அதிமுகவுக்கு தொடரும் தோல்வி.. ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வர்.. சபதமெடுத்த ஓ.பன்னீர்செல்வம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பிரம்மாண் கூட்டணி, அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளால் திமுக களத்தில் அடித்து ஆடிக் கொண்டிருக்கிறது. திமுக இணைந்த அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக சுயநல அரசியலாக மாறிவிட்டது. இந்தமுறையும் தேர்தலில் தோல்வியடைவார்கள் என கூறியுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் விழா மதுரை திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஓ.பன்னீர்செல்வம் ஏற்பாட்டில் சுமார் 50,000பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், திமுக மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். [O Panneerselvam]

o-panneerselvam-o-panneerselvam-slams-admk-also-praised-cm-mk-stalin

அதிமுக மீது தாக்கு

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுக இன்றில்லை. ஜெயலலிதா வளர்த்த அதிமுக இன்றிலை. இது இன்று அபகரிப்பு திமுகவாக மாற்றப்பட்டு கொண்டிருக்கிறது. சுய நல அரசியால் அதிமுக மாறியுள்ளது. விதிகள் மாற்றப்பட்டு, தொண்டர்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. கட்சியை வேண்டுமானால் கைப்பற்றலாம். ஆனால் வெற்றி பெற முடியாது.

தொடர் தோல்வி தொடர் கதையாக இருக்கும். இனியும் தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கம். வாழ்நாள் முழுவதும் தோல்வி தான். இனிமேலும் அதில் பயணிப்பது தன்மானத்திற்கு கேடானது, திராவிடத்திற்கு மாறானது என்பதை உணர்ந்தேன். அதனால் தான் 75 வருடங்களாக திராவிட சித்தாந்தத்தையும், சமூக நீதியையும் பாதுகாக்கும் தாய் கழகமான திமுகவில் இணைந்துள்ளேன்.

துரோகத்தால் பழிவாங்கல்

அதிமுக உரிமை மீட்புக்காக சட்டப் போராட்டம் நடத்தினேன். அதிமுக உரிமை மீட்பு கழகத்தை தாய் கழகமான திமுகவில் இணைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று அண்ணா சொல்லியுள்ளார். எங்களை தலைவர் எங்களை அன்புடன் அரவணைத்துள்ளார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரைகள் எதிரிகளே தெரியவில்லை என்கிற நிலையை உருவாக்கியுள்ளார்.

துரோகத்தால் பழிவாங்கப்பட்ட என்னை அன்போடு அழைத்து பண்போடு பாசம் காட்டியுள்ளார். எனக்கும், என்னை சார்ந்தவர்களுக்கும் அம்மாவின் அரவணைப்பை வழங்கியுள்ளார். அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் சுகாதாரம் என்கிற சாதனையை படைத்துள்ளார். தொழில் முதலீடுகள் மூலம் பெரும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளார். அவரை இரண்டாவது முறை முதலமைச்சராக பதவியேற்ற ஒற்றுமையுடன் பதவியேற்று, வெற்றிக்கனியை உங்கள் கரங்களில் சமர்பிப்பேன்.

பக்குவப்பட்ட தலைவர்

கட்சியினரை பக்குவமாக வழிநடத்துவது, கூட்டணி கட்சிகளுடன் தோழமையுடன் பயணிப்பது ஆகியவற்றின் மூலம் இப்படிட்ட பக்குவ தலைவர் இந்தியாவில் இல்லை என்பதை நிரூபித்துள்ளார். தமிழகமே ஸ்டாலின் தலைமையை ஏற்க தயார். நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்தியா முழுவதும் அவரை பாராட்டிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் மலரட்டும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+