறங்க போவதால், இவர்கள் இருவரின் சார்பிலும் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இரட்டை இலை: ஆனால், இந்த கணிப்புகளும், தகவல்களும் தூள் தூளாக தகர்ந்துள்ளன.. ஓபிஎஸ்ஸுக்கு சின்னம் பெருத்த சிக்கலாக எழும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. இரட்டை இலை சின்னத்திலும் போட்டியிட முடியாமல், தாமரை சின்னத்தையும் ஏற்க முடியாமல், தனிச்சின்னத்தில் போட்டியிடும் நிலைமை வந்துள்ளது. அத்துடன், தேர்தலில் நின்று தொண்டர்களின் பலத்தை அறிவதற்கு 15-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்டிருந்த நிலையில், ஓபிஎஸ்ஸுக்கு 1 சீட் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்தத் தொகுதியில் தொண்டரை நிறுத்துவதைவிட, தானே களத்தில் இறங்கி பலத்தை நிரூபிக்க போகிறேன் என்றும் ஓபிஎஸ் அறிவித்திருக்கிறார். அதிக தொகுதி தர பாஜக விருப்பமாக இருந்தும்கூட, இரட்டை இலை சின்னம் இல்லாததால், ஒரு தொகுதியில் நிற்க முடிவு செய்திருப்பதாக ஓபிஎஸ் சொல்கிறார்..
சின்னங்கள்: ஆனால், இன்னும் எந்த சின்னம் என்று முடிவாகவில்லை.. வாளி, பலாப்பழம் மற்றும் திராட்சை பழம் ஆகிய சின்னங்களில் ஏதேனும் ஒன்றை ஒதுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கேட்டுள்ளதால், அதுகுறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"சின்னங்களை காட்டிலும் போட்டியிடுவோரின் அரசியல் , கடந்த காலங்களில் மக்களுக்கு செய்த திட்டங்களை வைத்துதான் மக்கள் வாக்களிப்பார்கள்" என்று ஓபிஎஸ் சொன்னாலும், இரட்டை இலையில் ஓபிஎஸ் போட்டியிடாததே எடப்பாடி தரப்புக்கு வெற்றியை தந்து வருகிறது
சிக்கல்: ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுவையும் தாக்கல் செய்துள்ள நிலையில், இன்னொரு சிக்கல் அங்கே முளைத்துள்ளது.. ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் இன்னொரு சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்.. ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
உசிலம்பட்டி தாலுகா மேக்கிலார்பட்டியை சேர்ந்த ஒச்சப்பன் என்பவரின் மகன்தான் இந்த ஓ.பன்னீர்செல்வம்.. இவர் ஒரு சுயேட்சை வேட்பாளர்.. திருவாடானை, பரமக்குடி, முதுகுளத்தூர் மற்றும் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் இவரை முன்மொழிந்துள்ளனர்.
சுயேட்சை: சுயேட்சையாக களம் இறங்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தேர்தலில் விழும் வாக்குகளை தடுக்கும் நோக்கத்திலேயே, அவருடைய பெயருடைய ஒருவரை சுயேட்சை வேட்பாளராக அதிமுக-வினர் ஏற்பாடு செய்து களத்தில் இறக்கி விட்டிருக்கிறார்களாம்.
இவர் மட்டுமல்ல, இவரைபோலவே, மேலும் சில பன்னீர்செல்வங்கள் சுயேட்சையாக கிளம்பி வரப்போறாங்களாம்.. வழக்கமாக, ஒரே தொகுதியில், ஒரே பெயரில் பலர் போட்டியிடுவார்கள்.. ஆனால் இங்கே ஒரே பெயர் மட்டுமல்லாமல், ஒரே இன்ஷியலுடனும் களமிறங்குவதால், மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பின்னடைவு: கட்சியையும் கைப்பற்ற முடியாமல், சின்னத்தையும் மீட்க முடியாமல், தொகுதிகளையும் கேட்டு வாங்க முடியாமல், எல்லா பக்கமும் பின்னடைவை சந்தித்து வரும் ஓபிஎஸ்ஸுக்கு வருகிறார், ராமநாதபுரத்திலும் புதிய தலைவலி முளைத்திருக்கிறது.. என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications