ஓபிஎஸ் தலைவலி இனி இல்லை.. எடப்பாடி சாதிச்சிட்டாரே.. 'அதிமுக'வின் ஏகபோக உரிமையாளரானார் இபிஎஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் இன்று ஒரு மிகப்பெரிய 'ட்விஸ்ட்'. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார். இது ஓபிஎஸ்-ஸிற்கு ஒரு அரசியல் மறுவாழ்வாகப் பார்க்கப்பட்டாலும், நிஜமாகவே 'லக்' அடித்திருப்பது எடப்பாடி பழனிசாமிக்குத்தான் என்கிறார்கள் அரசியல் ரத்தத்தின் ரத்தங்கள்!

tamil nadu assembly elections 2026 o panneerselvam dmk ops

கோர்ட் கேஸ்களுக்கு 'குட்பை'!

கடந்த மூன்று ஆண்டுகளாக இபிஎஸ்-ஸிற்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் ஓபிஎஸ். கட்சிப் பதவி, பொதுக்குழு செல்லாது, இரட்டை இலைச் சின்னம் எனத் தொடர்ச்சியாக நீதிமன்றப் படிகளேறி இபிஎஸ்-ஸை தூங்கவிடாமல் செய்தார். ஆனால், இன்று ஓபிஎஸ் திமுகவில் இணைந்துவிட்டதால், அந்த அத்தனை சட்டப் போராட்டங்களும் தானாகவே 'புஸ்'ஸாகிவிடும்.

சட்டச் சிக்கல்: ஒரு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று உரிமை கோருபவர், அதே நேரத்தில் மாற்றுக்கட்சியான திமுகவில் உறுப்பினராக இருக்க முடியாது. இதனால், அதிமுக தொடர்பாக அவர் தொடர்ந்த அத்தனை வழக்குகளும் இனி செல்லுபடியாகாது.

சின்னம் இனி சேஃப்: இரட்டை இலைச் சின்னத்திற்கு உரிமை கோர இனி யாரும் இல்லை. தேர்தல் ஆணையத்திலும் நீதிமன்றத்திலும் இபிஎஸ்-ஸின் கை இனி ஓங்கி நிற்கும்.

வழக்குகள் காலி - எடப்பாடி ஜாலி

ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததன் மூலம், அதிமுகவின் 'சின்னம்' மற்றும் 'பதவி' தொடர்பான நீண்டகால சட்டப்போராட்டம் ஒரு முடிவுக்கு வருகிறது.

1. குறிப்பாக, 2022 ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் இனி வலுவிழந்துவிடும்.

2. அதிமுகவின் 'ஒருங்கிணைப்பாளர்' மற்றும் 'இணை ஒருங்கிணைப்பாளர்' பதவிகளை ரத்து செய்துவிட்டு, 'பொதுச்செயலாளர்' பதவியைக் கொண்டு வந்ததை எதிர்த்த சிவில் வழக்குகள்

3. ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களைக் கட்சியிலிருந்து நீக்கியதை எதிர்த்த மனுக்கள்; மற்றும்

4.அதிமுகவின் 'இரட்டை இலை' சின்னம் தங்களுக்கே சொந்தம் என்று தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்டிருந்த மனுக்கள் என அத்தனைக்கும் ஓபிஎஸ் இனி உரிமை கோர முடியாது.

5. சட்டப்படி ஒரு நபர் ஒரு கட்சியில் இருந்துகொண்டு இன்னொரு கட்சியின் பதவியையோ அல்லது சின்னத்தையோ உரிமை கோர முடியாது என்பதால், இந்த வழக்குகள் அனைத்தும் தானாகவே முடிவுக்கு வரும் அல்லது நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்படும். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இருந்த மிகப்பெரிய சட்ட ரீதியான முட்டுக்கட்டை நீங்கி, அவர் கட்சியின் 'ஏகபோக அதிகாரம்' படைத்தவராக உருவெடுத்துள்ளார்.

சிதறிய எதிர்ப்புகள்... வென்ற எடப்பாடி!

இபிஎஸ்-ஸை எதிர்த்த 'திரிமூர்த்திகள்' (சசிகலா, ஓபிஎஸ், டிடிவி) இப்போது ஆளுக்கொரு திசையில் நிற்கிறார்கள்:

சசிகலா: கடந்த பிப்ரவரி 24-ம் தேதி (ஜெயலலிதா பிறந்தநாள்) அன்று தனிக்கட்சி தொடங்கிவிட்டார். அவர் இனி 'வெளியாள்' தான்.

டிடிவி தினகரன்: தனது அமமுக-வை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைத்துவிட்டார். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியை ஏற்பதாக அவர் மறைமுகமாகச் சம்மதித்துவிட்டார்.

ஓபிஎஸ்: இப்போது திமுக காரர் ஆகிவிட்டார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவைச் சந்தித்தபோது, "திமுக கூட்டணி பலமாக இருக்கிறது, நீங்கள் சிதறிக் கிடந்தால் ஜெயிக்க முடியாது" என்று அவர் ஓப்பனாகவே சொல்லிவிட்டாராம். எடப்பாடியோ, "யாரை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்வேன், ஆனால் ஓபிஎஸ்-ஸை மட்டும் உள்ளே விடமாட்டேன்" என்று அடம் பிடிக்க, வேறு வழியே இல்லாமல் அறிவாலயப் பக்கம் ஒதுங்கிவிட்டார் பன்னீர்.


இப்போது ஓ பன்னீர்செல்வம் திமுக ஆள்!

இதன் மூலம் அதிமுக-வின் 'ஒரே உரிமையாளர்' என்ற அந்தஸ்தை எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாகப் பெற்றுவிட்டார். அதிமுக-வை கைப்பற்ற இனி உள்ளே இருந்து யாரும் குடைச்சல் கொடுக்க முடியாது.

"பதவிக்காக தர்மயுத்தம் நடத்திய பன்னீர், இப்போது அரசியல் மறுவாழ்விற்காக புறப்பட்டுவிட்டார். எதிரியை ஒழிக்க நினைத்து பன்னீர் எடுத்த இந்த முடிவு, உண்மையில் எடப்பாடிக்குக் கிடைத்த மாபெரும் 'கிஃப்ட்'!"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+