டக்குனு சொல்லுங்க.. ’பனையூர்’ ரெடியா இருக்கு! விஜயை காட்டி பூச்சாண்டி அரசியல்! ஓபிஎஸ் போட்ட கணக்கு!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட தனிமைப்படுத்தப்பட்ட நிலைக்கு சென்று இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டும், பாஜகவும் கண்டுகொள்ளாத நிலையில் தற்போது என்ன செய்வது என தெரியாமல் புலம்புவதாக சொல்கின்றனர். இந்த நிலையில் விஜய் கூட்டணிக்கு அழைக்கிறார் என பூச்சாண்டி அரசியல் செய்து அதிமுகவில் இணையும் முடிவுக்கு ஓபிஎஸ் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. காங்கிரஸ் திமுகவிடம் பேசுவது போலவே ஓபிஎஸ்சும் விஜய்யை காரணம் காட்டி பாஜகவுடன் பேரம் பேசுகிறார் என்கின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. கட்சிகளுக்குள் மட்டுமல்ல, கூட்டணி வட்டாரங்களிலும் பரபரப்பான நகர்வுகள், யூகங்கள், 'பூச்சாண்டி' அரசியல் என பல்வேறு நாடகங்கள் அரங்கேறி வருகின்றன.
அந்த வகையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்பான அரசியல் யூகங்காள் தற்போது மீண்டும் தீவிரமாக பேசப்படுகின்றன. அதிமுகவில் இருந்தும், பாஜக கூட்டணியில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது தான் அது.

ஓபிஎஸ் அரசியல்
விஜய்யை முன்வைத்து பாஜகவுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதே ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் தற்போதைய யுக்தி என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வேகமாக வளர்ந்து வருவதாகச் சொல்லப்படும் நிலையில், விஜய்யுடன் இணைகிறார் ஓபிஎஸ் என்ற தகவலை திட்டமிட்டு பரப்பி, அதன்மூலம் டெல்லி பாஜகவின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
விஜய் ஃபேக்டர்
டெல்லி தரப்பில், பன்னீர்செல்வத்தை நேரடியாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்த்துக்கொள்வதற்குப் பதிலாக, ஒரு தனிக் கட்சி வடிவில் அவரை கொண்டு வர வேண்டும் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக, காஞ்சிபுரம் ரஞ்சித் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள 'எம்.ஜி.ஆர் அ.தி.மு.க' என்ற கட்சியை பயன்படுத்தும் திட்டம் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக வெற்றிக் கழகம்
அந்தக் கட்சியில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு முக்கிய பொறுப்பு வழங்கி, பின்னர் அவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே, "ஓ.பி.எஸ்-ஸிடம் செங்கோட்டையன் ஏற்கனவே பேசியுள்ளார். விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக கூட்டணியில், பன்னீர் தரப்புக்கு 10 முதல் 12 தொகுதிகள் வரை ஒதுக்கத் தயாராக இருக்கிறார்கள்" என்ற தகவல் பாஜக தலைமையகமான கமலாலயம் வரை கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது.
பாஜக கூட்டணி
இந்த தகவல்களின் நோக்கம் ஒன்றே ஒன்று தான். அது டெல்லி பாஜக தலைமையை இறங்கி வரச் செய்து, ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அ.தி.மு.க-வில் இணைத்துக் கொள்ள எடப்பாடி அழுத்தம் கொடுப்பது. இதுதான் ஓபிஎஸ் விசுவாசிகளின் அரசியல் கணக்கு என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். ஆனால், களத்தில்நிலவும் அரசியல் யதார்த்தம் இதற்கு முற்றிலும் மாறானது. விஜய்யிடம் சேர்ந்துவிடுவதாக மிரட்டல் அரசியல் செய்தவர்களும், தற்போது செய்து வருபவர்களும், உண்மையில் விஜய்யின் தலைமையை ஏற்கத் தயாராக இல்லை என்பதே வெளிப்படையான உண்மை.
அரசியல் "பூச்சாண்டி"
விஜய்யை ஒரு அரசியல் "பூச்சாண்டி"யாக பயன்படுத்தி, தங்களுக்கான இடத்தைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சிப்பதே பலரின் நோக்கம் என சொல்லப்படுகிறது. இதையே தான் காங்கிரஸும் செய்து வருகிறது. இதுவரை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை நேரடியாக சந்தித்த ஒரே கூட்டணி கட்சி தலைவர் என்றால், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா மட்டுமே. இதனால், விஜய் தலைமையிலான கட்சியுடன் பெரிய கட்சிகள் மூலம் கூட்டணி பேச்சுகள் பேசப்படுகின்றன என்ற தகவல்களுக்கு தற்போது எந்தத் திடமான ஆதாரமும் இல்லை.
2026 தேர்தல்
மொத்தத்தில், ஓ. பன்னீர்செல்வம் தரப்பு அரசியல் என்பது இப்போது முழுக்க முழுக்க யூகங்கள், போலி தகவல்களை கசியவிடுவது என நகர்கிறது. விஜய்யை முன்னிறுத்தி டெல்லியை அச்சுறுத்துவது ஒரு பக்கம், அ.தி.மு.க-விற்குள் மீண்டும் இடம் பிடிக்க முயல்வது இன்னொரு பக்கம். 2026 தேர்தல் நெருங்க நெருங்க, இப்படியான பூச்சாண்டி அரசியல் இன்னும் அதிகமாகவே காணப்படும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இறுதியில் யார் யாருடன் கை கோர்ப்பார்கள் என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications