இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு? இடியாய் விழுந்த தீர்ப்பு! டெல்லிக்கு பறக்கும் ஓபிஎஸ் & கோ! அதே தான்!
சென்னை : கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டு உள்ள நிலையில், கடும் பின்னடைவைச் சந்தித்துள்ள ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமாகி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், அதற்கான தீர்ப்பை இரு தரப்பினருமே ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் இருதரப்புமே கடைசி கட்ட பரபரப்புகளுக்கிடையே இரு நீதிபதிகள் இன்று தங்கள் தீர்ப்பை வழங்கினர்.

அதிமுக பொதுக்குழு
முன்னதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில்," நீதிமன்றத்தில் தனி நீதிபதியின் தீர்ப்பில் பல்வேறு தவறுகள்
இருப்பதாக சுட்டிக்காட்டினர். கட்சியினர் ஒற்றை தலைமை வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாக கூறியதற்கு எந்த புள்ளி விவரங்களும் இல்லை எனவும், ஒன்றரை கோடி உறுப்பினர்களின் எண்ணத்தை 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா என தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது யூகத்தின் அடிப்படையிலானது எனவும் வாதிட்டனர்.

உத்தரவு ரத்து
இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தனர். ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் எனவும் தீர்ப்பளித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு பலத்த உற்சாகத்தில் இருக்கிறது. காரணம் உயர்நீதிமன்ற தனி நீதிபதியிம் தீர்ப்பு காரணமாக ஓபிஎஸ் தரப்பில் சில நிர்வாகிகள் தாவி வந்தனர். மேலும் அவருக்கு ஆதரவு அளிக்கும் பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

ஓபிஎஸ்க்கு பின்னடைவு
இந்நிலையில் தற்போது வந்திருக்கும் தீர்ப்பு ஓபிஎஸ் தரப்புக்கு அதிமுகவில் மீண்டும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியின் கை மீண்டும் ஓங்கி இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு செல்லலாம் என காத்திருந்த நிர்வாகிகள் தங்கள் முடிவை நிறுத்தி வைத்துள்ளனர். கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மிகவும் உற்சாகத்தில் காணப்பட்ட ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் தற்போது கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். நிறைய நிர்வாகிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை என ஓபிஎஸ் தரப்பு புலம்பி வருகிறது. இதனுடைய இந்த தீர்ப்பு குறித்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மேல்முறையீடு
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை பொருத்தவரை தற்போதைய அமர்வு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இணையான அதிகாரம் கொண்ட அமர்வாக கருதப்படுகிறது. எனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையில் செய்தாலும் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கே சாதகமாக தீர்ப்பு வர வாய்ப்பு இருப்பதால் ஓபிஎஸ் தரப்பு டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர் மேலும் தற்போதைய பின்னடைவை எப்படி சரி கட்டுவது என்பது குறித்தும் ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications