ஒரே தீர்ப்பு! சரிந்த எடப்பாடியின் ’கனவு’ கோட்டை! இனி எதிர்கட்சி து.தலைவர், பொருளாளர் எல்லாமே ஓபிஎஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஒருங்கிணைப்பாளர் பதவி, பொருளாளர் பதவி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி அனைத்தும் மீண்டும் ஓபிஎஸ்ஸிடமே தங்கியுள்ள நிலையில், வங்கிகளை கையாளும் அதிகாரமும் அவருக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையை அடுத்த வானகரத்தில் கடந்த 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்த பொருளாளர் பதவி பறிக்கப்பட்டது. மேலும் திண்டுக்கல் சீனிவாசன் புதிய அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

தான் பொருளாளராக தொடர்வதாக ஓ.பன்னீர் செல்வம் கூறிய, நிலையில் அதிமுக வங்கி கணக்குகள் உள்ள கரூர் வைஸ்யா, இந்தியன் வங்கி மேலாளர்களுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் சீனிவாசன்

அதில், ‘அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிமுகவின் வரவு-செலவு கணக்குகளை இனி திண்டுக்கல் சீனிவாசன் மேற்கொள்வார்' என கடிதத்தில் எடப்பாடி கூறி இருந்தார். இதற்கு ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக வங்கிகளுக்கு பதில் கடிதம் அனுப்பினார். அதன்படி கரூர் வைஸ்யா மற்றும் இந்தியன் வங்கி மேலாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில், ‘அதிமுக வரவு-செலவு கணக்கை தன்னை கேட்காமல் மேற்கொள்ளக் கூடாது.

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

இந்திய தேர்தல் ஆணைய சட்டப்படி இன்று வரை நானே அதிமுக பொருளாளராக உள்ளேன். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் தன்னை கேட்காமல் எந்த வரவு-செலவு கணக்கையும் மேற்கொள்ளக் கூடாது. இதையும் மீறி, என்னை கேட்காமல் வரவு-செலவு கணக்கை மேற்கொண்டால் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கடிதத்தில் கூறியுள்ளார். அதிமுக பொருளாளர் பதவி தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஆகியோர் தனித்தனியாக வங்கிகளுக்கு எழுதிய போட்டி கடிதத்தால் பரபரப்பு மற்றும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ரூ.300 கோடி வரை இருப்பு

ரூ.300 கோடி வரை இருப்பு

காரணம், அதிமுக சார்பில் இந்த இரண்டு வங்கிகளிலும் சுமார் ரூ.300 கோடி வரை இருப்பு உள்ளது. கரூர் வைஸ்யா வங்கியில் மட்டும் சுமார் ரூ.200 கோடிக்கு மேல் நிரந்தர வைப்பு தொகை உள்ளது. இவ்வளவு பெரிய தொகையை கையாளுவதில்தான் தற்போது, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இரண்டு பேருக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளதால் வங்கிகள் குழப்பம் அடைந்தன. இந்நிலையில் தற்போதைய தீர்ப்பின் மூலம் ஓபிஎஸ்ஸே அதிமுக பொருளாளர், ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் மீண்டும் ஓபிஎஸ் கையில் கிடைத்துள்ளன.

Recommended Video

    OPS வசமான அதிமுக
     மீண்டும் அதிகாரம்

    மீண்டும் அதிகாரம்

    இந்தத் தீர்ப்பின் காரணமாக அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டதும், அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்பி உதயகுமார் அறிவிக்கப்பட்டதும் செல்லாததாக ஆகிவிட்டது. இதன் மூலம் பொருளாளர் என்ற வகையில் அதிமுகவின் வங்கி கணக்குகள் செக் வழங்கும் அதிகாரம் செக்கில் கையெழுத்திடும் அதிகாரம் ஆகியவை மீண்டும் ஓபிஎஸ் தரப்புக்கு கிடைத்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் சீனிவாசன் வங்கிகளுக்கு அனுப்பிய காசோலைகளும் செல்லாததாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+