‘கோட் வேர்டு’.. ‘ஒற்றுமை ஓங்கட்டும்’.. ஓ.பன்னீர்செல்வத்தின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!
சென்னை : அன்பும், அமைதியும் நிலவட்டும், ஒற்றுமை ஓங்கட்டும் எனக் குறிப்பிட்டு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் நிலவி வரும் நிலையில், இரு தரப்பினரும் எதிர் தரப்பினரை மாறி மாறி விமர்சித்து வருகின்றனர்.
இணைந்து செயல்படுவோம் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் அழைப்பை எடப்பாடி பழனிசாமி ஏற்காத நிலையில், இந்த மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், நாளை விநாயகர் சதுத்தி கொண்டாடப்படுவதையொட்டி, 'ஒற்றுமை ஓங்கட்டும்' எனக் குறிப்பிட்டு வாழ்த்துக் கூறியுள்ளார்.

குறியீடாக வாழ்த்து
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்ற கீதை உபதேசத்தை குறிப்பிட்டு சமீபத்தில் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில், 'விநாயகப் பெருமானின் அருளால், அன்பும், அமைதியும் நிலவட்டும் ஒற்றுமை ஓங்கட்டும்' எனக் குறிப்பிட்டு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துத் தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து
விநாயகர் சதூர்த்தியையொட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ஓம் எனும் ஓங்கார வடிவமாய், வினை தீர்க்கும் தெய்வமாய் விளங்கும் முழுமுதற் கடடிணம் ஸ்ரீவிநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தியை பக்தியுடலும், மன மகிழ்வுடனும் கொண்டாடி மகிழவிருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த "விநாயகர் சதுர்த்தி" நல்வாழ்த்துகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

சங்கடங்களை நீக்கி
சகல சங்கடங்களையும், தடைகளையும் நீக்க வல்ல விநாயகப் பெருமானை வணங்கிய பின்னர் எந்த செயலைத் தொடங்கினாலும், அந்தச் செயலை வெற்றியுடன் செய்வதற்குரிய மன உறுதியும், நம்பிக்கையும் தானாக ஏற்பட்டு, அந்தக் காரியம் தங்கு தடையின்றி சிறப்பாக முடியும் என்பதும்; அதன்மூலம் வாழ்வில் வளம் பெருகும், அறிவு மிகும், துன்பங்களுக்கு காரணமான வினைகள் அகலும் என்பதும் மக்களின் இறை நம்பிக்கையாகும்.

ஒற்றுமை ஓங்கட்டும்
இந்த நன்னாளில், வேண்டுவோர்க்கு வேண்டிய வரத்தைக் கொடுக்கும் கடவுளாகக் கருதப்படும் வேத விநாயகப் பெருமானின் அருளால், அனைவருக்கும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிட்டட்டும்; அன்பும், அமைதியும் நிலவட்டும்; நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும்; ஒற்றுமை ஓங்கட்டும்; இல்லந்தோறும் இன்பமும், மகிழ்ச்சியும் பொங்கட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது "விநாயகர் சதுர்த்தி" திருநாள் நல்வாழ்ந்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
-
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications