குஷியில் எடப்பாடி.. "ஆபத்து".. தேர்தல் ஆணையத்திற்கு எதிராக.. பதறியடித்து கோர்ட்டுக்கு போகும் ஓபிஎஸ்?
சென்னை: அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் வழக்கு ஒன்றை தொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. சமயங்களில் கூடுதல் மனுவாகவும் பொதுக்குழு வழக்கோடு சேர்த்து இவர் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு வழக்கில் இடைக்கால நிவாரணம் கோரி இருந்தார். அதாவது அதிமுக பொதுக்குழு தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் பன்னீர் மற்றும் எடப்பாடி தரப்பில் தலைமை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட எந்த ஆவணங்களின் மீதும் எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் தேர்தல் ஆணையர்கள் அமைதியாகவே இருந்து வந்தனர்.
இதை எடப்பாடி கூட உச்ச நீதிமன்றத்தில் குறிப்பிட்டு இடைக்கால நிவாரணம் கோரி இருந்தார். இந்த வழக்கு விசாரணை காரணமாக தேர்தல் ஆணையம் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை அங்கீகரிக்கவில்லை என்பதால் எடப்பாடி இடைக்கால நிவாரணம் கோரி இருந்தார்.

நிவாரணம்
இங்கே வழக்கு நடப்பதால் அங்கே தேர்தல் ஆணையம் எங்கள் முடிவுகளை அங்கீகரிக்காமல் உள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் கட்சி பணிகள் முடங்கி உள்ளன. கட்சியில் பணிகள் நடக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அதனால் உடனே கட்சி விதிகளில் மாற்றங்கள் செய்த முடிவுகளை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்யலாம். இந்த வழக்கிற்கும் தேர்தல் ஆணையத்திற்கும் தொடர்பு இல்லை என்று இடைக்கால தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் உச்ச நீதிமன்றம் இன்னும் இதில் இடைக்கால தீர்வு வழங்கவில்லை.

இடைக்கால தீர்வு
இந்த நிலையில்தான் இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த அதிமுகவின் வரவு செலவு கணக்குகளை தலைமை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எடப்பாடி தரப்பினர் கொண்டாடி வருகிறார்கள். இடைக்கால பொதுச்செயலாளர் என்று கையெழுத்துப் போட்டு தாக்கல் செய்த வரவு செலவு கணக்கை அக்டோபர் 3-ந்தேதி ஒப்படைக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் கொடுத்த ஒப்புகையை (அக்கனாலெட்ஜ்மெண்ட்) தேர்தல் ஆணையம் தங்கள் இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஏன் தவறு
இது கிட்டத்தட்ட எடப்பாடியை தேர்தல் ஆணையம் இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் ஆகிறது. உச்ச நீதிமன்றத்தில் பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கு விசாரணை நடக்கும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு எடப்பாடிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. இதை உச்ச நீதிமன்றத்தில் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி வாதம் வைக்கவும் வாய்ப்பு உள்ளது. எங்களுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுத்துவிட்டது. நாங்கள் கொடுத்த வரவு செலவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுவிட்டது. அதனால் பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி தரப்பு கோரிக்கை வைக்க வாய்ப்பு உள்ளது.

வழக்கு
இது ஓ பன்னீர்செல்வத்திற்கு அப்படியே எதிராக திரும்பும் ஆபத்து உள்ளது. இந்த நிலையில்தான் எடப்பாடி சமர்ப்பித்த கணக்கு வழக்குகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதற்கும் எதிராக ஓ பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. தனி வழக்காக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம். அல்லது உச்ச நீதிமன்றத்தில் தற்போது நடக்கும் வழக்குடன் கூடுதல் மனுவாக ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தேர்தல் ஆணையம் அவசரப்பப்ட்டு முடிவு எடுத்துவிட்டது. இடைக்கால நிவாரணம் வழங்கப்படாத நிலையில் எப்படி இதில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கலாம். அவர்களின் முடிவிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
