இரவோடு இரவாக ஹோட்டலில் நடந்த ஓபிஎஸ் & பாஜக மீட்டிங்.. கைமாறிய ‘சீட்’ பட்டியல்.. நாளை மீண்டும் பேச்சு
சென்னை: லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் பாஜகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் பாஜகவினருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஓபிஎஸ்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலையில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதை எதிர்த்து ஓபிஎஸ் சட்டப் போராட்டங்கள் நடத்தியும் அவருக்கு சாதகமான நிலை ஏற்படவில்லை.

அதிமுக எனும் கட்சி பெயரையும், லெட்டர் பேடையும், இரட்டை இலை சின்னத்தையும் ஓபிஎஸ் பயன்படுத்தவும் தடை பெற்றார் எடப்பாடி பழனிசாமி. இதன் காரணமாக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.
ஓபிஎஸ் - பாஜக கூட்டணி: இந்நிலையில், மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கு நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தயார்படுத்துவது, தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக தனது ஆதரவாளர்களை அண்மையில் ஆலோசித்த ஓபிஎஸ், பாஜகவுடன் தான் கூட்டணி என உறுதியாகத் தெரிவித்தார்.
பாஜகவை முழுமையாக ஆதரிப்பதாகவும் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக சிறப்பான ஆட்சியை தந்துள்ளது என்றும், மீண்டும் மோடியே பிரதமராக வரவேண்டும் என்றும் கூறி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் அணி சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்களையும் பெற்றார் ஓபிஎஸ்.
ஓபிஎஸ் அணி: மேலும், பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழுவை அமைத்து அண்மையில் ஓபிஎஸ் உத்தரவிட்டார். இந்தக் குழுவில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர், தர்மர், கு.ப.கிருஷ்ணன், புகழேந்தி, மருது அழகுராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்தினார் ஓ.பன்னீர்செல்வம். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், “நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்க்காணல் நடத்தப்பட்டுள்ளது.” என்றார்.

இன்று.. இப்பொழுதே: மேலும், “கடந்த 10 ஆண்டுகளாக மோடி தலைமையில் சிறப்பான அரசு நடைபெற்று வருகிறது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம். பாஜகவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தச் செல்கிறேன். இன்று இப்பொழுது அதற்குத்தான் சென்று கொண்டிருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
நேரா இறங்கிய 2 டெல்லி 'தலைகள்’.. ஓபிஎஸ் உடன் மீட்டிங்.. அப்படியே பாஜக மேலிடத்துக்கு சிக்னல்!?
பாஜகவினருடன் பேச்சு: இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினர் உடனடியாக சென்னை கிண்டியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலுக்குச் சென்றனர். ஓபிஎஸ் உடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர், புகழேந்தி, வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் சென்றனர். அங்கு பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள், ஓபிஎஸ் மற்றும் அவரது அணியினரை வரவேற்று அழைத்துச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து, ஓபிஎஸ் உடன் பாஜக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், கிஷன் ரெட்டி, விகே சிங், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஓபிஎஸ் தரப்பு விருப்ப தொகுதிகள் பட்டியலை அளித்துள்ளது.
ஓபிஎஸ் பேட்டி: பாஜக குழுவினர் உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய ஓபிஎஸ், "பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவினர் எங்கள் கோரிக்கைகளை கவனமாக கேட்டறிந்தனர். எங்கள் விருப்ப தொகுதிகளின் பட்டியலை பாஜகவிடம் அளித்துள்ளோம்.
பேச்சுவார்த்தை சுமூகம்: கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் ஆலோசித்து பிறகு தெரிவிப்பதாக பாஜக கூறியுள்ளது. முதலாவதாக எங்களிடம் தான் பாஜக விவரங்களை கேட்டுப் பெற்றுள்ளது. எந்தப் பிரச்சனையும் இன்றி தொகுதிப் பங்கீடு சுமூகமாக நடைபெற வேண்டும் என விரும்புகிறோம்.
பாஜகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடக்கிறது. பாஜகவுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். லோக்சபா தேர்தல் தொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனையும் பாஜக குழு அழைத்துப் பேச உள்ளது" என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications