திரைமறைவில் நடக்கும் வேலைகள்.. தேர்தல் நெருங்கும்போது பாருங்க! 'சஸ்பென்ஸ்' வைக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்!
சென்னை : "நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் நாங்கள் போட்டியிடுவோம். மறைமுகமாக சில வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு நிலைமை அப்படியே மாறும். பொறுத்திருந்து பாருங்கள்." என சஸ்பென்ஸ் வைக்கிறார் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி.

ஓபிஎஸ் ஆதரவாளர் பேட்டி : ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், "அண்ணாமலை தான் டெல்லிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் மீடியேட்டர். அவர்தான் டெல்லிக்கு எடப்பாடி பழனிசாமி பற்றி உயர்வாகச் சொல்லி வருகிறார். டெல்லிக்கு செல்வதற்கு முன்பு இங்கு மேனேஜர்களிடம் எல்லாம் பேச வேண்டிய அவசியம் இல்லை, டெல்லியில் இருக்கும் பாஸ் உடன் பேசிக்கொள்வோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார், ஆனால் மீட்டிங்கில் அண்ணாமலையுடன் அமர்ந்திருந்தார். மீட்டிங் முடிந்தபிறகு எங்களுக்கும் அண்ணாமலைக்கும் எந்த தகராறும் இல்லை என்கிறார்.
அண்ணாமலையும், எடப்பாடி பழனிசாமியோடு எந்த மோதலும் இல்லை என்கிறார். அண்ணாமலை கொங்கு மண்டலத்தில் ஏதோ ஒரு தொகுதியில் எம்.பியாக ஜெயிக்க வேண்டும். அதுதான் அவரது அஜெண்டா. அதற்கு இவர்களை எல்லாம் பகைத்துக்கொள்ளக் கூடாது. அதற்காக ஒரு டிராமா போட்டு எடப்பாடி பழனிசாமியுடன் ஒரு அண்டர்ஸ்டாண்டிங் அடிப்படையில் தான் செயல்படுகிறார்.
மறைமுகமாக சில வேலைகள் : எங்களை யாரும் கைகொடுத்துத் தூக்கவேண்டிய நிலை இல்லை. எங்களை யார் கைவிட்டாலும் நாங்கள் கீழே விழும் நிலைமையில் இல்லை. நாங்கள் மக்களை மட்டுமே நம்பியுள்ளோம். நாங்கள் எங்களுக்கென வலுவான கட்டமைப்போடு முன்னேறி வருகிறோம். திருச்சி மாநாட்டிலேயே ஓபிஎஸ்ஸின் பலத்தைப் பார்த்திருப்பீர்கள். அவரை சாதாரணமாக நினைக்கிறார்கள். போகப் போகப் பாருங்கள். இன்னும் 2 மாநாடுகளில் ஓபிஎஸ் இருக்கும் இடத்தைப் பாருங்கள்.

பாஜகவை நாடி நாங்கள் செல்லவில்லை. பாஜக இப்படி அப்படி என இரு பக்கமும் மாறி மாறி போடும் வேஷங்களை எல்லாம் இனி நாங்கள் நம்பத் தயாராக இல்லை. நாங்கள் மக்களைச் சந்தித்து நியாயத்தைக் கேட்கிறோம். இரட்டை இலை சின்னத்தில் தான் நாங்கள் போட்டியிடுவோம். மறைமுகமாக சில வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு நிலைமை அப்படியே மாறும். அவற்றைப் பொறுத்திருந்து பாருங்கள்.
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்திருந்தாலும், நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என ஒரு வரியைச் சேர்த்துள்ளது தேர்தல் ஆணையம். ஒரே தீர்ப்பில் எல்லாமே புஸ்வானம் ஆகிவிடும். எடப்பாடி பழனிசாமி ஒரேயடியாக கீழே விழுந்துவிடுவார்.
-
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications