மனசு இறங்காத ஓ பன்னீர்செல்வம்.. பாஜக அழைப்பிற்கு நோ சொன்ன ஓபிஎஸ்.. பிஎல் சந்தோஷ் ஏமாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சிறப்பு விருந்தினராக கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ் வருகை புரிந்தார். இந்த நிலையில் பி.எல் சந்தோஷ் மரியாதை நிமித்தமாக ஓ பன்னீர்செல்வத்தை சந்திக்க அழைப்பு விடுத்தார். ஆனால் அந்த சந்திப்பை தவிர்த்து விட்டார் பன்னீர்செல்வம்.

சென்னையில் தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகளுடன் தேசிய அமைப்புச் செயலாளர் பிஎல் சந்தோஷ் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின் பிஎல் சந்தோஷ் - ஓபிஎஸ் சந்திப்புக்கு ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் வெளியானது. ஆனால் ஓபிஎஸ் தரப்பில் பிஎல் சந்தோஷ் உடனான சந்திப்பு குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை.

BJP O Panneerselvam

பிஎல் சந்தோஷ் ஓ பன்னீர்செல்வம் மீட்டிங்

பிஎல் சந்தோஷ் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில்.. என் ஆதரவாளர்களுடன் பேசிய பின்பே முடிவு எடுக்க முடியும். அதனால் இப்போதைக்கு சந்திக்க முடியாது என்று கூறி அந்த சந்திப்பை தவிர்த்துவிட்டார் பன்னீர்செல்வம் என்று அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக உடன் சமாதானமாக செல்ல ஓ பன்னீர்செல்வம் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

அண்மையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியேறுவதாக அறிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தமிழ்நாடு வந்தபோது, அவரைச் சந்திக்க ஓ. பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், பிரதமரைச் சந்திக்க அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, பல வகையான யூகங்கள் கிளம்பின. இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

பாஜக ஓ.பன்னீர்செல்வம் மோதல்

ஒரு காலத்தில் அதிமுகவில் சசிகலா ஆட்சிக்கு வருவதற்கு எதிராக தர்மயுத்தம் செய்தவர் ஓ பன்னீர்செல்வம். அப்போதில் இருந்தே ஓ பன்னீர்செல்வம் பாஜக உடன் நெருக்கமாக இருந்ததாக செய்திகள் வந்தன. பாஜக தலைவர்களையும் அவ்வப்போது ஓ பன்னீர்செல்வம் சந்தித்து வந்தார். அதன்பின் அதிமுக உடைந்து மீண்டும் ஓ பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி கரம் கோர்க்க பாஜக முக்கியமான காரணமாக இருந்தது. ஓ பன்னீர்செல்வம் அப்போது பாஜக உடன் மேலும் நெருக்கம் ஆனார்.

ஓ பன்னீர்செல்வம் மகன் ஓ பி ரவீந்திரநாத் நாடாளுமன்றத்திலேயே பாஜகவை, மோடியை அவ்வப்போது பெரிய அளவில் புகழ்ந்தும் பேசி வந்தார். நாடாளுமன்றத்தின் பாஜகவின் மசோதாக்களுக்கும் தொடர்ந்து ஆதரவு அளித்தார். அதோடு நிற்காமல் மோடி தமிழ்நாடு வரும்போதெல்லாம் ஓ பன்னீர்செல்வம் காத்திருந்து வரவேற்றார்.

அதன்பின் அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்ட பின் எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம் இடையே நீண்ட சட்ட போராட்டம் நடந்தது. இருவருக்கும் இடையே மிக நீண்ட சட்ட போராட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்து டெல்லி ஆதரவு தனக்கு கிடைக்கும் என்று நம்பினார். டெல்லி பாஜக ஆதரவு கிடைத்தால் .. வழக்கில் வெல்ல முடியும் என்றும் ஓ பன்னீர்செல்வம் நம்பினார். ஆனால் அதிமுக தொடர்பான அனைத்து வழக்கிலும் ஓ பன்னீர்செல்வம் தோல்வியையே தழுவினார். இப்படி ஓ பன்னீர்செல்வம் தொடர்ச்சியாக பாஜகவையும், மோடியையும் நம்பியே இருந்தார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் அதே பாஜகவுடன் ஓ பன்னீர்செல்வம் கூட்டணியை முறித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தமிழ்நாடு வந்தபோது, அவரைச் சந்திக்க ஓ. பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், பிரதமரைச் சந்திக்க அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. எடப்பாடியை சந்தித்த மோடி.. எடப்பாடிக்கு முக்கியத்துவம் கொடுத்த மோடி ஓ பன்னீர்செல்வத்தை சந்திக்கவில்லை. அதோடு எடப்பாடிதான் கூட்டணியின் தலைவர், முதல்வர் வேட்பாளர் என்று அமித் ஷா அறிவித்ததையும் ஓ பன்னீர்செல்வம் விரும்பவில்லை. இப்படி நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் கூட்டணியை குறித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+