மனம் உடைந்து போன ஓ.பன்னீர்செல்வம்! சரியாக சாப்பிடுவது கூட இல்லை! நம்பிக்கையளித்து தேற்றும் இளைய மகன்
சென்னை: அதிமுகவின் சின்னம், கொடி, பெயர் உள்ளிட்டவைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது முதல் ஓ.பன்னீர்செல்வம் சரியாக சாப்பிடுவது கூட கிடையாது எனத் தெரிவிக்கப்படுகிறது.
அடுத்தக் கட்ட நகர்வு: லீகல் டீமை மலை போல் நம்பியிருந்த நிலையில் தனி நீதிபதி விதித்த தடையால் மனம் நொந்து போன ஓ.பன்னீர்செல்வம் அடுத்தக் கட்ட நகர்வு பற்றி இரவு பகலாக யோசித்து வருகிறாராம். ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை உயர்நீதிமன்றத்தில் வருவதால் நாளைய தினமாவது வலுவான வாதங்களை முன் வைக்குமாறு லீகல் டீம்களுக்கு பாயிண்ட்களை எடுத்துக் கொடுத்து வருகிறார் ஓ.பி.எஸ்.

மனம் நொந்த ஓபிஎஸ்: இதனிடையே அடுத்தடுத்தும் சட்டப்போராட்டங்களிலேயே காலம் ஓடுவதால் தன்னை நம்பி வந்தவர்களும் பெரும்பாலான மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி பக்கம் போவதை நெருக்கமானவர்கள் மத்தியில் சொல்லி மனம் நொந்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். பாஜக தலைமை தன்னை கைவிடாது என எதிர்பார்த்தவருக்கு இப்போது குழப்பம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. போதாகுறைக்கு மூத்த மகன் ரவீந்திரநாத் பஞ்சாயத்து வேறு.
இளைய மகன் ஜெயபிரதீப்: இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவருடைய இளைய மகன் ஜெயபிரதீப் தான் இப்போது ஆறுதலாக நம்பிக்கையாக பேசி வருகிறாராம். மேல்முறையீட்டில் நிச்சயம் நமக்கு சாதகமான தீர்ப்பு வரும் என தந்தைக்கு நம்பிக்கை அளித்து வருகிறாராம். மேலும், எல்லாவற்றையும் நினைத்து உடல்நலனை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என அக்கறையோடு அப்பாவை பார்த்துக் கொள்வதோடு அவருக்கு உதவியாக இப்போது களமிறங்கவும் தயாராகிவிட்டாராம்.
சசிகலாவுடன் சந்திப்பு எப்போது? : டிடிவி தினகரனோடு ஓ.பன்னீர்செல்வம் நட்பு பாராட்டி வரும் நிலையில் இன்னும் சசிகலாவை அவரால் நேரில் சந்திக்கமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஓ.பன்னீர்செல்வத்தை சசிகலாவுடன் சந்தித்து பேச வைப்பதற்கான முயற்சியில் அன்றும் சரி இன்றும் சரி அவருடைய தம்பி ஓ.ராஜா தான் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் ஏனோ தெரியவில்லை ஓ.பன்னீர்செல்வம் மீதான பழைய கோபம் சசிகலாவுக்கு தீரவில்லை போல், இன்னும் அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்க தயங்கி வருகிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications