மாட்டிக்கிச்சே! டெல்லியில் "கொட்டித்தீர்த்த" எடப்பாடி! "புண்ணியம் தேடி போகணும்".. ஓபிஎஸ் பரபர முடிவு
சென்னை: எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றுள்ள நிலையில் ஓ பன்னீர்செல்வம் இன்னொரு திட்டம் ஒன்றை வகுத்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக உட்கட்சி மோதல் உச்சத்தில் இருக்கும் நிலையில் திடீர் திருப்பமாக நேற்று எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். நேற்று முதல் இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார்.
இந்த நிலையில்தான் நேற்று அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். சுமார் 20 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது.
அதிமுக பாஜக இடையே கடந்த சில வாரங்களாக மனஸ்தாபம் இருப்பதாக செய்திகள் வந்தன. முக்கியமாக எடப்பாடி பழனிசாமிக்கும் - பாஜகவிற்கும் இடையில் மனஸ்தாபம் இருப்பதாக செய்திகள் வந்தன. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

எடப்பாடி
நேற்று இந்த சந்திப்பில் மனசில் இருந்ததை எல்லாம் எடப்பாடி கொட்டித்தீர்த்தாக கூறப்படுகிறது. முதல் விஷயம், அவர் பாஜகவுடன் நட்பாக மீண்டும் புதுப்பிக்கும் வகையில் அமித் ஷாவிடம் பேசியதாக கூறப்படுகிறது. அதிமுக - பாஜக கூட்டணி தொடரலாம் என்று மறைமுகமாக அவர் அமித் ஷாவிடம் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இரண்டாவது விஷயம் திமுக பற்றி அமித் ஷாவிடம் எடப்பாடி பற்ற வைத்ததாகவும் கூறப்படுகிறது. அதாவது திமுக பற்றி புகார்களை அடுக்கியதாக கூறப்படுகிறது.

மாஜி அமைச்சர்
எங்கள் மாஜி அமைச்சர்கள் மீது திமுக உத்தரவின் பெயரில் லஞ்ச ஒழிப்புத்துறை அடுத்தடுத்து ரெய்டுகளை நடத்துகிறது. ஆனால் அவர்கள் பல டெண்டர்களை எடுக்கிறார்கள். அதை பற்றி விசாரிக்க ஆள் இல்லை. அதை உடனே விசாரிக்க வேண்டும். டெல்லியில் இருந்து தமிழ்நாடு ஆளும் தரப்பிற்கு எதிராக அழுத்தம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்து எடப்பாடி இந்த சந்திப்பில் பேசியதாக கூறப்படுகிறது. அதோடு இது தொடர்பான முக்கியமான கோப்புகளையும் அவர் அமித் ஷாவிடம் கொடுத்து இருக்கிறாராம்.

இதான் எதிர்பார்த்தோம்
அமித் ஷா தரப்பும்.. இதை தானே எதிர்பார்த்தோம் என்று அந்த கோப்புகளை வாங்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் திமுக தரப்பு இதை எல்லாம் பார்த்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. என்ன பெரிதாக நடந்து விடும்? மடியில் கணம் இருந்தால் தானே வழியில் பயப்பட வேண்டும் என்று கூலாக இருக்கிறதாம். நேற்று இந்த மீட்டிங்கில் ஓ பன்னீர்செல்வம் குறித்தும் எடப்பாடி பற்ற வைத்து இருக்கிறாராம்.

மாஜிக்கள்
அதாவது ஓ பன்னீர்செல்வம்தான் திமுகவுடன் நெருக்கமாக இருந்து அதிமுக மாஜிக்கள் பற்றிய விவரங்களை திமுகவிடம் பற்ற வைக்கிறார் என்றும் எடப்பாடி பழனிசாமி இந்த மீட்டிங்கில் கொட்டி தீர்த்தார் என்று கூறப்படுகிறது. இதையடுத்தே அமித் ஷாவை சந்தித்து விளக்கம் அளிக்க ஓ பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளாராம். இதற்காக அவர் விரைவில் நேரம் கேட்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பாக அவர் காசி செல்லும் திட்டத்தில் இருக்கிறார்.

காசி பயணம்
தனது மனைவியின் மரணத்தை அடுத்து சமீபத்தில் ராமேஸ்வரத்திற்கு ஓ பன்னீர்செல்வம் சென்றார். அவர் மனைவியின் அஸ்தி ஏற்கனவே காசியில் கரைக்கப்பட்டது. ஓ பி ரவீந்திரநாத் மூலம் அஸ்தி கரைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் இந்த முறை தனியாக ஓபிஎஸ் காசிக்கு சென்று அங்கு கங்கையில் மூழ்கி வழிபாடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. அங்கிருந்து டெல்லி செல்லும் திட்டத்தில் ஓபிஎஸ் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications