Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் இல்லைனா என்ன நடக்கும் தெரியுமா? டெல்லியில் லாபி செய்யும் ஓபிஎஸ்! இதுதான் கடைசி "பிரம்மாஸ்திரம்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுக்குழு வழக்கிற்காக ஓ பன்னீர்செல்வம் தரப்பு டெல்லியில் இப்போதே லாபி செய்யலாமா என்று திட்டமிட தொடங்கி உள்ளதாம். ஆனால் டெல்லி தரப்போ ஓ பன்னீர்செல்வத்திற்கு பெரிதாக கிரீன் சிக்னல் காட்டவில்லை என்றே அரசியல் தரப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிச்சாமி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முக்கிய வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. அதிமுக வேட்பாளரின் வேட்புமனுவில் கையெழுத்து போடும் அதிகாரம் கேட்டு வழக்கு பதியப்பட்டது.

இந்த வழக்கில் அதிமுக வேட்பாளரை பொதுக்குழு முடிவு செய்யட்டும் என்று கூறப்பட்டது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் கே. எஸ் தென்னரசு அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

 ஓ பன்னீர்செல்வம்

ஓ பன்னீர்செல்வம்

இதனால் ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு இதில் கையெழுத்து போடும் உரிமையும் போய்விட்டது. அதேபோல் இரட்டை இலை சின்னமும் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் ஈரோடு கிழக்கு வழக்கில் சொதப்பிவிட்டோம் ஆனால் பொதுக்குழு வழக்கில் இப்படி நடக்க கூடாது என்பதில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு உறுதியாக இருக்கிறதாம். ஈரோடு கிழக்கு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி துரிதமாக செயல்பட்டு வழக்கு போட்டு தனது சாதகமான தீர்ப்பு வாங்கிவிட்டார். பொதுக்குழு வழக்கில் நாம் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு முடிவு செய்துள்ளதாம்.

வழக்கு

வழக்கு

அதிமுக பொதுக்குழு வழக்கில் கிளைமேக்ஸ் நெருங்கிவிட்டது. இந்த பொதுக்குழு வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் மேல்முறையீடு வழக்கு ஆகும். அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி கூடியது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டன. அதோடு இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்தே நீக்கப்பட்டார். இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ் வாதம், ஓபிஎஸ் ஆதரவாளர் வைரமுத்து வாதம், எடப்பாடி பழனிசாமி வாதம், அதிமுகவின் பொது வாதம், அவைத்தலைவர் தமிழ் மகன் வாதம் என்று வரிசையாக கட்சியின் வாதங்கள் எல்லாம் முடிவிற்கு வந்துள்ளன.

வாதங்கள்

வாதங்கள்

இதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வைத்த வாதத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாள ர்பதவிக்காலம் முடிந்துவிட்டது. அவர்களை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பளார் பொறுப்புகளை நீக்கும் வலிமை பொதுக்குழுவிற்கு இருப்பதாக அவர் வாதம் வைத்து இருக்கிறார். இந்த பொறுப்புகளை உருவாக்கியது பொதுக்குழு. அதனால் இந்த பதவிகளை நீக்குவதற்கும் பொதுக்குழுவிற்கு உரிமை உள்ளது. பொதுக்குழுவில் முடிவை ஏற்கும் நபரே கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்க முடியும். கட்சியின் விதி எண் 7 இதை கூறுகிறது. இந்த பொதுக்குழுவில்தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் நீக்கப்பட்டனர்.

ஓபிஎஸ் வாதம்

ஓபிஎஸ் வாதம்

அதேபோல் ஓ பன்னீர்செல்வம் வைத்த வாதத்தில், அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவிக்குத்தான் அனைத்து பவர்களும் இருந்தன. ஆனால் 2017ல் இந்த பதவி நீக்கப்பட்டது. செயற்குழு மற்றும் பொதுக்குழு மூலம் இந்த பதவி நீக்கப்பட்டது. அதன்பின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. அதிமுகவில் தலைமை கழகம் முடிவுகளை எடுக்க முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் மேற்கொள்ள முடியும். அப்படி இருக்கும் போது என்னுடைய அனுமதி இன்றி முடிவுகளை எடுத்துள்ளனர். இது எப்படி நியாயம் ஆகும். பொதுக்குழு கூடியதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். பொதுக்குழு தவறான வழியில் கூட்டப்பட்டு உள்ளது. விதிமுறைகளை பின்பற்றாமல் பொதுக்குழுவை கூட்டி உள்ளனர். ஆனால் இதை பற்றி உயர் நீதிமன்றம் கவனம் கொள்ளாமல் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் என்பது பொதுச்செயலாளரின் பதவிக்கு இணையான அதிகாரம் கொண்ட பதவி ஆகும், என்று கூறினார்.

லாபி

லாபி

இந்த வழக்கில்தான் தங்களுக்கு சாதகமாக லாபி செய்ய வேண்டும் ஓ பன்னீர்செல்வம் தரப்பு டெல்லியில் முறையிட உள்ளதாம். அதிமுகவில் ஒற்றை தலைமை இருந்தால் பாஜகவிற்குத்தான் சிக்கல். நான் இருக்கிற வரைதான் அதிமுக பாஜகவை மதிக்கும். நான் இல்லையென்றால் அதிமுக - பாஜக கூட்டணியே உடையும். எடப்பாடி பாஜகவை கழற்றிவிட்டுவிட்டு காங்கிரசுடன் கூட்டணி வைத்துவிடுவார். இரட்டை தலைமை இருக்கிற வரைதான் அதிமுக - பாஜக கூட்டணி நிலைக்கும். இப்போ ஈரோடு கிழக்கு தேர்தலில் கூட பாஜகதான் அதிமுகவை ஆதரிக்கிறது. ஆனால் அதிமுக எந்த இடத்திலும் பாஜக தங்களுடைய கூட்டணி என்று சொல்லவே இல்லை பார்த்தீங்களா?

சான்ஸே இல்லை

சான்ஸே இல்லை

அவர்களின் பணிமனையில் அண்ணாமலை போட்டோ கூட இல்லை. அதனால் எனக்கு ஆதரவாக முடிவு வந்தால் மட்டுமே பாஜகவிற்கு நல்லது என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு லாபி செய்து இருக்கிறதாம். இந்த வழக்கை தங்களின் கடைசி பிரம்மாஸ்திரமாக ஓ பன்னீர்செல்வம் தரப்பு பார்க்கிறதாம். ஆனால் டெல்லி தரப்போ.. இது முடிந்த வழக்கு. இதில் இனி தீர்ப்புதான் வர வேண்டும். இதில் நாங்கள் என்ன செய்ய முடியும். எங்களை என்ன செய்ய சொல்கிறீர்கள். கட்சியில் பெரும்பான்மை யாருக்கு இருக்கிறதோ அவர்கள்தானே தீர்ப்பு வந்தாலும், வரவில்லை என்றாலும் வெற்றிபெறுவார்கள், என்று கை விரிப்பது போல பேச தொடங்கி உள்ளதாம். விரைவில் பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வரும் என்பதால் அதற்குள் எப்படியாவது தனக்கு ஆதரவான சூழ்நிலையை உருவாக்கிவிட வேண்டும் ஓ பன்னீர்செல்வம் தரப்பு லாபி செய்து கொண்டு இருக்கிறதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+