'உளமார' என்று சொல்லி பதவியேற்ற ஓபிஎஸ்! ஜெயலலிதா காலத்தில் இந்த வழக்கமே இல்லையே!
சென்னை: அதிமுகவில் இருந்தபோது ஓ.பன்னீர்செல்வம் கடவுள் பெயரால் பதவியேற்று வந்திருந்தார். தற்போது திமுகவில் இணைந்திருப்பதால், அவர் 'உளமார' என்று சொல்லி பதவி ஏற்றிருக்கிறார். அவரது சட்டை பாக்கெட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் படம் இடம் பெற்றிருக்கிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த 60 ஆண்டுகளாக திராவிட கட்சிகளின் ஆட்சிதான் நடைபெற்று வந்தது. இதில் அதிமுகவினர் பதவியேற்கும்போது கடவுள் மீது ஆணை என்று சொல்லியும், திமுகவினர் பதவியேற்கும்போது உளமார என்று சொல்லியும்தான் பதவியேற்றுக்கொள்வார்கள்.

இப்படி இருக்கையில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று எம்எல்ஏவாக பதவியேற்கும்போது திமுகவினர் கூறும் உளமார என்கிற வார்த்தையை பயன்படுத்தி பதவியேற்றுக் கொண்டிருக்கிறார். அவர் இப்படி சொல்லி பதவியேற்பது இதுவே முதல்முறை என்றும் சொல்லப்படுகிறது.
மறுபுறம் முதல் எம்எல்ஏவாக பதவியேற்ற முதலமைச்சர் விஜய், அவரை தொடர்ந்து அடுத்தடுத்து எம்எல்ஏக்களாக பதவியேற்ற அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் உளமார என்று கூறி பதவியேற்றிருக்கின்றனர். இவர்களை தொடர்ந்து எம்எல்ஏவாக பதவயேற்ற உதயநிதி ஸ்டாலினும் உளமார என்று கூறி பதவியேற்றிருக்கிறார்.
உளமார என்கிற வார்த்தையை பயன்படுத்தியதன் மூலம், திமுகவுக்கு மாற்று நாங்கள்தான், நாங்களும் மதச்சார்பற்ற அரசை முன்னெடுக்கப்போகிறோம் என்பதை சிமபாளிக்காக விஜய் தெளிவுப்படுத்தியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications