Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓபிஎஸ் ‘பல்டி’.. இந்த ட்விஸ்ட்டை யாருமே எதிர்பார்க்கலயே.. அப்போ இத்தனை நாளா சொன்னதெல்லாம் பொய்யா?

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கினால் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது ஓபிஎஸ் தரப்பு. அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் எனக் கூறிவந்த ஓபிஎஸ் தரப்பு, தற்போது பொதுச் செயலாளர் தேர்தலில் களமிறங்க தயார் எனக் கூறியிருப்பது அதிமுகவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அதிமுக பொதுக்குழு தீர்மானம் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்குகளின் விசாரணை நேற்று 7 மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையின்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு மாற்றி மாற்றி 'பல்டி' அடித்தது அதிமுகவினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ் தரப்பு வழக்குகள்

ஓபிஎஸ் தரப்பு வழக்குகள்

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆவதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கலும் முடிந்துள்ளது. இந்த பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓபிஎஸ் தரப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி குமரேஷ்பாபு முன்பு இந்த வழக்குகளில் நேற்று மீண்டும் விசாரணை நடந்தது.

தேர்தலுக்கு தடை

தேர்தலுக்கு தடை

ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டதாக எந்த நீதிமன்றமும் அறிவிக்கவில்லை. ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருக்கிறது. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் பதிலளிக்க உத்தரவிட்ட அதே நாளில் பொதுச் செயலாளர் தேர்தல் அறிவித்த காரணத்துக்காகவே தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியைவிட்டு காலாவதி ஆகிவிட்டதாக சொல்வதை எப்படி ஏற்க முடியும் என வாதங்களை வைத்தார்.

எடப்பாடிக்காகவே

எடப்பாடிக்காகவே

பொதுச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி எட்டுவதற்காக அவருக்கு ஆதரவாக விதிகள் திருத்தப்பட்டு இருக்கின்றன. பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட அனைத்து உறுப்பினர்களுக்கும் உரிமை உண்டு என கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர் வகுத்த விதிகளை மீறும் வகையில், வேறு யாரும் போட்டியிடாதவாறு இடைக்கால பொதுச் செயலாளர் பதவி தேர்தலுக்கான விதிகளை கொண்டு வந்திருக்கிறார்கள். இதற்காகத் தான் ஓபிஎஸ் உள்ளிட்ட கட்சியின் முக்கியப் பதவிகளில் இருக்கும் நபர்களை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர். கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச் செயலாளர் பதவியை தேர்வு செய்ய முடியும்.

போட்டியிட தயார்

போட்டியிட தயார்

பொதுச் செயலாளர் பதவிக்கு யார் தகுதியானவர்கள் என்பதை தொண்டர்கள் முடிவு செய்யட்டும். அந்த விதியை பொதுக்குழு உறுப்பினர்கள் திருத்த முடியாது. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கினால் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட ஓபிஎஸ் தயார் என்றும், வழக்கையும் வாபஸ் பெற தயார் என்றும் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதத்தை எடுத்து வைத்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்குகளின் இடைக்கால கோரிக்கைகள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார் நீதிபதி.

நிரந்தர பொதுச் செயலாளர் ஜெ?

நிரந்தர பொதுச் செயலாளர் ஜெ?

ஜெயலலிதா தான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர். அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். அவர் வகித்த பதவியை வகிக்க வேறு யாருக்கும் தகுதி இல்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொடர வேண்டும் என்பதே எங்கள் முடிவு என தொடர்ந்து ஓபிஎஸ் அணியினர் கூறி வந்த நிலையில், திடீர் ட்விஸ்ட்டாக, 'பொதுச் செயலாளர் தேர்தலுக்கான நிபந்தனைகளை நீக்கினால் ஓபிஎஸ் போட்டியிட தயார்' என அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமியைப் போல, ஜெயலலிதாவுக்கான பதவியில் ஓபிஎஸ்ஸும் போட்டிக்கு வந்துவிட்டாரா என்ற பேச்சுகள் எழுந்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+