10 நிமிடம்.. பிரதமர் மோடியை தனியாக சந்திக்கும் ஓ பன்னீர் செல்வம்.. ஷாக்கில் எடப்பாடி..ஆஹா ட்விஸ்ட்!
சென்னை: சென்னையில் இன்று பல்வேறு திட்ட பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்க பிரதமர் மோடி வருகை தர உள்ளார். இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியை தனியாக சந்தித்து பேச ஓ பன்னீர் செல்வம் நேரம் கேட்ட நிலையில் 10 நிமிடம் வழங்கப்பட்டுள்ளது. இதனை எதிர்பாராத எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பிரதமர் மோடி-ஓ பன்னீர் செல்வம் சந்திப்பை உன்னிப்பாக கவனிக்க தொடங்கி உள்ளது.
சென்னையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சென்னை விமான நிலையத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். மேலும் சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் திட்டத்தையும் பிரதமர் மோடி இன்று பச்சை கொடியசைத்து திறந்து வைக்க உள்ளார்.

இதற்காக பிரதமர் மோடி இன்று ஹைதரபாத்தில் இருந்து விமானத்தில் மதியம் 2.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வர உள்ளார். அதன்பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்று ஏராளமான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியை தனித்தனியே சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் நேரம் கேட்டிருந்தனர். இருவருக்கும் நேரம் ஒதுக்கப்படாமலே இருந்தது. இதற்கிடையே தான் இன்று காலையில் புதிய தகவல் வெளியானது. அதாவது சென்னை வரும் பிரதமர் மோடியை விமான நிலையத்தில் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் எடப்பாடி பழனிச்சாமியும், முன்னாள் முதல்வர் என்ற முறையில் ஓ பன்னீர் செல்வமும் வரவேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இருப்பினும் இருவருக்கும் தனித்தனியே நேரம் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பிரதமர் நரேந்திர மோடியை தனியாக சந்தித்து பேச ஓ பன்னீர் செல்வத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 10 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு என்பது இரவு நேரத்தில் நடக்கிறது.
பிரதமர் மோடி அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துவிட்டு மைசூரு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வர உள்ளார். இந்த வேளையில் இரவு 7.30 மணிக்கு போல் ஓ பன்னீர் செல்வம், பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார் என்ற விபரம் வெளியாகி உள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஷாக்காகி உள்ளனர்.
அதாவது ஓ பன்னீர் செல்வத்தை பிரதமர் மோடி தனியாக சந்திக்க மாட்டார் என அவர்கள் நினைத்த நிலையில் தற்போது ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது ஓ பன்னீர் செல்வம் அதிமுக நிலவரம், தமிழக அரசியல் களம், தனக்கு ஏற்பட்ட துயரம் பற்றிய விபரங்களை பிரதமர் மோடியிடம் கூற வாய்ப்புள்ளது.
முன்னதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர் செல்வம் இருந்த நிலையில் அவரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராகி உள்ளார். மேலும் அதிமுக-பாஜக கூட்டணியில் தற்போது சுமூகமான உறவு இல்லாத நிலை இருக்கிறது. இந்நிலையில் தான் ஓ பன்னீர் செல்வம் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். இதனால் இந்த சந்திப்பை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உற்று கவனிக்க தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?











Click it and Unblock the Notifications