செஸ் போட்டிக்கு வரும் மோடி.. சிப்பாயை நகர்த்திய எடப்பாடி! குதிரையை இறக்கிய ஓபிஎஸ்! டெல்லி குறியே வேற
சென்னை: சென்னையில் நடக்க உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளார். நாளை பிரதமர் மோடி வர உள்ள நிலையில் அவரை நாளை மறுநாள் சந்திக்க ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி ஆகிய இரண்டு தரப்பும் தீவிரமாக முயன்று வருகின்றன.
Recommended Video
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்த வருடம் தமிழ்நாட்டில் நடக்க உள்ளது. நாளை காலை 10 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் இந்த தொடர் தொடங்கி உள்ளது.
இதற்காக பிரதமர் மோடி நாளை சென்னைக்கு வருகிறார். சென்னையில் இந்த தொடருக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.

ஏற்பாடுகள்
நாளை மாலை 6 மணி அளவில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கும் தொடக்க விழா நிகழ்ச்சியில் மோடி கலந்து கொள்கிறார். இந்த நிலையில்தான் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயன்று வருகிறாராம். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆன பின் முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் டெல்லி சென்றார்.ஆனால் இவரை தனியாக சந்திக்க மோடி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

மறுப்பு
எடப்பாடி பழனிசாமியை சந்திக்க பிரதமர் மோடி நேரம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதிமுக மோதல் தொடர்பாக பிரதமர் மோடியிடம் எடப்பாடி பேச திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் சென்னை வரும் மோடியிடம் எப்படியாவது பேச எடப்பாடி முயன்று வருகிறார். இதற்காக தனது சிப்பாய் தம்பிதுரை எம்பியை எடப்பாடி பிரதமர் மோடியிடம் பேசும்படி தூதும் அனுப்பி இருக்கிறார். எடப்பாடி அணியை சேர்ந்த எம்பி தம்பிதுரை நேற்று பிரதமர் மோடியைசந்தித்தார்.

கோரிக்கை
இந்த சந்திப்பில்.. அதிமுக - பாஜக உறவு, சமீபத்திய அதிமுக மாஜிக்கள் வீட்டு ரெய்டுகள், அதிமுகவில் நடந்த மாற்றங்கள் என்று பல விஷயம் பற்றி தம்பிதுரை பேசி இருக்கிறார். அதோடு சென்னையில் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கொடுக்க வேண்டும் என்றும் தம்பிதுரை கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இது போக இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வமும் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு வருகிறாராம்.

நேரம்
சென்னை வரும் அவரை தனது மகன் ரவீந்திரநாத் எம்பியுடன் சேர்ந்து சந்திக்க தனது டெல்லி சோர்ஸ்கள் மூலம் முயன்று வருகிறாராம். இப்படி இவர்கள் இருவரும் முயன்று வந்தாலும் டெல்லியின் பிளான் வேறு என்கிறார்கள் பாஜக தரப்பினர். பிரதமர் மோடி சென்னை வந்தபின் முதல்வர் ஸ்டாலினை சந்திப்பார். பின்னர் செஸ் தொடரின் துவக்க நிகழ்ச்சியில் நீறு உள்விளையாட்டு அரங்கில் கலந்து கொள்வார்.

எங்கே தங்குவார்?
பின்னர் அவர் நிகழ்ச்சி முடித்து மாலை 7.30 மணிக்கு ஆளுநர் மாளிகை சென்று அங்கு இரவு முழுக்க ஓய்வு எடுப்பார். இதில் ஆளுநர் ரவி, பாஜக தலைவர்களை அவர் சந்திப்பார். மறுநாள் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பின்னர் மீண்டும் டெல்லி செல்வார். இதில் அவர் வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க போவது இல்லை. ஓபிஎஸ், எடப்பாடி இரண்டு பேரையும் அவர் சந்திக்க போவது இல்லை.. பாஜக தலைவர்களை மோடி சந்திக்கவே அதிகம் வாய்ப்பு உள்ளது. அதிமுகவினருக்கு நேரம் கொடுக்க வாய்ப்பே இல்லை என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications