7 பேர் விடுதலை விவகாரம்... கழுவுற மீனில் நழுவுற மீனை போல் திமுக அரசு செயல்பாடு -ஓ.பன்னீர்செல்வம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் திமுக அரசின் செயல்பாடுகளை பார்க்கும் போது கழுவுற மீனில் நழுவுற மீன் என்ற பழமொழி தான் தனக்கு நினைவுக்கு வருவதாக கூறியுள்ளார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.

7 பேர் விடுதலையை வலியுறுத்தி மத்திய அரசுக்கு முழு அழுத்தம் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்;

ராஜீவ் கொலை

ராஜீவ் கொலை

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் ஏழு பேர் விடுதலை தொடர்பாக, முந்தைய ஆளுநரால் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் புதிய ஆளுநரிடம் அழுத்தம் கொடுக்க முடியாது என்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அளித்த பேட்டியை பார்க்கும் போது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. நீட் பிரச்சனையை போல் 7 பேர் விடுதலை விவகாரத்தையும் திமுக அரசு நீர்த்து போகச்செய்துவிட்டதோ என்ற எண்ணம் அனைவரிடமும் எழுந்துள்ளது.

அழுத்தம் தருக

அழுத்தம் தருக

முதலமைச்சர் ஸ்டாலின் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு தனிப்பட்ட முறையிலும், திமுகவின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் மூலமும் மத்திய அரசுக்கு போதுமான அழுத்தத்தை கொடுத்து திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 7 பேர் விடுதலையை உறுதி செய்ய வேண்டும் என தாம் கேட்டுக்கொள்வதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மன வேதனை

மன வேதனை

இதேபோல் மாநில அரசின் பரிந்துரையை ஏற்று 7 பேரை விடுதலை செய்யுமாறு குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி 124 நாட்கள் ஆகியுள்ள சூழ்நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது பொதுமக்களிடையே மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது எனக் கூறியிருக்கிறார். தனது அறிக்கையில் வார்த்தைகளை மிக கவனமாக ஓ.பி.எஸ். கையாண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தனி அறிக்கை

தனி அறிக்கை

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டறிக்கை வெளியிட்ட காலம் மாறி இப்போது அவர்கள் இருவரும் தனி அறிக்கை அதுவும் போட்டி அறிக்கையாக வெளியிடத் தொடங்கியுள்ளனர். உதாரணத்துக்கு நேற்றுக்கூட பெட்ரோல் டீசல் வரி தொடர்பாக ஓ.பி.எஸ். அறிக்கை வெளியிட்ட நிலையில், நெல் கொள்முதல் நிலையம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றொரு அறிக்கை விடுத்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+