"நீட் தேர்வு ரத்து.. அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு தரும்.." ஓபிஎஸ் திட்டவட்டம்
சென்னை: நீட் தேர்வு ரத்து தொடர்பாக அரசு எடுக்கும் அனைத்து சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு அளிக்கும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு தர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. நீட் பாதிப்பு குறித்து ஏகே ராஜன் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் திமுக அரசு நீட் விலக்கு மசோதாவைத் தயார் செய்திருந்தது.
கடந்த செப். 13ஆம் தேதி தமிழக சட்டசபையில் இந்த மசோதா முழு மனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநரிடம் அனுப்பப்பட்டது.சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு, ஆளுநர் இந்த நீட் விலக்கு மசோதாவைத் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார்.

ஓபிஎஸ் அறிக்கை
இது தொடர்பாக ஆலோசனை நடத்த இன்று காலை 11 மணிக்குத் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இருப்பினும், இந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. இது தொடர்பாகப் பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அதிமுகவைப் பொறுத்தவரை நீட் தேர்வு ரத்து தொடர்பாக அரசு எடுக்கும் அனைத்து சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிக்கும் என்று அதில் அவர் கூறியுள்ளார்.

அனைத்துக் கட்சி கூட்டம்
அந்த அறிக்கையில் ஓ பன்னீர்செல்வம், "தங்களின் 3.2.2022 நாளிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். அதில், மருத்துவக் கல்வியில் சேருவதற்கான நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வழிவகை செய்யும் சட்ட முன்வடிவினை மறுபரிசீலனை செய்யும் பொருட்டு, மேதகு ஆளுநர் அவர்கள் தமிழ் நாடு அரசிற்குத் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், இது தொடர்பாகத் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் சட்டமன்ற அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை வழங்க, அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரை அனுப்பி வைக்குமாறு தாங்கள் கோரி உள்ளீர்கள்.

ஆதரவு தரும்
'நீட் தேர்வு ரத்து" குறித்த அதிமுகவின் கருத்துகள் ஏற்கனவே தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையிலும், 8.1.2022 அன்று நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. அதிமுகவை பொறுத்தவரை 'நீட்' தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. எனவே, 'நீட் தேர்வு ரத்து தொடர்பாக எடுக்கப்படும் அனைத்து சட்டப்படியான நடவடிக்கையையும் அதிமுக ஆதரிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
Recommended Video

விரைவில் சட்டசபை கூட்டத்தொடர்?
இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக தவிர பாஜக மற்றும் புரட்சி பாரதம் கட்சிகளும் கலந்து கொள்ளவில்லை. அனைத்துக் கட்சி கூட்டத்தில் நீட் விலக்கு தொடர்பாகத் தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் சட்ட முன்வடிவை நிறைவேற்றி, ஆளுநர் மூலம் மத்திய அரசுக்கு அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக விரைவில் சிறப்புச் சட்டசபை கூட்டத்தொடர் கூட்டப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications