''விஷயம் தெரியாம பேசாதே! கோர்ட் கூண்டில் ஏற்றிடுவோம்''! அண்ணாமலைக்கு வார்னிங் தந்த ஓபிஎஸ் டீம்!
சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரம் பற்றி எதுவும் தெரியாத அண்ணாமலை, தேவையின்றி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மிகக் காட்டமாக எச்சரிக்கை கொடுத்துள்ளது.
இதைப் படிப்பவர்களுக்கு என்னாது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஓ.பன்னீர்செல்வம் அணி எதிர்க்கிறதா? என்ற ஆச்சரியமும் கேள்வியும் எழும். ஆனால் அது தான் உண்மை. ஆம், ஓபிஎஸ் அணியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களான பெங்களூர் புகழேந்தியும், மருது அழகுராஜூம் அண்ணாமலையை வார்த்தைகளால் வெளுத்து எடுத்துவிட்டனர்.

இதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் என்றும் ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் முதலமைச்சர் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டதே ஆகும். இதனிடையே இது குறித்து பிரஸ்மீட் நடத்திய பெங்களூர் புகழேந்தி, அண்ணாமலை இனியும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டால் சட்ட நடவடிக்கை பாயும் என்றார்.
அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி கோர்ட் கூண்டில் அவர் நிற்க வேண்டிய சூழல் வரும் எனவும் புகழேந்தி எச்சரித்தார். மேலும் தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறது என்று தெரியாமல் ''நீ பேசக்கூடாது'' என அண்ணாமலையை சாடினார் பெங்களூர் புகழேந்தி. அண்ணாமலைக்கு ஒன்றும் தெரியவில்லை என்பது தான் உண்மை என்றும் அதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் எச்சரித்தார்.
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் அண்ணாமலை தலையிடக் கூடாது என்பதை சற்று சீரியஸாக எச்சரிக்கும் தொணியிலேயே பேசினார் பெங்களூர் புகழேந்தி. இவர் இவ்வாறு இப்படி பேசிகிறார் என்றால் நிச்சயம் அது ஓ.பன்னீர்செல்வத்தின் அனுமதியின்றி நடந்திருக்க வாய்ப்பேயில்லை. அண்ணாமலை மீதான தனது அதிருப்தியை ஓபிஎஸ் தான் இப்படி தனது அணி பிரமுகர்கள் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறாரோ எனக் கருதத் தோன்றுகிறது.
அதேபோல் ராமேஸ்வரத்தில் அண்ணாமலையின் பாதயாத்திரை தொடக்க விழா நிகழ்விலும் ஓ.பன்னீர்செல்வம் தலைகாட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications