'நடிகர் திலகம்'..... 'நடிப்புச் சக்கரவர்த்தி'... சிவாஜி கணேசன் குறித்து ஓபிஎஸ் புகழாரம்
சென்னை: நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தமிழ்த் திரையுலக நடிப்புச் சக்கரவர்த்தி என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார்.
Recommended Video
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற அரசு நிகழ்ச்சிகளை புறக்கணித்து எதிர்ப்பு காட்டினார் ஓபிஎஸ். பின்னர் ராஜினாமா செய்யும் முடிவுக்கும் போனார்.
ஆனால் அப்படி எல்லாம் ராஜினாமா செய்தாலும் யாரும் எதையும் கண்டுகொள்ளமாட்டார்கள்; உள்ளதும் போய்விடும் என கேபி முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஓபிஎஸ்-க்கு அட்வைஸ் செய்தனர். இதன் பின்னர் தனது முடிவை ஓபிஎஸ் மாற்றிக் கொண்டார்.

அரசு நிகழ்ச்சிகளில் ஓபிஎஸ்
தேசிய கொடியை காரில் இருந்து கழற்றியதையும் மீண்டும் மாட்டவும் சொல்லிவிட்டார். சென்னையில் நேற்று அரசு நிகழ்ச்சிகளில் உடனடியாக ஓபிஎஸ் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து அரசு தொடர்பான எந்த நிகழ்ச்சிகளையும் ஓபிஎஸ் புறக்கணிப்பது இல்லை என முடிவெடுத்திருக்கிறார்.

ஆக்டிவ் அரசியலாம்
அதாவது காலாட்டிக் கொண்டே இருக்க வேண்டும் இல்லையெனில் ஆளே இல்லை என்று சொல்லிவிடுவார்கள் என்கிற பழமொழிக்கு ஏற்ப, அதிமுக அரசாங்கத்தில் தாம் ஆக்டிவ்வாக இருப்பதாக காட்டிக் கொண்டு வருகிறார் ஓபிஎஸ். இன்றும்கூட சிவாஜிகணேசன் பிறந்த நாளை முன்னிட்டு படுதீவிரமாக செயல்பட்டு வருகிறார் ஓபிஎஸ்.

சிவாஜி கணேசனுக்கு புகழாரம்
இன்று காலையிலேயே தமது ட்விட்டர் பக்கத்தில், செவாலியர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரிய தமிழ்த்திரையுலக நடிப்புச் சக்கரவர்த்தி மறைந்த நடிகர்திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களின் 93-வது பிறந்தநாளில் அவரை நினைவுகூர்ந்து வணங்குகிறேன் என ஓபிஎஸ் பதிவிட்டிருந்தார்.

சிவாஜி மணிமண்டபத்தில் ஓபிஎஸ்
பின்னர் மீண்டும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 93-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (1.10.2020) சென்னை அடையாறு சிவாஜி கணேசன் அவர்களின் மணிமண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய போது.. என படங்களுடன் இன்னொரு ட்விட்டரையும் வெளியிட்டிருக்கிறார் ஓபிஎஸ்.
நடிகர் திலகம்- நடிப்பு சக்கரவர்த்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications