ஆஹா.. ஆளுநர் பதவியா.. சட்டென ஓ பன்னீர்செல்வம் கொடுத்த ரியாக்சன்.. ப்பா கேப்பே கொடுக்கலையே!
பல பாஜக தலைவர்கள் இன்னும் சிபிஆருக்கு வாழ்த்து சொல்லாத நிலையில் ஓ பன்னீர்செல்வம் முதல் ஆளாக வாழ்த்து சொல்லி இருக்கிறார்.
சென்னை: இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு ஆளுநர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் இது தொடர்பாக முக்கியமான போஸ்ட் ஒன்றை செய்துள்ளார்.
அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில் பாஜகவுடன் ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்து நெருக்கம் காட்டி வருகிறார். உதாரணமாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக அதிமுக ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக செந்தில் முருகன் என்பவரை அவர்கள் தரப்பு களமிறக்கியது.
பாஜக சார்பாக வேட்பாளராக களமிறக்கப்பட்டால் எனது வேட்பாளரை வாபஸ் வாங்கிக்கொள்வேன் என்று ஓ பன்னீர்செல்வம் வெளிப்படையாக பேசினார். தனக்கு கிடைத்த இடங்களில், வாய்ப்புகளில் எல்லாம் ஓ பன்னீர்செல்வம் பாஜகவுடன் தன்னை நெருக்கமாக காட்டிக்கொண்டு உள்ளார்.

ஈரோடு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் நேரடியாக சென்று அண்ணாமலையை சந்தித்தது, அதன்பின் குஜராத்தில் பாஜக தலைவர்களை சந்தித்தது என்று ஓ பன்னீர்செல்வம் பாஜகவுடன் நெருக்கமாக இருந்தார். இந்த நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக கே. எஸ் தென்னரசு போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பு நிறுத்திய வேட்பாளர் செந்தில் வாபஸ் வாங்கிய நிலையில், எடப்பாடி தரப்பு மட்டும் வேட்பாளரை இரட்டை இலை சின்னத்திற்கு கீழ் நிறுத்துகிறது. இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்பதால் ஓ பன்னீர்செல்வம் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த நிலையில்தான் ஓ பன்னீர்செல்வத்திற்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளருக்கு பாஜகவும் ஆதரவு அளித்துள்ளது.

அண்ணாமலை
அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக சட்டபூர்வ அதிமுக வேட்பாளரை முன்னிறுத்தி இருக்கும், இடைக்காலப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமிக்கும், பொதுநலன் கருதி, கூட்டணியின் நன்மை கருதி, தங்களது வேட்பாளரை வாபஸ் பெற்றிருக்கும் அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன், என்று கூறி உள்ளார். அதாவது எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளர் என்றும், ஓபிஎஸ்ஸை வெறும் அண்ணன் என்றும் அண்ணாமலை அழைத்துள்ளார். இதன் மூலம் பாஜக ஆதரவு எங்கே எடப்பாடிக்கு கிடைத்துவிட்டதோ என்று கேள்வி எழுந்துள்ளது.

பாஜக எடப்பாடி
பாஜக - எடப்பாடி நெருக்கமாகி வருவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ள நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் முக்கியமாக ட்விட் செய்துள்ளார். ஆளுநர்கள் மாற்றம் குறித்து அவர் போஸ்ட் செய்துள்ளார். நாடு முழுக்க மொத்தம் 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் தற்போது நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக ட்விட் செய்துள்ள ஓ பன்னீர்செல்வம் தமிழ்நாட்டைச் சேர்ந்த C.P.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவரது பணி சிறக்க எனது நல்வாழ்த்துகள், என்று கூறியுள்ளார்.

பாஜக வாழ்த்து
பாஜகவினரே இன்னும் சிபி ராதாகிருஷ்னனுக்கு தனது வாழ்த்தை தெரிவிக்கவில்லை. பல பாஜக தலைவர்கள் இன்னும் சிபிஆருக்கு வாழ்த்து சொல்லாத நிலையில் ஓ பன்னீர்செல்வம் முதல் ஆளாக வாழ்த்து சொல்லி இருக்கிறார். பாஜகவுடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தை காட்டிக்கொள்ளும் விதமாக ஓ பன்னீர்செல்வம் இப்படி போஸ்ட் செய்துள்ளார். பாஜக - எடப்பாடி நெருக்கமாகி வருவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ள நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் இந்த போஸ்டை செய்து இருக்கிறார் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்க தொடங்கி உள்ளனர்.
-
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications