அன்புமணி ஃபர்ஸ்டு.. ஓபிஎஸ் நெக்ஸ்டு.. பாஜக தந்த ட்விஸ்டு! திரௌபதி நிகழ்வில் அண்ணாமலை செய்த காரியம்
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணியின் வேட்பாளரான திரௌபதி முர்முவை ஆதரவு கேட்டு சென்னையில் கலந்துகொண்ட நிகழ்வில் ஓ.பன்னீர்செல்வம் காக்கவைக்கப்பட்டு அவருக்கு முன்பாக அன்புமணி ராமதாஸ் மேடையில் பேச அனுமதிக்கப்பட்டார்.
ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த 9 ஆம் தேதி அறிவித்தது.
இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் ஆளுநர் திரௌபதி முர்மு போட்டியிடுகிறார்.

சென்னை வந்த முர்மு
இந்த நிலையில் இன்று திரௌபதி முர்மு இன்று சென்னை வந்து கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினார். சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி ஆதரவு
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை உச்சத்தை தொட்டிருக்கும் இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக வந்து தங்கள் ஆதரவை பதிவு செய்து சென்றார்கள். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி முன்பே மேடையேறி திரௌபதி முர்முவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதன் பின்னர் மேடையிலும் அவர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவாக உரையாற்றினார்.

அவமதிக்கப்பட்டாரா ஓ.பி.எஸ்?
இந்த நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு முதல் அமர்வில் வாய்ப்பு அளிக்கப்பட்டு மேடையில் பழனிசாமி அமர வைக்கப்பட்டார். அதே நேரம் ஓ.பன்னீர்செல்வம் மேடையில் அமராமல் கீழே அமர்ந்திருந்தார். எடப்பாடி பழனிசாமி பேசிவிட்டு சென்ற பின்னர் ஓ.பன்னீர்செல்வம் பேச வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்ததாக அன்புமணி ராமதாஸ் மேடையில் பேச அழைக்கப்பட்டார்.

ஓ.பி.எஸ். பேச்சு
ஓ.பன்னீர்செல்வம் காத்திருப்பு அறையில் காக்க வைக்கப்பட்டிருந்த பின்னர், அவர் மூன்றாவது அமர்வில் பேசுவதற்காக அழைக்கப்பட்டார். அவர் நிகழ்வுக்கு வரும்போது அன்புமணி ராமதாஸ் மேடையில் பேசிக்கொண்டு இருந்தார். இதனை தொடர்ந்து மேடைக்கு கீழ் காத்திருந்த ஓ.பன்னீர்செல்வத்தை அண்ணாமலையில் நேரில் சென்று அழைத்து வந்தார். அன்புமணிக்கு பின்னர் மேடையேறிய ஓ.பி.எஸ். அதிமுக ஒருங்கிணைப்பாளராகிய நான் என்று கூறி பேசியது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications