இவர் மட்டும் இப்படி வந்துருக்காரே! சட்டசபை வெளியே ஓபிஎஸ்ஸை பார்த்ததும்! அதிர்ந்த எடப்பாடி டீம்! ஏன்?
சென்னை: தமிழ்நாடு சட்டசபைக்கு அதிமுக உறுப்பினர்களும் இன்று வருகை தந்த விதம் கவனம் பெற்றுள்ளது. இதில் ஓ பன்னீர்செல்வம் செய்த காரியம்தான் சட்டசபை உறுப்பினர்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கு, ஆளுநர் ஆர். என் ரவியின் சர்ச்சை பேச்சுக்கு இடையில் இன்று தமிழ்நாடு சட்டசபை மீண்டும் கூடுகிறது. தமிழ்நாடு சட்டசபையில் இன்று முக்கியமான விவாதங்கள், மோதல்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சட்டசபை கூட்ட தொடரிலும் எடப்பாடி - ஓபிஎஸ் இருவரும் அருகருகே அமர வைக்கப்பட்டு உள்ளனர். முன்னதாக எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ பன்னீர்செல்வத்தை அமர வைக்க கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதம் எழுதி இருந்தார்.

ஆர்பி உதயகுமார்
ஆர்பி உதயகுமார்தான் அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர். அதனால் அவரைத்தான் அந்த இருக்கையில் அமர வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆர்பி உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக நியமித்து உள்ளது. அதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு இந்த கோரிக்கையை வைத்தது. ஆனால், நான்தான் எதிர்க்கட்சி துணை தலைவர். அதனால் நான்தான் அந்த இடத்தில் தொடர வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடக்கையில் இதில் முடிவு எடுக்க கூடாது என்று ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து தமிழ்நாடு சட்டசபையில் கடந்த கூட்டத்தொடரிலும், இன்று தொடங்கிய கூட்டத்தொடரிலும் இருக்கைகள் மாற்றப்படவில்லை. இரண்டு தரப்பும் வைத்த கோரிக்கையால் இன்னும் அப்பாவு இருக்கைகளை மாற்றவில்லை.

அப்பாவு
எடப்பாடி, ஓபிஎஸ் இருவருக்கும் அருகருகேதான் அப்பாவு இருக்கை போடும்படி சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டு இருக்கிறார். தமிழ்நாடு சட்டசபையில் கடந்த முறை, அக்டோபர் மாதம் கூட்டம் கூடிய போது இருக்கைகள் மாற்றம் செய்யப்படவில்லை. எதிர்க்கட்சி தலைவர் இருக்கை எடப்பாடி பழனிசாமிக்கும், எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை ஓ பன்னீர்செல்வத்திற்கும் அளிக்கப்பட்டு இருந்தது. ஆர்பி உதயகுமாருக்கு அந்த இருக்கை அளிக்கப்படவில்லை. இதனால் எடப்பாடி இருக்கையில் அமராமல், ஒரு நிமிடம் இருந்துவிட்டு அதன்பின் அவைக்கு நடுவே வந்து தர்ணா செய்யும் நிலை ஏற்பட்டது. அதேபோல் நேற்று முதல் நாளும் ஆளுநர் உரையின் போது ஓபிஎஸ் அருகே எடப்பாடி நெளிந்தபடி அமர்ந்து இருந்தார்.

நெளிந்த எடப்பாடி
ஆளுநர் உரை முழுக்க எடப்பாடி எதுவும் சொல்லாமல், அமளி செய்யாமல், தனது இருக்கையிலேயே அமைதியாக இருந்தார். இருவரும் அருகருகே அமர்ந்தபடி ஆளுநர் உரையை கவனித்துக் கொண்டு இருந்தனர். இன்று எடப்பாடி - ஓபிஎஸ் அருகருகே அமர்ந்து இருந்தாலும் இருவரும் ஒரு நிமிடம் கூட ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை. இதையடுத்து நேற்று எடப்பாடி தரப்பு சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து இருக்கைகளை மாற்றும்படி கோரிக்கை வைத்தனர். ஆனால் சபாநாயகர் இந்த கோரிக்கையை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.

கோரிக்கை ஏற்பு இல்லை
இந்த நிலையில்தான் இன்று சபாநாயகர் அப்பாவுவின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி தரப்பு கருப்பு சட்டையில் வந்தனர். எடப்பாடி உட்பட அவரது அணியினர் எல்லோரும் கருப்பு சட்டையில் வந்து இருந்தனர். இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் மட்டும் வெள்ளை உடையில் வந்து இருந்தார். ஓ பன்னீர்செல்வம் மட்டும் வித்தியாசமாக வந்து இறங்கியதை பார்த்து எடப்பாடி தரப்பு அவரை உற்று கவனித்துக்கொண்டு இருந்தனர். ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ வைத்தியலிங்கமும் இன்று வெள்ளை உடையில் வந்து இருந்தனர். இவர்கள் வித்தியாசமாக வந்ததை, அதிமுக தரப்புடன் சேர்ந்து கருப்பு உடையில் வராததை அதிமுக தொண்டர்கள் பலரும் சட்டசபைக்கு வெளியே கவனித்துக்கொண்டு இருந்தனர்.












Click it and Unblock the Notifications