சசிகலாவை மிக விரைவில் நேரில் சந்திக்கும் ஓ.பன்னீர்செல்வம்! முழுவீச்சில் களமிறங்கிய ஓ.ராஜா!
சசிகலா ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு மிக விரைவில் நடைபெறலாம்.
சென்னை: சசிகலா -ஓ.பன்னீர்செல்வம் இடையேயான சந்திப்பு மிக விரைவில் நடைபெறலாம் என்பதால் மீண்டும் பரபரப்பு பற்றிக் கொண்டுள்ளது.
இதற்கான் ஏற்பாடுகளை ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா முழுவீச்சில் களமிறங்கி கவனித்து வருகிறாராம்.
யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் சந்திக்கட்டும், தங்களுக்கு ஒரு பாதிப்பும் வரப் போவதில்லை எனக் கூறுகிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு.

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வந்தது முதல் மனமுடைந்த நிலையில் காணப்படும் ஓ.பன்னீர்செல்வம் சென்னையை தவிர்த்து பெரும்பாலும் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தான் இருந்து வருகிறார். பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வந்ததை தொடர்ந்து தனது அணியிலிருந்து ஒவ்வொருவராக உருவிக் கொண்டு சென்றதை கண்டு அவருக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது. இதனிடையே ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வத்தையும், சசிகலாவை சந்திக்க வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட ஓ.ராஜா மீண்டும் அந்த முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்
வழக்கம் போல் இந்த விவகாரத்திலும் யோசித்துக் கொண்டே இருந்த ஓ.பன்னீர்செல்வத்திடம், இனியும் யோசிக்க ஒன்றுமில்லை எனக் கூறி அவர் தான் சசிகலாவை சந்திக்க சம்மதிக்க வைத்திருக்கிறார். இதைத் தொடர்ந்து தான் நேற்றிரவு மதுரை விமான நிலையத்தில் மிகவ் வெளிப்படையாக சசிகலாவை சந்திப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்ததற்கு காரணமாகும். திருச்செந்தூரில் வைத்து சசிகலாவை ஏற்கனவே நேரில் சந்தித்து பேசியவர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா.

ஓ.ராஜா
அதேபோல் ஓ.ராஜாவுக்கு டிடிவி தினகரனும் தொடர்பில் தான் இருந்து வருகிறார். கடந்தாண்டு நடைபெற்ற தினகரன் மகள் திருமணத்துக்கு நேரில் சென்று வாழ்த்தி வந்தவர் ஓ.ராஜா. இதனால் இனி வரும் நாட்களில் மீண்டும் ஒரு அரசியல் பரபரப்பு உருவாகலாம் எனத் தெரிகிறது. இதனிடையே யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் சந்திக்கட்டும், தங்களுக்கு ஒரு பாதிப்பும் வரப் போவதில்லை எனக் கூறுகிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு.

குழப்பத்தில் பிரமுகர்கள்
ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ல முக்கியப் பிரமுகர்கள் பலர் இனி அடுத்ததாக என்ன நிலைப்பாடு எடுப்பது எனத் தெரியாமல் தவித்து வருகிறார்களாம். குறிப்பாக மத்திய மாவட்டத்தை சேர்ந்த மாஜி அமைச்சர் ஒருவர் தனது அரசியல் குருநாதரான டெல்டா பிரமுகரிடம் எதிர்காலம் நொந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications