EXCLUSIVE: கேம் ஓவர் ஆக போகுது.. பாஜகவில் சேர ஓபிஎஸ் பிளான் போடுகிறாரா? ஆஹா.. டெல்லி போடும் பிளான்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் செல்வாக்கு சரிந்துவிட்டது.. தேர்தல் சமயத்தில் அவர் பாஜகவில் கூட இணைய வாய்ப்பு உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் லட்சுமி சுப்ரமணியன் ஒன்இந்தியா அரசியலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் குஜராத்தில் பாஜக முதல்வர் பூபேந்திர பாகல் பதவி ஏற்பு விழாவிற்கு ஓ பன்னீர்செல்வம் சென்று இருந்தார். குஜராத்தில் நடந்த விழாவில் குஜராத் சென்ற ஓ பன்னீர்செல்வத்திற்கு பாஜக மூத்த தலைவர்கள் பலர் சிறப்பு மரியாதையை கொடுத்துள்ளனர். பாஜக குஜராத் மாநில நிர்வாகிகள் ஓ பன்னீர்செல்வத்திற்கு வரவேற்பு கொடுத்தனர். பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

டெல்லி ஜி 20 கூட்டத்திற்கு எடப்பாடி அழைக்கப்பட்ட நிலையில் ஓ பன்னீர்செல்வம் குஜராத்திற்கு அழைக்கப்பட்டு உள்ளார். பாஜகவின் இந்த நிலைப்பாடு குறித்து மூத்த பத்திரிகையாளர் லட்சுமி சுப்ரமணியன் ஒன்இந்தியா அரசியலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டி பின்வருமாறு..

ஓபிஎஸ் குஜராத்

ஓபிஎஸ் குஜராத்

கேள்வி: குஜராத் முதல்வர் பதவி ஏற்பு விழாவிற்கு ஓபிஎஸ் சென்றது.. ஜி 20 கூட்டத்திற்கு எடப்பாடி அழைக்கப்பட்டதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: குஜராத்திற்கு ஓபிஎஸ் அழைக்கப்பட்டது உண்மையா? பொதுவான அழைப்பு சென்று இருக்கும். ஓபிஎஸ் தனக்கு ஒரு அட்டென்சன் கிடைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் சென்றுவிட்டாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடிக்கு மத்தியில் பாஜக ஒரு. ஜி 20 கூட்டத்திற்கு அழைக்கும் போது இடைக்கால பொதுச்செயலாளர் என்று அழைப்பு விடுத்துள்ளனர். இது பாஜக கொடுத்த அங்கீகாரம்தான். அவரின் பதவியை டெல்லி அங்கீகரித்து உள்ளது என்றுதான் இதன் அர்த்தம். ஓபிஎஸ் அரசியல் முடிவிற்கு வருகிறது என்றுதான் பார்க்க வேண்டும். அவரின் அரசியல் முடிவிற்கான காலத்திற்கு வந்துவிட்டது.

அரசியலில் என்ன இருக்கிறது?

அரசியலில் என்ன இருக்கிறது?

இனி அவருக்கு அரசியலில் என்ன இருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் நெருங்கும் போது அவர் பாஜகவில் இணைந்தாலும் ஆச்சர்யம் இல்லை. அல்லது தேர்தல் நெருங்கும் போது அவர் இரட்டை இலையை முடக்க மனு கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. குஜராத்திற்கு ஓபிஎஸ் சென்றதே ஒரு அட்டென்சன் கிடைக்க வேண்டும் என்றுதான். அங்கு போனால்தான் பாஜக தன்னை பார்க்கும். தனக்கு ஒரு தேவை இருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்றுதான் ஓபிஎஸ் குஜராத் சென்றுள்ளார். ஆனால் ஏன் எடப்பாடி -ஓபிஎஸ் இருவரும் பாஜகவை நம்பி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

பாஜக பிரச்சனை

பாஜக பிரச்சனை

பாஜக தங்களின் பிரச்சனையை தீர்க்கும் என்று ஏன் இவர்கள் நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஓ பன்னீர்செல்வத்திற்கு எப்போதுமே பெரிதாக ஆதரவு இருந்தது இல்லை. தர்ம யுத்த காலத்திலேயே அவருக்கு 11 எம்எல்ஏக்கள் ஆதரவுதான் இருந்தது. இப்போதும் அவர் பக்கம் எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லை. அவர் பின்னால் பெரிதாக தொண்டர்கள் ஆதரவு இல்லை. ஓபிஎஸ் பின்னால் அணிவகுக்க ஆட்கள் இல்லை. அவரின் அரசியல் தேனிக்குள் சுருங்கிவிட்டது. அவரின் செல்வாக்கு அதலபாதாளத்தில் இருக்கிறது. தேர்தல் நெருக்கத்தில் அவர் பாஜகவிலேயே போய் சேர்ந்து கொண்டால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

என்ன நடந்தது

என்ன நடந்தது

கேள்வி: திண்டுக்கல் - மதுரைக்கு மோடி வந்த போது ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரையும் சந்தித்தார்.. ஆனால் எடப்பாடியை மட்டும் தற்போது டெல்லி அழைத்துள்ளனர்.. இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்து இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

பதில்: இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. அதிமுக இப்படி உடைந்து இருப்பதை பாஜக ஒரு பக்கம் விரும்புகிறது. இதுதான் பாஜகவின் எண்ணம். சமீபத்தில் நடந்த பாஜக கூட்டத்தில் கூட அண்ணாமலை இதை பற்றி பேசி இருக்கிறார். கேட்கிற இடத்தை தேர்தலில் அதிமுக நமக்கு கொடுக்கும், இல்லையென்றால் அதிமுக சின்னத்தை கூட முடக்க நேரிடும் என்றுதான் அண்ணாமலை பேசியதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த அடிப்படையில் பார்த்தால், அதிமுக உடைந்தே இருக்க வேண்டும் என்றுதான் பாஜக நினைக்கிறது. எதிர்கட்சிக்கான இடத்தை பாஜக பிடிக்க வேண்டும் என்றுதான் அந்த கட்சி நினைக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+